அருமையான ஆண்ட்ராய்டு விளையாட்டுகள் !

ஸ்மார்ட்போன் கையில் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கேம்களை ஆட வேண்டியிருக்கிறது எனும் அலுப்பு இருக்கிறது. ஒரு மாற்றத்திற்கு இந்த அருமையான ஆன்லைன் விளையாட்டுகளை ஆடிப்பாருங்கள். இந்த பட்டியலில் இலக்கியம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டும் இருக்கிறது;

ஆங்ரி பேர்ட்ஸ் ஸ்டார்வார்ஸ்
ஆங்ரிபேர்ட்ஸ் கேமை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கையில் கிடைதத ஸ்மார்ட்போனில் ஆங்ரி பேர்ட்சை ஆயிரக்கணக்கான முறை இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கான முறை விளையாடி மகிந்திருப்பீர்கள். ஆங்ரிபேர்ட்ஸ் கேமில் பல வகை இருப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவற்றில் அசத்தலானது ஆங்கிபேர்ட்ஸ் ஸ்டார்வார்ஸ் கேம். சுட்டிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டுடன் புகழ்பெற்ற திரைப்பட வரிசையான ஸ்டார் வார்ஸ் பிரபஞ்சத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. ஆங்ரி பேர்ட்சில் அறிமுகமான அத்தனை அம்சங்களையும் இதில் ஸ்டார் வார்ஸ் சூழலில் பயன்படுத்திப்பார்க்கலாம். ஸ்டார் வார்ஸ் ஆயுதங்களையும் பயன்படுத்தலாம். லைட்சேபர் போன்ற ஆயுதங்களை ப்யன்படுத்துவது புதுமையாக இருக்கும். காலெக்சியை காக்கும் பொறுப்பு என்றால் சும்மாவா? 200 க்கும் மேற்பட்ட லெவல்களில் அசர வைக்கிறது. ஆங்ரி பேர்ட்சை உருவாக்கிய ரோபியோ நிறுவன, 2012 ல் உருவாக்கிய வடிவம் இது. ஆண்ட்ராய்டில் விளையாடலாம் : https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirdsstarwars.ads.iap

டிராப்
இதுவும் ஆண்ட்ராய்டு போனுக்கான கேம். ரொம்ப சிம்பிளான கேம். ஆனால் எல்லா சிம்பிளான கேமை போலவும் இதை விளையாடி பார்த்தால் தான் இதன் அருமை தெரியும். டிராப் கேமில் போனை அப்படியே சாய்த்தபடி எம்பி குதிக்கும் சின்ன பந்தை வரிசையாக அதற்குறிய இடைவெளியில் விழச்செய்ய வேண்டும். போனின் ஆக்சிலரோமீட்டரை சார்ந்த உருவாக்கப்பட்ட விளையாட்டு. கொஞ்சம் மெதுவாக செயல்பட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். ஒல்லே எனும் சப்ட்வேர் டவலப்பர் தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கிய விளையாட்டு இது. ஆண்ட்ரய்டில் டவுண்லோடு செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.infraredpixel.drop

—-
டெட்ரிஸ்
கம்ப்யூட்டர் விளையாட்டில் ஆர்வம் இருக்கும் எவருக்கும் பரிட்சயமான விளையாட்டு இந்த டெட்ரிஸ். ரொம்ப பழைய விளையாட்டும் கூட. வெள்ளி விழா கண்ட இதன் பூர்வீகம் ரஷ்யா. வரிசையாக வந்து விழும் வெவேறு வடிவான, பல வண்ண சட்டங்களை அவற்றுக்கு உரிய இடத்தி பொருத்தி முழுமையான தோற்றத்தை உருவாக்க வேண்டும். இதன் பின்னணி இசையும் பிரத்யேகமானது. இந்த பிரபலமான கேமை இப்போது போனில் ஆடலாம். ஆன்லைனிலும் ஆடலாம். பல கட்டங்கள் உண்டு. விவரங்களுக்கு : http://tetris.com/

———-
இலக்கிய கேம்

உங்களுக்கு ஆங்கிலத்தில் கதைப்புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் ஹக்லேபெரி ஃபின் (Huckleberry Finn ) பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். பிரபல எழுத்தாளர் மார்க் டுவைன் உருவாக்கிய இந்த சுட்டிநாயகன் கதையை நீங்கள் படித்தி ரசித்திருக்கலாம். இல்லை என்றாலும் பரவாயில்லை Adventures of Huckleberry Finn நாவலை ஒருமுறை படித்துப்பாருங்கள். சொக்கிப்போவீர்கள். அது மட்டும் அல்ல இந்த நாவல் பிடித்திருந்தால் அதை அடிப்படியாக கொண்ட கேம்களையும் ஆடிப்பார்க்கலாம். லேர்னிங்க்கேம்ஸ்பார்கிட்ஸ் இணையதளம் இந்த நாவலை அடிப்படையாக கொண்ட பல் அழகான விளையாட்டுகளுடன் உங்களை சவாலுக்கு அழைக்கிறது. ஹக்லேபெரி ஃபின் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என ஒரு கைப்பார்த்து விடலாம். கேம் ஆடியது போலவும் இருக்கும் ,அதே நேரத்தில் வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளலாம். கலிவர்ஸ் டிராவல் உள்ளிட்ட நாவல் சார்ந்த விளையாட்டுகளும் கூட இந்த தளத்தில் இருக்கிறது தெரியுமா?
விவரங்களுக்கு: http://www.learninggamesforkids.com/literature-games/huckleberry-finn/huckleberry-finn-story-blanks.html

வண்ணமயமான கேம்

கலராய்டு கேம் கிட்டத்தட்ட டெட்ரிஸ் விளையாட்டு போல தான், ஆனால் சுவாரஸ்யமானது. கலர்புல்லானதும் கூட! ஆம் இந்த கேமில் குறிப்பிட்ட ஒரே வண்ணத்திலான கட்டங்களை நிரப்ப வேண்டும். இதற்கு குறைவான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பது தான் சவால் . ஆண்ட்ராய்டிலும் விளையாடி மகிழலாம்.
விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.tapjoy.coloroid

உருளை விளையாட்டு
உருளைகளை சேகரிக்கும் எளிமையான விளையாட்டு. மொத்தம் மூன்று பானைகள் இருக்கும். எதை தொட்டாலும் எம்பி குதிக்கும். குதிக்கும் போது உருளைகளை சேகரிக்கும். ஒவ்வொரு முறையும் எத்தனை உருளைகளை சேகரிக்க முடிகிறது என்பது சுவாரஸ்யம்.
விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=net.sunflat.android.actionpotato

———–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts