சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.

firefoxஇணையவாசிகளுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் பயர்பாக்ஸ் உலாவி( பிரவுசர்) இப்போது  சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு இலக்காகி இருக்கும்  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்துக்கு உடவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்துபவர் என்றால் , இந்த கோரிக்கையை கவனித்திருக்கலாம்.பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்தும் போது இது போன்ற செய்திகள் வழ்க்கமாக தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.முகப்பு பக்கத்தில் தேடல் கட்டத்தின் அருகே இந்த செய்திகளை பயர்பாக்ஸ் பாகிர்ந்து கொள்ளும். சில நாட்கள் முன்வரை, இணைய கண்காணிப்பை கண்காணிக்கும் லைட்பீம் வசதியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் எனும் வாசகம் இதில் இடம்பெற்றிருந்தது.

பொதுவாக இந்த பகுதியில் பயர்பாகஸ் தொடர்பான தகவலகளே இடம்பெறும். தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் கோர சூறாவளியால பெரும் பாதிப்பு ஏற்படுள்ள நிலையில் அங்கு நேசக்கரம் நீட்டி வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவுங்கள் எனும் பொது நல கோரிக்கை இடம்பெற்றுள்ளது. 9 ஆண்டுகளாக எங்களை ஆதரித்து வருவதற்கு நன்றி ,இப்போது பிலிப்பைன்சுக்கும் உதவுங்கள் என்று தெரிவிக்கப்பட்டு அருகிலேயே செஞ்சிலுவை சங்க தளத்திற்கு இணைப்பு தரப்பட்டுள்ளது.

கூகுல் தேடல் கட்டத்தின் மீது அவப்போது டூடுல் சித்திரங்களை வெளியிட்டு முக்கிய நிகழ்வுகளை கொண்டாடி வருவதற்கு நிகராக பயர்பாக்ஸ் தனது முகப்பு பக்க தேடல் கட்டத்தை பயனுள்ள செய்திகளை பகிர்ந்து கொள்ள பயன்படுத்து வருகிரது. தற்போது பொது நலன் நோக்கிலும் இது கை கொடுக்கிறது.

கூகுல் கூட தனது லோகோ அமைப்பை இது போல பேரிடர் கால நிதி திரட்டலுக்கு பயன்படுத்தலாம் இல்லையா?

நேசக்கரம் நீட்ட பயர்பாக்ஸ் முகப்பு பக்கத்திற்கு செல்லவும்.

 

பி.கு:

ஒரு சோதனை முயற்சியாக வலைப்பதிவின் தோற்றத்தை மாற்றியுள்ளேன். புதிய அமங்களை விரைவில் படிப்படியாக சேர்க்க உள்ளேன். வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் குறித்து தங்கள் கருத்துக்களை அறிய ஆரவமாக உள்ளேன். ஆலோசனை தாருங்கள்.ஆதரவை தொடருங்கள்.-அன்புடன் சிம்மன்

2 thoughts on “சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *