கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும்

இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு.
இணையம் தகவல் சுரங்கம் தான். தேடு பொறிகள் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர பேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலமும் செய்திகள் வந்தடைகின்றன. திடிரென பார்த்தால் வைரலாக பரவி ஒரு விஷயம் கவனத்தை ஈர்க்கும். அது அருமையான வீடியோவாக இருக்கலாம். நல்ல கட்டுரையாக இருக்கலாம்.
இப்படி இணையத்தில் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கு நடுவே இணையவாசிகள் கண்களில் மண்ணைத்தூவும் விஷயங்களும் இணையத்தில் உலா வரவே செய்கின்றன.
இதற்கு அப்டேட்டான உதாரணம் தேவை என்றால் ஈராக்கில் அன்மையில் நடைபெற்ற போரை சொல்லலாம்.

நடக்காத யுத்தம்
இது நடைபெற்ற போர் அல்ல; நடைபெற்றதாக நம்ப வைக்கப்பட்ட போர். இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் அதன் எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரையும் ஏமாற வைத்த,ஆனால் உண்மையில் நிகழாத இந்த போர் பற்றி பிபிசி தளம் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.
லண்டன் மனிதர் ஒருவரால், சில குறும்பதிவுகளால் உண்டாக்கப்பட்ட போலி யுத்தம்… ! இப்படி தான் பிபிசி கட்டுரை துவங்குகிறது.
ஈராக் தான் இப்போது யுத்த பூமியாக இருக்கிறது அல்லவா? அங்கு இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளும் அரசு படைகள் மற்றும் ஆதரவு படைகள் மோதிக்கொண்டிருக்கின்றன. களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் டிவிட்டரில் குறும்பதிவுகளாக வெளியாவதும் உண்டு. கள நிலவரத்தை கச்சிதமாக படம் பிடித்துக்காட்டும் டிவிட்டர் கணக்குகளும் இருக்கின்றன.
அதனால் தான் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் மற்றும் அரசு படைகள் இடையே ஏற்பட்ட சண்டை தொடர்பான தகவல் குறும்பதிவாக வெளியான போது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.
இந்த செய்தியை அடுத்து, ஷிச்வா பகுதி மீண்டதை அடுத்து பெரிய அளஇல் கொண்டாட்டம் வெடித்ததாக குறும்பதிவு வெளியானது.
10,000 அகதிகள் ஷிச்வாவில் இருந்து கர்பாலாவில் தஞ்சம் அடைந்ததாக அடுத்த குறும்பதிவு தெரிவித்தது. அண்டை நாடுகளும் யுத்ததில் பங்கேற்பதாக வதந்திகள் உலா வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்னொரு குறும்பதிவோ ஈராக் எல்லையில் சவுதி படைகள் குவிக்கப்பட வேண்டும் என அலறியது.

அலுப்பினால் ஆரம்பம்.

மற்றவர்களுக்கு எப்படியோ ஈராக் நிலவரத்தை கவனித்து வருபவர்களை இந்த குறும்பதிவுகள் பரபரப்பில் ஆழ்த்தின. மேலும் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள துடித்தனர். ஆனால் இப்படி ஒரு சண்டை நடக்கவே இல்லை. இவை எல்லாமே லண்டனில் வசிக்கும் ஈராக்கியரான அகமது அல் முகமது என்பவர் மனதில் உதித்தவையாகும். முகமது @IraqSurveys எனும் டிவிட்டர் பக்கத்தை பராமரித்து வருகிறார். பொதுவாக ஈராக்கில் நடக்கும் விஷயங்களை இணையத்தில் இருந்து திரட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்.
ஆனால் ஒரு நாள் மிகுந்த அலுப்புக்கு இலக்கான நிலையில் அவர், குறும்பதிவால் உற்சாகம் கொள்வதற்காக ஷிச்வா பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் பின்வாங்குகிறது என ஒரு செய்தியை டிவிட்டரில் வெளியிட்டார். இதற்கு பொருத்தமாக போர்க்கள காட்சிகளையும் போட்டோஷாப் செய்து வெளியிட்டார்.
அவர் விளையாட்டாக தான் இவ்வாறு செய்தார். ஆனால் சற்றும் எதிர்பார்ககாத வகையில் இந்த செய்தி இணையத்தில் உலா வரத்துவங்கிற்று. அதுவும் எப்படி தெரியுமா? கண்,காது ,மூக்கு பொருத்தப்பட்டு! ஒரு பயனாளி இந்த போருக்கான வரைபடத்தை உருவாக்கி இணைத்திருந்தார்.விளைவு ஈராக்கில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு சவுதி மீது இஸ்லாமிக் ஸ்டேட் பதிலடி தாக்குதல் நடத்த துடிப்பதாகவும் பேசப்பட்டது.

இல்லாத நகரம்
ஆனால் தனது விளையாட்டு விபரீதமாக மாறுவதை உணர்ந்த முகமது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த செய்தி பற்றிய உண்மையை வெளியிட்டார். ஆனால் ஏன் இப்படி பொய் செய்தியை பரப்ப முயல வேண்டும்? இந்த கேள்விக்கு முகமது, நான் என்ன செய்யட்டும், ஷிச்வா எனும் இடமே கிடையாது, இந்த சொல்லுக்கு ஈராக் மொழியில் சீஸ் பிளேடர் என்று அர்த்தம். இதைப்பார்த்தவுடன் பொய் தகவல் என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டாமா?என்று கேட்டிருக்கிறார்.
முகமது தனது செயலுக்காக வருத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் விஷயம் என்ன என்றால் இணையத்தில் விளையாட்டு நோக்கில் வெளியிடப்படும் தகவல்கள் கூட சமயங்களில் உண்மை செய்தி என நம்ப வைத்து ஏமாற்றி விடுகின்றன என்பது தான்.
டிவிட்டரில் இதற்கு முன்னரே இப்படி பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பிரபல நட்சத்திரங்கள் மரணம் அடைந்துவிட்டதாக டிவிட்டர் குறும்பதிவுகள் மூலம் பலமுறை செய்தி பரவியிருக்கின்றன. ஒரு முறை ஹாலிவுட் நட்சத்திரம் ஸ்குவாஸ்நேகர் பனிச்சறுக்கு விபத்தில் இறந்ததாக தகவல் வெளியாகி பரவி பின்னர் அடங்கியது. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் அடைந்துவிட்டதாகவும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது பொய்த்தகவல் பரவியது. இப்படி பல உதாரணங்களை சொல்லலாம்.

ரிடிவீட் செய்யும் முன்…
இந்த பொய்ச்செய்திகளின் ஊற்றுக்கண் வெவ்வேறாக இருந்தாலும் அவை பரவிய விதம் ஒன்றாகவே இருக்கிறது. செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் தான் அது. டிவிட்டரில் ஒரு தகவலை பார்த்ததுமே அதை உடனே தனது நட்பு வட்டத்தில் பகிரும் ஆர்வத்துடன் பலரும் அதை மறு குறும்பதிவிடுகின்றனர். அதாவது ரிடிவீட் செய்கின்றனர். அதை பார்ப்பவர்கள் மேலும் ரிடிவீட் செய்ய பொய் செய்தி வைரலாக பரவுகிறது. பல நேரங்களில் ஊடகங்களே கூட இந்த தவற்றை செய்திருக்கின்றன.
தகவல்களை பகிர்ந்து கொள்ள துடிப்பதில் தவறில்லை தான். ஆனால் ரிடீவிட் செய்யும் முன் ஒரு நொடி அந்த செய்தி உண்மையா என யோசித்தால் கூட போதும் இத்தகைய பல விபரீதங்களை தவிர்த்துவிடலாம். பிரபலங்கள் பற்றிய தகவல் என்றால் அவர்களின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கம் அல்லது இணையதளத்தில் அந்த தகவல் இடம்பெற்றிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். அதே போல பிரபலங்கள் பெயரில் ஒரு தகவல் வெளியானால் அது அவருடைய அதிகாரபூர்வ பக்கம் தானா என உறுதி செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமான தகவல் மற்றும் விநோதமான செய்தி என்றால் நிச்சயம் அவற்றை சரி பார்க்க முயல வேண்டும். மாறாக ஆர்வத்தில் அதை பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ பகிர்ந்து கொண்டால் பொய்ச்செய்திக்கு எடை கூட நாமும் காரணமாகி விடுவோம்.
எல்லாவற்றுக்கும் மேல் இணையத்தில் காணும் எல்லாம் உண்மை எனும் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த செய்தியாக அல்லது தகவலாக இருந்தாலும் அது வெளியான மூல இடம் நம்பகமானதா என பார்க்க வேண்டும்.
அப்படியே அந்த தகவல் தொடர்பாக கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் தேடிப்பார்த்தாலும் உண்மை விளங்கிவிடும்.

