ஆழ் வலையும், இருண்ட வலையும்- ஒரு அறிமுகம்

deep-dark-webகல்வியில் மட்டும் அல்ல, இணையத்தில் நாம் கற்றது கையளவே. அந்த அளவுக்கு இணைய வெளி பரந்து விரிந்திருக்கிறது. நாம் அறியாத கோடிக்கணக்கான இணையதளங்கள் இருப்பதோடு, பெரும்பாலோனோர் அறியாத இணையமே இருக்கின்றன. இப்படி எட்டாமல் இருக்கும் இணையம் டீப் வெப் என்றும் டார்க் வெப் என்றும் குறிப்பிடுப்படுகின்றன.

இணைய வாசிப்பின் போது நீங்களே கூட டீப் வெப் மற்றும் டார்க் வெப் பற்றிய குறிப்புகளை படித்து, இதென்ன புரியாத வலையாக இருக்கிறதே என குழம்பியிருக்கலாம். டீப் வெப் மற்றும் டார்க் வெப் இரண்டுமே ஒரே பொருளோடு பயன்படுத்தப்படுவது இன்னும் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

பல நேரங்களில் ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று பயன்படுத்துவதும் குழப்பத்தை அதிகமாக்கலாம்.
டீப் வெப் மற்றும் டார்க் வெப் பற்றி புரிந்து கொள்வதற்கு முன் முதலில் இந்த இரண்டும் வேறு வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். டீப் வெப் என்றால் ஆழ் வலை என்று பொருள். டார்க் வெப் என்றால் இருண்ட வலை. ஆழ் வலைக்கும் அடியில் இருக்கும் வலை என்றும் இதை புரிந்து கொள்ளலாம். எளிதில், அணுக முடியாத வலை என்றும் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் இந்த அணுக முடியாத தன்மையே வலையை ஆழ் வலையாகவும், இருண்ட வலையாகவும் பிரிக்கிறது.

பொதுவாக வலை அல்லது இணையம் என்று குறிப்பிடும் போது பரவலாக எல்லோரும் அறிந்த மற்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இணையத்தை குறிப்பிடுகிறோம். அதாவது இண்டெர்நெட்.
இந்த இணையம் கணக்கில் இல்லா இணையதளங்களையும், பேஸ்புக்,டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும், மின்வணிகம் உள்ளிட்ட இன்னும் பிற சேவைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் பொதுவான அம்சம் , தேடியந்திரங்களால் அணுக கூடியதாக இருப்பது தான். அதாவது கூகுள் உள்ளீட்ட இன்னும் பிற தேடியந்திரங்களால் இதில் தேடலாம். இதன் பொருள் இந்த இணையதளங்களும், இணைய பக்கங்களும் தேடியந்திரங்களால் பட்டிலியடப்பட்டுள்ளன என்பது தான்.

இப்படி தேடியந்திரங்களால் பட்டியலிடப்படாத பகுதியில் இணையத்தில் இருக்கிறது. இது தான் பெரும் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தேடியந்திரங்களின் தேடல் சிலந்திகள் தூழாவ முடியாத வகை அல்லது வடிவத்தில் தகவல்களை கொண்டிருக்கும் பக்கங்களால் இணையத்தின் பெரும் பகுதி நிறைந்திருக்கிறது. இந்த வகை இணையமே ஆழ் வலை என்று கூறப்படுகிறது.
இன்னமும் கண்டறியப்படாத வலை என வைத்துக்கொள்ளலாம். இப்போதுள்ள தேடியந்திரங்கள் எல்லாம் இணையத்தின் மேல்பகுதியில் தான் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. ஆழ் வலையில் நாமறியாத பொக்கிஷங்களும் மறைந்திருக்கலாம்.

ஆழ் வலையில் தேடும் பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.

இந்த ஆழ்வலையின் , ஒரு பகுதி தான் இருண்ட வலை. இன்னமும் அணுகப்படாத இணைதளங்கள் மட்டும் அல்லாமல் பொதுவாக அணுக முடியாத தளங்களை கொண்டு இது அமைந்திருக்கிறது. இந்த தளங்களை எளிதில அணுக முடியாது. இவற்றை அணுக பிரத்யேக அனுமதி அல்லது தனி பிரவுசர் வேண்டும். பிராக்ஸி சர்வர்கள் பின்னே இவை ஒளிந்திருக்கலாம். அனோமதய தளங்கள் தான் இதில் அதிகம். சட்டவிரோதமான காரியங்களுக்கு இவை அதிகம் பயன்படுவதால் டார்க் வெப், அதாவது இருண்ட வலை என குறிப்பிடப்படுகிறது.

ஆனால் ஒன்று, இருண்ட வலை அப்படி ஒன்றும் பெரிதானதல்ல. இணையத்துடன் ஒப்பிட்டால் அது சின்னஞ்சிறிய நிழல் உலகம். இன்னொரு முக்கியமான விஷயம் இருண்ட வலை தீய் நோக்கத்துடன் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் நினைத்துவிடக்கூடாது. தணிக்கைக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் கொடுக்கோல் அரசாங்கங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடவும் அவை உதவுகின்றன.

ஆழ் வலை மற்றும் இருண்ட வலை தொடர்பான குழப்பத்தை இணைய கட்டுரைகளிலேயே பார்க்கலாம். அந்த அளவு இவை சிக்கலானவை.
ஆனால் இந்த சிக்கலை சிடுக்கெடுத்து மிக எளிதாக விளக்கியிருக்கிறது இந்தக்கட்டுரை:https://danielmiessler.com/study/internet-deep-dark-web/

குறிப்பு
: ஆழ் வலை ,இருண்ட வலை குழப்பம் ஒரு புறம் இருக்கட்டும், இணையம் மற்றும் வலை பற்றிய குழப்பமும் பலருக்கு இருக்கலாம். இரண்டும் ஒரு பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் ஒன்றல்ல. இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் . அதன் ஒரு அங்கம் வைய விரிவு வலை. இணையம் இல்லாமல் வலை இல்லை. ஆனால் வலை இல்லாமல் இணையம் உண்டு. இணையம் 1969 ல் அறிமுகமானது. அதன் தற்போதைய வடிவமான வலை 1989 ல் அறிமுகமானது.

குறிப்பு:
இணையத்தின் அடிப்படை அம்சங்கள், அதிகம் பேசப்படும் போக்கு குறித்து அறிமுக நோக்கிலான பகுதியை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் எண்ணம். அந்த எண்ணத்தின் முதல் பகுதியாக இது அமைகிறது. முடிந்த போதெல்லாம் இதை தொடர எண்ணம்.

அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.