டிவிட்டரில் உங்கள் தன்மை என்ன?

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.டிவிட்டரிலும் இது பொருந்தும் .

அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டிக்கூடியதாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை. அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம்.

கூட்டத்தில் பேசும் போது கைத்தட்டல்களை கொண்டு பேச்சின் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.ஆனால் தம் முன் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை கவனிப்பதன் மூலமே பேச்சின் தாக்கம் அவர்களிடத்தே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவதை நல்ல பேச்சாளருக்கான இலக்கணமாக சொல்லலாம்.

சரி டிவிட்டரில் செயல்படும் போது அதற்கான வரவேற்பை கணிப்பது எப்படி?பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை,மறுபதிவுகள் ஆகியவற்றை கொண்டு ஓரளவுக்கு டிவிட்டர் செல்வாக்கை ஊகிக்கலாம் என்றாலும் ஒருவரது டிவிட்டர் பதிவுகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளனவா என்று எப்படி தெரிந்து கொள்வது?

இந்த கேள்வியும் மற்றவர்கள் நம்முடைய குறும்பதிவுகளை சலிப்பு தருவதாக நினைத்துவிடக்கூடாது என்ற கவலையும் உள்ள டிவிட்டராளர்களுக்கு உதவுவதற்காக என்றே அமெரிக்க ஆய்வாளர்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு டிவிட்டர் பதிவுகள் குறித்து சக டிவிட்டராளர்களும் முன் பின் தெரியாதவர்களும் என்ன நினைக்கின்றனர் என்னும் அறிவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளனர்.

ஹூ கிவ்ஸ் ஏ டிவீட் என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் ‘எப்போதாவது உங்கள் டிவிட்டர் பதிவுகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று நினைத்துள்ளீர்களா’ என்று கேள்வி எழுப்பி உங்கள் பின்தொடர்பாளர்கள் மற்றும் இண்டெர்நெட்டிடம் இருந்து கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கல் என்று அழைப்பு விடுக்கிறது.

மிக எளிதாகவும் அதைவிட முக்கியமாக சுவார்ஸ்யமாகவும் இதனை சாத்தியமாக்குகிறது இந்த தளம்.

டிவிட்டர் பதிவுகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய விரும்பும் டிவிட்டர் பயனாளிகள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டவுடன் முதலில் தங்கள் பங்கிற்கு பின்தொடர்பாளர்களின் டிவிட்டர் பதிவுகள் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு நண்பர்களும் அறிமுக இல்லாதவர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள்.இதன் மூலம் டிவிட்டர் பதிவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன என தெரிந்து கொள்ளலாம்.இந்த கருத்துக்கள் டிவிட்டர் கருத்துக்கு நேரடி செய்தியாக வந்து சேரும்.

உங்களைப்போலவே உங்கள் நண்பர்களும் இந்த தளத்திற்கு வருகை த‌ரும் போது அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்ப‌தையும் தெரிந்து கொள்ளலாம்.

——-
http://needle.csail.mit.edu/wgat/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “டிவிட்டரில் உங்கள் தன்மை என்ன?

  1. எங்கிருந்து பாஸ் புடிகிறிங்க புது தளமா?
    அதுவும் எல்லா தளமும் சுவாரசியமானதா இருக்கு….

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு நன்றி நண்பரே.எமக்கு தொழில் இணையத்தில் உலாவுவது.நல்ல தளங்களையும் தகவல்களையும் பகிர்வது.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.