ஆனியன் அறிவோம்

இவை தவிர இணையத்தில் செயல்படும் முக்கிய தளங்களின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆனியன் எனும் இணையதளம் கேலி மற்றும் நையாண்டியாக செய்தி கட்டுரைகளை வெளியிடுவதற்கு பெயர் பெற்ற தளம். இது வெளியிடும் செய்தி கட்டுரைகள் உண்மை போலவே இருக்கும். ஆனால் உண்மை இல்லை. கேலி மற்றும் நகைச்சுவையை விமசன நோக்கில் அருமையாக பயன்படுத்தும் இணையதளம் இது. ஆனியன் பற்றி அறியாதாவர்கள் அதில் வெளியாகும் கட்டுரையை படித்து உண்மைய என நினைத்து விட்டால் விபரீதம் தான். அன்மையில் முன்னாள் பிஃபா நிர்வாகிகள் கால்ப்ந்து சம்மேளன ஊழல் விவகாரத்தில் ஆனியன் கட்டுரையை மேற்கோள் காட்டி அசடு வழிந்தனர்.
நம்மூரில் கூட பர்ஸ்ட்போஸ்ட் செய்தி தளத்தில் போலி செய்திகளுக்கு என்று ஒரு பகுதி இருக்கிறது. அதில் வெளியாகும் தலைப்புகள் முதல் பார்வையில் நெஞ்சை படபடக்க வைத்துவிடும்.
இது போன்ற இணையதளங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த செய்திகளை படித்து ரசிக்க வேண்டுமே தவிர நம்பி ஏமாறக்கூடாது. எல்லோரும் ஆனியன் பற்றி அறிந்திருக்க நியாயமில்லை தான். எனில் ஒரு கட்டுரையை படித்த பின் அதன் தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் என தோன்றினால் அந்த தளத்தின் அறிமுக குறிப்பை பகுதியை படித்து பார்த்தால் அதன் தன்மை மற்றும் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை தேவை
இந்த வகை ஏமாறுதல்கள் ஒரு புறம் இருக்க, சில வாரங்களுக்கு முன்னர் பிரபல வலைப்பதிவாளர் ஒருவர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக ஏமாற்றியதாக தெரியவந்தது. இவை எல்லாம் இணையத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
நிற்க, இது போன்ற ஏமாற்று முயற்சிகளுக்கு இணையத்திலேயே மாற்று மருந்துகளும் இருக்கவே செய்கின்றன.
நோயுவர் மெமே (http://knowyourmeme.com/ ) எனும் இணையதளம் ஒன்று இருக்கிறது. இணையத்தில் வைரலாக பரவும் நிகழ்வுகள் பின்னே உள்ள உண்மை மற்றும் அவை எப்படி பரவி பிரபலமாயின என்பதை விளக்கும் தளமாக இருக்கிறது. அதே போல ஸ்னோப்ஸ்.காம் (http://www.snopes.com/) மற்றும் ஸ்மோகிங்கன் (http://www.thesmokinggun.com/) ஆகிய தளங்கள் பொய்ச்செய்திகளுக்கான விளக்கங்களை அளிக்கின்றன.

தினமணி நெட்டும் நடப்பும் பகுதியில் எழுதியது;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.