தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!

படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அவ்வளவு தான் அதை வேறு யாரும் படிக்க முடியாது. இப்படி தானாகவே அழித்துக்கொள்ளும் மெயில் தேவையா என்று இனியும் அப்பாவித்தனமாக கேட்பதற்கில்லை. இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படு காலம் இது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ அமைப்பு பொதுமக்களின் இமெயில்களையும் கண்காணித்து வருவது பற்றி ஸ்நோடன் குண்டுக்கு பிறகு நிறையவே தெரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆக , இமெயில்களின் சுவடு எந்த விதத்திலும் இருக்க கூடாது என நினைத்தால் இப்படி தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்களை அனுப்பி வைக்கலாம். இமெயில் மட்டும் அல்ல குறுஞ்செய்தியாகவும் அனுப்பலாம். ஆனால் நம்நாட்டு செல்போன் சேவை இணைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றாலும் கவலையில்லை ,செய்தியை டைப் செய்து விட்டு அதற்கான இணைப்பை எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு முறை மட்டுமே படிக்ககூடி எந்த தகவல் பரிமாற்றத்துக்கும் இதை பயன்படுத்தலாம்.
இந்த சேவையை படிக்கும் போது புகைப்பட பிரியர்களுக்கு ஸ்நேப்சேட் நினைவுக்கு வரலாம். செல்போன்களில் பார்த்தவுடன் தானாக மறைந்து விடும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த சேவை தான் இப்போது இளசுகளின் பேவரேட். அந்த வரிசையில் படித்தவுடன் தானாக மறைந்துவிடும் மெயிலும் இனி பிரபலமாகலாம்.

இணையதள முகவரி: https://secretink.co/
பி.கு: படித்தவுடன் அழிக்கப்பட்டு விடும் ரகசிய மெயில் சேவைகள் புதிதல்ல. ஆனால் ஸ்நோடன் அம்பலமாக்கிய அந்தரங்க மீறலுக்கு பிறகு தான் இவற்றின் முக்கியத்துவம் புரிகிறது.

————

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப;http://cybersimman.wordpress.com/2012/05/11/email-16/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!

  1. Pingback: விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.