அறிவியல்புரி அழைக்கிறது: தமிழில் ஒரு முன்னோடி மின்மடல் முயற்சி!

ariஅறிவியல் தொடர்பான கேள்விகள் உங்களிடம் இருக்கின்றதா? அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறதா? பயனுள்ள, சுவாரஸ்யமான அறிவியல் கட்டுரைகளை இணையத்தில் சல்லடைப்போட்டு தேடிப்பார்த்து தேர்வு செய்து, அவற்றை ஏன் படிக்க வேண்டும் என யாரேனும் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும் எனும் ஆதங்கமும் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம் எனில், உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரிடம் இணையத்தில் உருவாகி இருக்கிறது.

மிகவும் பொருத்தமாக அறிவியல்புரி எனும் பெயரில் அமைந்துள்ள அந்த இணையதளத்தில் இருந்து விஞ்ஞான மின்மடல் உங்களை தேடி வரக்காத்திருக்கிறது. வாரம் மூன்று முறை அறிவியல் உலக பாய்ச்சல்களை தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் அறிமுகத்தெறிப்புகளாக இந்த மன்மடல் வழங்க இருக்கிறது.

” உங்கள் அறிவியல் ஆர்வத்திற்கு அறிவியல்புரி இலவச மின்மடல் ஒரு ராஜபோக விருந்தாக இருக்கப்போகிறது” என மின்மடலுக்கான அறிமுகம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிமுகம் இப்படி நீள்கிறது:

“இணையத்தில் நான் தேடிப் படித்த, ஆங்கில அறிவியல் கட்டுரைகளில், எனக்குப் பிடித்தவற்றை உங்களுக்காகத் தொகுத்து அறிவியல்புரி இலவச மின்மடல் மூலம் அனுப்புகிறேன்.

தமிழில் சிறு அறிமுகத்துடன் குறைந்தது 5 அறிவியல் தலைப்புகள் ஒவ்வொரு மடலிலும் இருக்கும்.  நீங்கள் இணைப்புகளை சொடுக்கி, நேரே அந்தந்த ஆங்கிலக் கட்டுரைகளுக்குப் போய் படித்து பயன்பெறலாம்.

கட்டுரைகளை தேடிப் படித்து தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மின்மடலுக்கும் குறைந்தது நான்கு மணி நேரங்களைச் செலவிடுகிறேன். இதனால் உங்கள் பொன்னான நேரமும், இணையம் மற்றும் கணினி மின் கட்டணங்களும் மிச்சமாகும்!

தமிழில் பல அறிவியல் தலைப்புக்களைப் பற்றி இன்னும் பேச்சே இல்லை என்பதையும் இந்த மின்மடல் உங்களுக்கு உணர்த்தும்.

சில வாரங்களில் குறைந்தது 100 அறிவியல் தலைப்புகளுக்கு மேல் விரிவாக அறிந்து கொள்வீர்கள்.”

இந்த அனுபவத்தில் இணைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அறிவியல்புரி இணையதளத்தில் உங்கள் மினஞ்சல் முகவரியை சமர்பித்துவிட்டு வாரந்தோறும் ஆர்வத்துடன் காத்திருப்பது தான். இந்த காத்திருப்பு உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும்.

தமிழில் அறிவியல் கட்டுரைகளுக்கான மின்மடல் சேவை என்பது வரவேற்க தக்க முயற்சி. தொழில்நுட்ப உலகிலும், அறிவியல் உலகிலும் ஆய்விலும், நடைமுறை சேவைகளிலும் பெரும் பாய்ச்சலி நிகழும் கால கட்டம் இது. தமிழில் இவற்றை அடையாளம் காட்டுவது காலம் சார்ந்த தேவை. புதிய வாசகர்களையும், வருங்கால கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவிக்க இது நிச்சயம் உதவும்.

இந்த மின்மடல் அறிவிப்பின் வாலில் இன்னொரு உற்சாக செய்தியும் மறைந்திருக்கிறது. மின்மடல் ஆசிரியர், இதே பெயரில் அறிவியல் கட்டுரைகள் தொகுப்பு நூல் வரிசையையும் உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நூல் எப்படி இருக்கும் என கற்பனை விரிகிறது. நீங்களும் அதில் சிறகடியுங்கள்: https://www.arivialpuri.com/

( பி.கு; இந்த செய்தி மடலின் ஆசிரியர் எனது நெருங்கிய நண்பர். ஆனால் இந்த பதிவை எழுத அது காரணம் அல்ல. அறிவியல் உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்ட தொழில்நுட்ப வலைப்பதிவாளர் எனும் முறையில் இந்த மின்மடல் தமிழில் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என கருதுகிறேன். அதுவே இந்த பதிவிற்கான காரணம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.