பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்.

அந்த சிறுவன் பள்ளியில் தனக்கு ஒருவர் கூட நண்பர் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டான். அதனால் தனது பிறந்த நாளை கூட கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. இன்று அந்த சிறுவனுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அவனது பிறந்த நாளை கொண்டாட ஆர்வத்துடன் உள்ளனர். எல்லாம் பேஸ்புக்கால் நிகழ்ந்த மாயம் தான்.

அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வசிக்கும் அந்த சிறுவனின் பெயர் காலின்சுக்கு பத்து வயதாகிறது. அடுத்த மாதம் அவன் தனது 11 வது பிறந்த நாளை கொண்டாடுகிறான். காலின்சின் அம்மா ஜெனிபர் கன்னிங்ஹாம் சில வாரங்களுக்கு முன் மகனிடம் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி மகனுடன் பேசியிருக்கிறார். அப்போது காலின்ஸ் தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என கூறியிருக்கிறான். அதற்கு காலின்ஸ் கூறிய காரணம் அம்மா ஜெனிபரை உலுக்கி விட்டது. சிறுவன காலின்ஸ் ஆட்டிசம் போன்ற ஒருவிதமான குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவனால் மற்ற பிள்ளைகள் போல சகஜகமாக பழக முடியாது. இதன் காரணமாக காலின்சுடன் மற்ற பிள்ளைகள் ஒட்டாமலே இருக்கின்றனர். தினமும் பள்ளியில் காலின்ஸ் மதிய உணவை கூட தனியே தான் சாப்பிடுவான். எனவே வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாலும் ,ஒருவர் கூட நண்பர் என வர வாய்ப்பில்லை என நினைத்த காலின்ஸ் தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டமே வேண்டாம் என் கூறியுள்ளான். காலின்சின் தாய் ஜெனிபர் நிச்சயம் இதை கேட்டு நிச்சயம் உள்ளுக்குள் மருகியிருக்க வேண்டும். மகனை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த அவரது தாயுள்ளம் துடித்திருக்க வேண்டும். வார்ததைகளாலோ பரிசுகளாலோ இது சாத்தியம் இல்லை என அவர் நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ அவர் தன் மகன் காலின்சின் 11 வது பிறந்த நாளை விஷேசமானதாக்க சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் உதவியை நாட தீர்மானித்தார். எல்லோரும் நணபர்களை தேடிக்கொள்ளவும் நட்புணர்வை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் அவர் காலின்சுக்காக, ஹாப்பி பர்த் டே காலின்ஸ் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை அமைத்தார். ” மகனின் 11 வது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட ஒரு தாய்க்கு உதவுதற்காக அமைக்கப்பட்ட பக்கம்’ எனும் அறிமுகத்துடன் காலின்சின் நிலை பற்றியும் இந்த பக்கத்திற்கான நோக்கம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

எப்போதும் தனிமையில் இருக்கும் காலின்சுக்கு இந்த பேஸ்புக் பக்கம் மூலம் பலரும் தங்களது நல்லெண்ணம் மற்றும் வாழ்த்துக்களை அனுப்பி வைத்து அவனது பிறந்த நாளை மகிழ்ச்சியானதாக மாற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் முதல் பதிவில் அவர் குறிப்பிட்டுருந்தார். என்னோடு சேர்ந்து காலின்சின் பிறந்த நாளை விஷேசமாக ஆக்குங்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முகம் தெரியாத யாரேனும் சிலர் தன மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். அதிக பட்சமாக சில லைக்குகளையும் அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவரே எதிர்பார்க்காத விதமாக இந்த பேஸ்புக் பக்கத்திறகு ஆதரவு குவிந்து காலின்சுக்கு வாழ்த்துக்கள் குவியத்துவங்கின. பிப்ரவரி 2 ந் தேதி இந்த பக்கம் உருவாக்கப்பட்டது.முதல் ஒரு மணி நேரத்தில் 13 லைக்குகள் கிடத்திருந்தன. ஜெனிபர் இதற்கே மகிழ்ந்து போனார். வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரி
வித்துக்கொண்டவர் தொடர்ந்து காலின்ஸ் பற்றிய விவரங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்திருந்தவர் இந்த பக்கத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டிருந்தார். பல்ரும் அதை செய்திருக்க வேண்டும். மறுநாள் லைக்குகளின் எண்ணிக்கை 100 ஐ தொட்டது. 101 லைக்குகள்
, காலின்ஸ் நேசிக்கப்படுவதை நினைததால் நெகிழ்ச்சியாக இருக்கிறது என ஜெனிபர் மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார். 100 லைக்களை நினைத்தே மகிழ்ந்தவர் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு பத்தாயிரத்தை கடக்க கூடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. சிறுவனின் கதை பலரது உள்ளத்தை தொட்டதால் உலகம் முழுவதிலும் இருந்து முன் பின் தெரியாதவர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை லைக் வடிவில் தெரிவித்தனர்.

ஒரு சிறுவனின் பிறந்த நாளை மகிழ்ச்சியானதாக்க இப்படி பத்தாயிரம் பேருக்கு மேல் பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த நெகிழ்ச்சியான செய்தியை பிரபலமான டெய்லி மெயில் நாளிதழ் செய்தியாக வெளியிட்டுருந்தது. காலின்சின் பேஸ்புக் பக்கத்தில் 13,000 லைக்குகள் இருப்பதாக டெய்லி மெயில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இப்போது சிறுவன் காலின்சுக்கான லைக்குகள் 19 லட்சத்தை தாண்டியிருக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அந்த பக்கத்திற்கு வருகை தந்து காலின்சுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்த ஆதரவால் காலின்சின் அம்மா ஜெனிபர் திக்குமுக்காடி போயிருக்கிறார். ஆயிரக்கணக்கில் குவிந்த லைக்குகள் லட்சக்கணக்கில் மாறியிருக்கிறது.

தனிமையில் இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நினைத்த சிறுவன் காலின்சுக்கு இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 லட்சம் நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். பெரும்பாலானோர் லைக் தெரிவிப்பதோடு நிற்கவில்லை. சிறுவனுக்கு வாழ்த்து செய்தியையும் பதிவு செய்துள்ளனர். அந்த வாழ்த்துக்களில் பரிவும் மனித நேயமும் வெளிப்படுகின்றன. சிறுவனின் கதை எல்லோரது இதயத்தையும் தொட்டிருக்கிறது. காலின்ஸ் போன்ற விஷேசமான குழந்தைகள் கொண்ட அம்மாக்கள் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். சிறு வயதில் பல்வேறு காரணங்களுக்காக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர்களும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனிடையே பலர் வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப்பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த உலகில் அன்புக்கும் ஆதரவுக்கும் குறைவில்லை என்பதை உணர்த்தும் இந்த பேஸ்புக் பக்கம் பற்றி இன்னமும் காலின்சுக்கு தெரியாது. பிறந்த நாள் பரிசாக இந்த பக்கத்தை காண்பித்து அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டும் என்று தாய் ஜெனிபர் விரும்புகிறார்.

மார்சி 9 ல் காலின்ஸ் பிறந்த நாள் வரும் போது அந்த அதிசய சிறுவனுக்கு பிரம்மாண்டமான ஆச்சர்யம் காத்திருக்கிறது.

காலின்சுக்கான பேஸ்புக் பக்கம்.; https://www.facebook.com/Coliniseleven?hc_location=timeline

————

நன்றி ; தமிழ் இந்து நாளிதழ்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.