கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம்.இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் கூகுள் இப்போது மண்டேலா சிறைவாசம் அனுபவித்த ராபென் தீவுகளை ஸ்டிரீட்வியூவுக்குள் கொண்டு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மண்டேலா தன் இனத்திற்காக சிறையில் கழித்த 26 ஆண்டுகளில் 18 ஆண்டுகளை ராபென் தீவு சிறையில் கழித்தார். ராபென் தீவு இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு வரலாற்று அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுவதோடு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விஜயம் செய்யப்படும் இடமாகவும் இருக்கிறது. இப்போது தென்னாப்பிரிக்கா செல்லாமல், இந்த தீவிற்குள் சென்று பார்க்க சிறப்பு அனுமதி பெறாமல் இருந்த இடத்தில் இருந்தே மண்டேலா இருந்த சிறைச்சாலையை கூகுள் ஸ்டிரீட்வியூவில் சுற்றிப்பார்க்கலாம்.

இந்த இடத்தில் ஸ்டீரீட்வீயூ சேவை பற்றி சிறு அறிமுகம். கூகுளின் வரைபட சேவையின் அங்கமான ஸ்டிரீட்வியூ உலக நகரங்களில் உள்ள தெரு காட்சிகளை 360 கோணத்தில் படம் பிடித்து காட்டுகிறது. பிரத்யேக காமிராவில் சுற்றுயுள்ள காட்சிகள் அனைத்து கோணங்களிலும் படமாக்கப்பட்டு பின்னர் ஒன்றாக தைக்கப்பட்டு 360 கோணத்தில் காட்டப்படுகிறது. ஆகவே ஒரு இடத்தை அங்கிருந்து சுற்றிப்பார்க்கும் உணர்வை பெறலாம்.

சுவாரஸ்யமான சேவை தான் என்றாலும் தனியுரிமை மீறலுக்கு சர்ச்சைக்குள்ளான சேவையும் கூட.
ma1
ஸ்டிரீட்வியூவின் சிறப்பசம் என்ன என்றால் வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்களை இது டெஸ்க்டாப்பில் இருந்தே பார்க்க வழி செய்வது தான். அமேசான் மழைக்காடுகள் முதல் தாஜ்மஹால் வரை ஸ்ட்ரீட்வியூவில் பார்க்கலாம்.
அந்த வகையில் மண்டேலா கருப்பின மக்கள் உரிமைக்கான போராட்டத்தில் சிறைவாசத்தில் கழித்த ராபென் தீவையும் கூகுள் தனது டிரெக்கர் காமிரா மூலம் படமாக்கி இணையவாசிகள் பார்வைக்கு வைத்துள்ளது.
சிறைச்சாலையை நேரில் சுற்றி பார்ப்பது போல வாயில் பகுதியில் இருந்து ஒவ்வொரு இடமாக பார்க்கலாம். மண்டேலாவுடன் சிறையில் இருந்த முன்னாள் அரசியல் கைதியான வுசுமி காங்கோ(Vusumzi Mcongo) ஒரு வழிகாட்டி போல இந்த சிறையை சுற்றிக்காண்பிக்கிறார்.

மண்டேலாவின் நெருங்கிய நண்பரும் அவருடன் சிறைவாசம் அனுபவித்தவருமான அகமது கத்ராடா இந்த முயற்சியை மனதார வரவேற்றுள்ளார். ’ 20 ஆண்டுகளாக குழந்தைகளை பார்க்க முடியாத்தும் பேச முடியாததும் தான் ராபென் தீவில் இருந்த காலத்தில் மிகவும் கடினமானது என்று கூறும் அகமது, இப்போது உலகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் ஸ்ட்ரீட்வியூ மூலம் இந்த சிறையை சுற்றிப்பார்க்க முடிவது கவித்துவமான நீதி என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கூகுள் கல்ச்சுரல் இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் இந்த உலா பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மண்டேலா சிறைவாசம் தொடர்பான டிஜிட்டல் கண்காட்சிகளையும் காணலாம். வரலாற்றின் ஊடே உணர்ச்சியமான பயணத்திற்கு நீங்கள் தயாரா?

விஜயம் செய்யுங்கள்: https://www.google.com/culturalinstitute/exhibit/robben-island-prison-tour/mQIim-e6wopSJw

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை

  1. Pingback: கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம் | Cyber Simman

Leave a Comment

Your email address will not be published.