பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இணைய உலகில் பேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. பேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும்  75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிலும் சரி, இணையத்தில் நம்மை கவரும் தகவல்களை பிடிச்சிருக்கு என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. லைக் வசதி மூலம் விரும்பும் தகவலை பொதுவாக பேஸ்புக் நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்தலுக்கான ஷேர் வசதி, பகிர்தலுக்கான கருத்துடன் குறிப்பிட்ட இடத்தில் விரும்பிய தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.அறிமுகமான நாள் முதல் இந்த சின்னங்களின் மீது கை வைத்திராத பேஸ்புக் தற்போது இவற்றை முதல் முறையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிய வடிவமைப்பில் லைக் சின்னத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்டை விரல் காணாமல் போய் அதற்கு பதிலாக பேஸ்புக்கின் அடையாளமான எப் ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளது. ஷேர் சின்னமும் இவ்வாறே எப் எழுத்துடன் அமைந்துள்ளது. துடிப்பான நீல நிற பின்னணியில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளையுமே அருகருகே பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாற்றத்தை பேஸ்புக் பரிசோதித்து வந்த நிலையில் இப்போஉது அதிகாரபூர்வமாக இந்த மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சின்னம் தானாக புதுப்பிக்கப்பட்டு விடும் என்கிறது பேஸ்புக்

சின்ன மாற்றம் தான்,ஆனால் மிகவும் முக்கியமானது. காரணம் இரண்டு சின்னங்களுமே இணையவாசிகளின் மனதில் விருப்பத்திற்கான அடையாளமாக பதிந்துவிட்டது. புதிய வடிவமைப்பு சுலபமானதாக இருக்கவில்லை. பல்வேறு உலாவிகள் மற்றும் எண்ணற்ற இணைய வடிவங்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக,பளிச்சென தோன்றும் வகையில் மிக கவனமாக இவை உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இணையத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்தலை மேம்படுத்த புதிய வடிவமைப்பு உதவும் என்று பேஸ்புக் எதிர்பார்க்கிறது. ஆனால், லைக் சின்னத்தில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பது பேஸ்புக் அபிமானிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தலாம்.

மாற்றம் பற்றி பேஸ்புக்கின் அதிகாரபூர்வ விளக்கம் இங்கே: https://developers.facebook.com/blog/post/2013/11/06/introducing-new-like-and-share-buttons/

==========

நன்றி; தமிழ் இந்து இணைய பதிப்பு.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.

  1. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே. இணைய செய்திகளை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா? கால வரையுள்ள தகவல்களை பகிர்வதில் எனக்கு தயக்கம் உள்ளது. விதிவிலக்காவே சில முக்கிய நிகழ்வுகளை பகிர்கிறேன். குறிப்பிட்ட இந்த செய்தி தமிழ் இந்து இணைய பதிப்பிற்காக எழுதியது.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. Jayaraman S.m.

    DON’T SEND ME UR MESSAGES

    Reply

Leave a Comment

Your email address will not be published.