வலைப்பதிவு பயிற்சி ஏன்?

copyபுதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவளித்தவர்களுக்கு நன்றி.

இந்த அறிவிப்பு உங்களில் பலருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். பல கேள்விகளையும் எழுப்பியிருக்கும். வலைப்பதிவுக்கு பயிற்சி தேவையா? என்பதில் துவங்கி ஏற்கனவே வலைப்பதிவு பயிற்சிகள் இருக்கும் போது புதிதாக தேவையா? என்பது வரை பல கேள்விகள் எழலாம். உண்மை தான் வலைப்பதிவு பயிற்சிகள் அநேகம் இருக்கின்றன . ( தமிழிலேயே கூட அழகான வழிகாட்டுதல்கள் எழுதப்படுள்ளன). ஆனால் வலைப்பதிவுக்கு என்று அநேக பயிற்சி திட்டங்கள் இருப்பதும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதும் தான் இந்த முயற்சிக்கு காரணம்.
ஆம், ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டால் வலைப்பதிவு சார்ந்த வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வியக்க வைக்கின்றன. பல பதிவர்கள் புதியவர்களுக்கு வழிகாட்டும் வகையில் முற்றிலும் புதிய கோணத்தில் பாடங்களை வழங்குகின்றனர். அதிலும் குறிப்பாக காபிபிளாகர் போன்ற தளங்கள் வலைப்பதிவு உலகம் எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

தொடர்ந்து வலைப்பதிவு செய்வதற்காக ஊக்கம் அளிக்கும் வகையிலும், மனத்தடைகளை வெல்வதற்கான வழிகளையும் உணர்த்தும் வலைப்பதிவு பாடங்கள் பற்றி என் நண்பர் என்னுடன் சலிக்க சலிக்க பேசி ஒரு பதிவராக எனக்கு இந்த திசையில் யோசிக்க ஊக்கம் அளித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் இணைய உலகில் இமெயில் மற்றும் வீடியோ சார்ந்த பயிற்றுவித்தலும் பிரபலமாகி கொண்டிருப்பதை கவனிக்கலாம். இணைய வழி பயிற்சியின் தேவையையும் அருமையையும் பலரும் உணர்ந்து வருகின்றன.
யோசித்துப்பார்க்கும் போது தமிழில் வலைப்பதிவு பற்றி ஒரு அலட்சியமும் , சக்ஜமான தன்மையும் இருப்பது புரிகிறது. இந்த நிலையில் புதியவர்களுக்கான வலைப்பதிவு வழிகாட்டி பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி. ஏற்கனவே முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஆறு மாதங்களாக பாடங்களை எழுதி வருகிறேன்.

மேலும் என் பத்திரிகையாளர் நண்பர் அடிக்கடி சொல்வது போல் ஒரு பத்திரிகையாளனாக எனது பணி அறிதலும் அறிவித்தலுமே என்பதில் நம்பிக்கையில் ஊக்கமும் எனக்கு உண்டு. அந்த வகையில் பதிவுலகில் எனக்குள்ள அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான வேட்கையும் இதன் பின்னே இருக்கிறது.
நான் இணையத்தின் ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். என்னுடன் பேசும் எவருடனும் ஏதாவது ஒரு கட்டத்தில் இணையத்தை அவர் பயன்படுத்தக்கூடிய விதம் பற்றி உற்சாகமாக பேசுவேன். வலைப்பதிவு துவங்கலாமே என சொல்வேன்.
அந்த ஆர்வமே என்னை இயக்குகிறது.

இந்த வலைப்பதிவு பாடம் பலவிதங்களில் புதிய கோணத்தில் இருக்கும். இதன் பிரதான நோக்கம் புதியவர்களை ஈர்ப்பது மட்டும் அல்ல, ஆர்வத்துடன் ஆரம்பித்து பல காரணங்களால் பாதியில் பதிவை விட்டுச்செல்லும் விபத்தை தவிர்த்து தொடர்ந்து வலைப்பதிவில் ஈடுபட ஊக்கம் அளிப்பது.
மேலும் இன்னும் வலைப்பதிவின் வலைக்குள் வராமல் இருக்கும் , எதிர்காலத்தில் சிறந்த வலைப்பதிவர்களாக விளங்க கூடிவர்களுக்கு உதவுவதும் இதன் முக்கிய நோக்கம்.

இந்த பாடங்களுக்காக பலவித திட்டங்களும் யோசனைகளும் வைத்துள்ளேன். அவற்றில் முக்கியமானது உங்களின் பங்களிப்பு! அதனால் தான் வலைப்பதிவு தொடர்பாக் உங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேட்டிருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன் வைக்கிறேன். வலைப்பதிவு தொடர்பாக உங்கள் மனதில் உள்ள கேள்விகள் மற்றும் நீங்கள் எதிர்கொண்ட கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இது இந்த பாடங்களை மேலும் செழுமையாக்க உதவும். இயலுமாயின் உங்கள் நண்பர்களிடமும் கேட்டுச்சொல்லுங்கள்.

இந்த பயிற்சிக்காக தனி வலைப்பதிவு அமைத்துள்ளேன். (http://www.valaipayirchi.wordpress.com/ ) அதில் விரைவில் பாடங்களை பகிரவுள்ளேன். பாடங்கள் இமெயில் மூலம் பகிர உள்ளேன்.எனவே ஆர்வம் உள்ளவர்கள் இமெயில் முகவரியை சமர்பித்து விருப்பம் தெரிவிக்கலாம்.

ஆதரவையும் ஆலோசனைகளையும் நாடுகிறேன்.

அறிமுகத்திற்காகவே இந்த பதிவுகளை இங்கே எழுதிகிறேன். விரைவில் வலைப்பதிவு பயிற்சிக்கான வலைப்பதிவிலேயே பகிர்ந்து கொள்வேன். மற்றப்டி இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்க்கும் வழக்கமான அம்சங்களான சிறந்த இணைதள அறிமுகங்களும் , இணைய போக்குகள் ,இணைய நிகவுகள் ,இணைய ஆளுமைகள் பற்றிய பதிவுகளும் தொடரும்.

அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

5 Comments on “வலைப்பதிவு பயிற்சி ஏன்?

  1. புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தங்களது வலைப்பூ உள்ளது,
    வாழ்த்துக்கள்.

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி. தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் ஆற்றல் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் ஒரு நீட்டிப்பே வலைப்பதிவு பயிற்சி. ஏதேனும் கேள்விகள் உஙக்ள் மனதில் உண்டா?

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. இராவணன்

    1. நம் பதிவை அதிகமானவர்களிடம் சென்றடையச் செய்யும் யுக்திகளை கூறினால் நல்லது.

    Reply
    1. cybersimman

      நிச்சயமாக !. இதற்கென வழக்கமான பின் பற்றப்படும் உத்திகளுடன் மேலைநாட்டு பதிவர்களால் கடைபிடிக்கப்படும் லிஸ்ட் பில்டிங் போன்ற உத்திகளையும் சுட்டிக்காட்ட இருக்கிறேன்.
      அன்புடன் சிம்மன்

      Reply
    2. cybersimman

      இது பதிவர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. நிச்சயமாக இதையும் முக்கிய அம்சமாக பயிற்சி கொண்டிருக்கிறது. இதற்கான வழிகளை பாடமாக எதிர்பார்க்கலாம்.

      அன்புடம் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.