அடிப்படையான இணையம் என்றால் என்ன? பிரிபேசிக்சை முன்வைத்து சில கேள்விகள்

fஇணையம் கோடிக்கணக்கான இணையதளங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பயன்பாட்டில் இல்லாத தளங்கள், வெறும் முகவரிகளாக பதிவு செய்யப்பட்டவை போன்றவற்றை எல்லாம் நீக்கிவிட்டால் கூட இணையதளங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவற்றில் சிறந்த அல்லது பயன் மிகுந்த தளங்களை தேர்வு செய்வது என்பது சிக்கலான விஷயம் தான். பொதுவான பரிந்துரையாக ஒரு பட்டியல் போடலாமேத்தவிர , எல்லோரும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு அளவுகோள் சாத்தியமில்லை. ஏனெனில், இணையத்தை எந்த எடைத்தராசிலும் நிறுத்தி இது தான் சிறந்தது பகுதி என்று சொல்வதற்கில்லை.

கற்றது கையளவு,கல்லாதது உலகளவு என்பது கல்விக்கு மட்டும் அல்ல இணையத்திற்கும் பொருந்தும். இணையத்தை கரை கண்டவர் யாரும் இல்லை. இணையத்திலேயே புழங்கி கொண்டிருப்பவர்கள் கூட அதன் ஒரு பகுதியை தான் அறிந்தவர்களாக இருப்பார்கள். இணையத்தில் உள்ள அனைத்து இணையதளங்களையும் அறிந்தவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. எல்லோரும் அறிந்திருப்பது கையளவு இணையத்தை தான்.

இணைய அறியாமை

ஆனால் இந்த இணைய அறியாமையை நினைத்து கழிவிறக்கம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் முழு இணையதளத்தை அறிய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான இணையதளங்களை அறிந்திருந்தாலே போதுமானது. தேவை எனில் தேடியந்திரங்கள் மூலம் வேண்டிய இணையதளங்களை தேடிக்கொள்ளலாம். முன்னணி இணையதளங்கள் பட்டியலை வழிகாட்டியாக கொள்ளலாம். இணையத்தில் பயனுள்ள தளங்களையும் சேவைகளையும் தெரிந்து கொள்ள இன்னும் எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. இணையத்தின் முகப்பு பக்கம் எனும் ரெட்டிட் தளத்தை அணுகலாம். ஹேக்கர் நியூஸ் போன்ற தளங்களை நாடலம். குவோரா கேள்வி பதில் தளத்தில் சந்தேகம் கேட்கலாம். இவை எல்லாம் உதாரணங்கள். வழிகள் அவரவருக்கான பாதைகள்.

இணையத்தில் பெரும்பாலானோர் அறிந்த இணையதளங்களும், இணைய சேவைகளும் இருக்கின்றனவேத்தவிர எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்கள் என்று எவையும் இல்லை. அதே போல இணையத்தின் மிகச்சிறந்த இணையதளங்கள் என்று முழுமையான பட்டியலை தயார் செய்வதும் சாத்தியம் இல்லை. அலெக்ஸா பிரபலமான தளங்களை அவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கை வைத்து பட்டியலிடலாம். ஆனால் பிரபலமாக இருக்கும் தளம் பயனுள்ளதாகவோ ,முக்கியமானதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதோடு இணையத்தில் கோலோச்சும் நம்பர் ஒன் தளங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் ஏ.ஓ.எல் தளமும், யாவுவும் முன்னணியில் இருந்தன. இன்று கூகுள் தான் முன்னணியில் இருக்கிறது. ஏ,ஓ.எல் தளம் ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்டது.
f
இணையத்தின் தரம் என்ன?
ஆக, இணையத்தின் ஆகச்சிறந்த இணையதளங்கள் என்று ஒரு சில தளங்களையோ,ஏன ஒரு நூறு தளங்களை தேர்வு செய்யவும் முடியாது. அவ்வாறு இணையத்தை தரம் பிரிக்கவும் முடியாது.
எனில், இவை தான் அடிப்படை இணையம் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இணையதளங்களை எப்படி தேர்வு செய்வது? யார் தேர்வு செய்வது? அதை யார் அங்கீகரிப்பது? இதில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காண்பது?

இதை இணையத்திற்கான பொதுநல அமைப்பு செய்வதா? அல்லது நாடுகளின் கூட்டமைப்பு செய்வதா? இதற்கான விதிமுறைகள் என்ன என்ன?
எல்லாம் சரி,பரந்து விரிந்த இணையத்தை ஏன் அடிப்படையான இணையம் என்று சுருக்க வேண்டும்? இதற்கான தேவை என்ன?

