காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

tedகாகிதத்தை விதவிதமாக மடித்து அழகான கலைப்பொருட்களையும் , விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கலாம். ஆனால் காகிதத்தில் மைக்ராஸ்கோப்பை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மனு பிரகாஷ் எனும் இளம் விஞ்ஞானி காகித மைக்ராஸ்கோப்பை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். பெயரை பார்த்ததுமே இந்திய பெயராக இருக்கிறதே என வியக்க வேண்டாம், மனு நம்மூர்காரர் தான். உத்தரபிரதேசத்தின் மீரட்டைல் பிறந்தவர் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்து முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்குள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயோஎஞ்சினியரிங் பேராசிரியராக இருக்கிறார்.

மனு பிரகாஷுக்கு டாலர்களை குவிப்பதை விட ஆய்வில் தான் ஆர்வம் அதிகம். அதிலும் நவீன தொழில்நுட்பத்தை ஏழைகள் பயன்பாட்டிற்கு ஏற்ப எளிமையாகவும் , செலவு குறைந்தாதாகவும் ஆக்கித்தரக்கூடிய வழிகளை கண்டறியும் ஆய்வு.

இத்தகைய நோக்குடன் மனு பிரகாஷ் மற்றும் அவரது படையினர் ( சீடர்கள்) ஈடுபட்டு வந்த ஆய்வின் பயன் தான் இந்த காகித மைக்ராஸ்கோப். மனு இதற்கு போல்ட்ஸ்கோப்( Foldscope)பெயரிட்டுள்ளார்.
சட்டை பையில் போட்டுக்கொள்ள கூடிய அளவுக்கு இருக்கும் அவரது காகித மைக்ராஸ்கோப்பை கொண்டு மலேரியா போன்ற பரவலாக காணப்படும் நோய்க்கிருமிகளை கண்டறிந்து விடலாம். அதோடு மலிவு விலையில் இவற்றை தயார் செய்து விநியோகமும் செய்யலாம்.

மனு பிரகாஷ் இந்த காகித மைக்ராஸ்கோப்பின் அருமையை விளக்கும் அழகை கேட்டால் இன்னும் வியப்பாக இருக்கும். இந்த மைக்ராச்கோப்பை தண்ணீரில் வீசி எறிந்தாலும் சரி, மூன்றாவது மாடியில் இருந்து வீசி எறிந்தாலும் சரி, இல்லை காலில் போட்டு மிதித்தாலும் ஒன்றுமே ஆகாதாம். அதன் பிறகு தூசி மட்டும் தட்டிவிட்டு இந்த மைக்ராஸ்கோப்பை பயன்படுத்தலாம் என்கிறார் மனு பிரகாஷ். அந்த அளவுக்கு எதையும் தாங்கும் இதயம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் இல்லாத ஏழை நாடுகளின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் பயன்படுத்தப்பட உருவாக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு எந்த பாதிப்பையும் தாங்கக்கூடியதாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அறிமுகமாகி உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் காகித மடிப்புக்கலையான ஆர்கமியின் அடிப்படையில் இந்த மைக்ராஸ்கோப் அமைந்திருக்கிறது. இதனால் தான் குறைந்த செலவில் தயார் செய்வதும் சாத்தியமாகியிருக்கிறது. எந்த சூழலிலும் செயல்படகூடியதாகவும் இருக்கிறது. சும்மா பத்து நிமிடத்தில் பொட்டலம் மடிப்பது போல இதை தயார் செய்து விடலாம். இதில் நகரக்கூடிய சிக்கலான பாகங்கள் எதுவும் கிடையாது. தனியே மின்சக்தி போன்றவையும் தேவையில்லை. பாட்டரி முதல் கொண்டு லென்ஸ் வரை எல்லாமே காகிதத்தில் பொருததப்பட்டுள்ளது.ted2

சோதனைக்கூடங்களில் பார்த்த நேர்த்தியான சாதனமான மைக்ராஸ்கோப்பை இப்படி சட்டை பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு எளிமையானதாக உருவாக்கி இருப்பது சாதனை தான். இந்த சாதனையின் பின்னே இருப்பது பிரத்யேகமான வட்டவடிவ லென்ஸ் என்கிறார் மனு பிரகாஷ். பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த லென்சை காகித மைக்ராஸ்கோப் நடுவே பொருத்தி பயன்படுத்தலாம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லக்கூடியது போல இந்த லென்ஸ் மலிவானதே தவிர, பார்க்கப்படும் பொருளை 2,000 மடங்கு பெரிதாக்கி காட்டக்கூடியது. ஆகவே மலேரியா, டைபாய்டு போன்ற நோய் கிருமிகளை அடையாளம் கண்டுபிடித்துவிடலா

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

  1. Pernbarajah

    well-done.continue

    Reply
    1. cybersimman

      thanks. this well done is to manu.

      simman

      Reply

Leave a Comment

Your email address will not be published.