ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது  செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன. இவை தவிர வாட்ஸ் அப் போன்ற பிரபலமான செயலிகளும் இருக்கின்றன. ரெயில் சேவைக்கான செயலிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகள் என்று பயனுள்ள செயலிகளை அடுக்கி கொண்டே போகலாம். இவை தவிர புதிய புதிய செயலிகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. சும்மாவா என்ன? ஆண்ட்ராடு போன்களுக்காக மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கட்டணமில்லாமல் பயன்படுத்தக்கூடியவை. அதாவது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் மற்ற செயலிகளை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்.

செயலியின் பயன்கள்!

பயனுள்ள செயலி என்றால் அவற்றை கட்டணம் செலுத்தி வாங்கவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட செயலி பயனுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? செயலிகளை அறிமுகம் செய்யவும் அவற்றை விமர்சனம்  செய்யவும் இணையதளங்கள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு செயலிகளின் இருப்பிடமான கூகுல் பிலே ஸ்டோரிலே கூட செயலிகள் தொடர்பான விமர்சன கருத்துக்களை படித்து பார்க்கலாம் தான்.

ஆனால் என்ன தான் இருந்தாலும் ஒரு செயலியை பயன்படுத்தி பார்ப்பது போல வருமா? குறிப்பிட்ட ஒரு செயலியை தரவிறக்கம் செய்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பயனாளிகளே தெரிந்து கொள்ள முடிந்தால் நன்றாக தான் இருக்கும். அதிலும் கட்டண செயலிகளை வாங்கும் முன் அவற்றின் பயன்பாட்டை பரிசோதித்து பார்த்து விடுவது இன்னும் நல்லது. இதற்கு செயலியை வாங்கும் முன் அவற்றை பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இது சாத்தியமா ?

அமேசான் தரும் வசதி!

ஆண்டார்ய்டு செயலிகளுக்காக அமேசான் நிறுவனம் அப் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சரவதேச அளவில் செயல்படும் இந்த வசதி கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் செயலிகளை வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கலாம். ஆனால் கூகுல் பிலே ஸ்டோரில் இந்த வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கும் வசதி இல்லை. அதனால் என்ன, நீங்கள் விரும்பினால் , கூகுல் பிலே ஸ்டோரிலும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்க்கலாம். இதற்கு அழகான குறுக்கு வழி இருக்கிறது.

பரிசோதிக்க குறுக்கு வழி!

எந்த செயலியை பரிசோதிக்க விரும்புகிறீர்களோ அந்த செயலியை காசு கொடுத்து வாங்குவது தான் அந்த வழி.

காசு கொடுத்து வாங்கிய பின் செயலி திருப்தி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். அதை வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விடலாம் தெரியுமா? இப்படி பணத்தை திருப்பி பெறும் வசதி தரப்பட்டுள்ளது. கட்டண செயலிகளை இவ்வாறு திருப்பி ஒப்படைத்து பணத்தை திருப்பி தரும் வசது கூகுல் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வச

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

  1. வெள்ளியங்கிரி

    பயனுள்ள தகவல் நன்றி சிம்மன் …

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே

      Reply

Leave a Comment

Your email address will not be published.