ஒருவர் இணையத்தின் குறிப்பிட்ட சில நூறு இணையதளங்கள் மட்டும் கொண்ட அடிப்படையான சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏன் வர வேண்டும். அவரவர் தங்களுக்கு தேவையான நோக்கில் இணையத்தை அணுகுவது தானே ஏற்றதாக இருக்கும்.

பிரிபேசிக்ஸ் கேள்விகள்
இந்த கேள்விகளை எல்லாம் மனதில் கொண்டு, பேஸ்புக் முன்வைத்துள்ள பிரிபேசிக்ஸ் சேவை பற்றி யோசித்துப்பாருங்கள். இணையவசதி பெற முடியாதவர்களுக்கு இலவசமாக இணையத்தை அணுகுவதை சாத்தியமாக்குவதற்காக அடிப்படையான இணைய சேவைகளை மட்டும் இலவசமாக அளிப்பதாக பேஸ்புக் தரப்பில் சொல்லப்படுகிறது.முழு இணையத்தையும் இலவசமாக வழங்வது பொருளாதார நோக்கில் சாத்தியமில்லை என்பதால் ஏழை மக்களின் நலனுக்காக அடிப்படையான இணைய சேவைகளை தேர்வு செய்து பிரிபேசிக்ஸ் மூலம் அளிப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் விளக்கம் தருகிறார்.

ஆனால் இவை தான் அடிப்படை இணையம் என்று தேர்வு செய்யும் அதிகாரத்தை அவர் எடுத்துக்கொண்டது எப்படி என்பதையும், அதற்கான நியாயத்தையும் வழங்க முன்வருவாரா?

கோடிக்கணக்கான இணையதளங்களையும் சேவைகளையும் கொண்ட இணையத்தை, இணைய கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கான அடிப்படை தளங்களை கொண்ட இணையம் என சுருக்கிவிடலாம் என தோழர் மார்க் எப்படி முடிவுக்கு வந்தார்?

உலகின் மிக முக்கியமான சமூக வலைப்பின்னல் சேவை பேஸ்புக் தவிர, கல்வி ,விவசாயம் மற்றும் மருத்துவம் சார்ந்த இணையதளங்களை அடிப்படையான இணையமாக தேர்வு செய்துள்ளார். இதற்கான மேடையில் அனைவரும் பங்கேற்கலாம் என்றாலும் தேர்வு செய்யும் அதிகாரம் அவரிடம் தான் உள்ளது.

எது சிறந்த இணையம்?
பேஸ்புக் முன்வைக்கும் அடிப்படைய இணையத்தைவிட, சீனாவில் அரசு அடுக்குமுறைக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளருக்கு உதவக்கூடிய இணையதளம் வேறு ஒன்றாக இருக்கதா? ராஜ்ஸ்தானின் குக்கிராமத்தில் இருந்து வருங்காலம் பற்றி கனவு காணும் சிறுவனுக்கு , கான் அகாடமி இணைய பல்கலைக்கழகம் தானே பயனுள்ளதாக இருக்க முடியும். இணையத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் பாதிக்கபப்ட்டுள்ள அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகளை பேசுபவர்களுக்கு அவர்கள் தாய் மொழியிலான தளங்கள் தானே அடிப்படையான இணையமாக இருக்க முடியும்?

திரைப்பட ஆர்வலர் ஒருவருக்கு இணைய ஸ்டிரிமிங் சேவையான நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்கள் தானே அடிப்படையான இணையமாக இருக்க முடியும்? ஆய்வாளர் ஒருவருக்கு அடிப்படையான இணையம் எதுவாக இருக்க முடியும்?

இவர்களுக்கானது அல்ல பிரிபேசிக்ஸ் என்று தோழர் மார்க் சொல்லலாம்.ஆனால் இணைய வசதி பெற முடியாதவர்களுக்கு இணையத்தை இலவசமாக அளிக்கிறோம் எனும் கருத்தை முன்வைத்து, அவர்கள் அணுக கூடிய இணையத்தை சுருக்கி விடுவது எந்த வகையான பாதிப்புகளை உண்டாக்கும். ஒரு சில இணைய சேவைகளை மட்டுமே அணுகும் நிலை உள்ளவர்கள் இணையத்தை கையளவு கொண்டதாக நினைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? அது மட்டும் அல்ல, பிரிபேசிக்ஸ் மூலம் அனுமதிக்கப்படும் இணையதளங்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் நிலை உண்டாகி, பலரும் அறிந்த முழுமையான இணையம் மற்றும் சிலர் மட்டுமே அறிந்த குறுகலான இணையம் என்று பாகுபாடு ஏற்படலாம் அல்லவா? இது தானா தோழர் மார்க் சொல்லும் டிஜிட்டல் சமத்துவம்?

—-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.