தோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்

DSYjiGzUQAA79GKஎனக்கு ஒரு கோப்பை காபி வாங்கித்தர சம்மதமா? என்பது போல பொருள் தரும் வகையிலான பைமீஏகாபி.காம் எனும் இணையதளம் பிராடக்ட் ஹண்ட் தளத்தில் கவனத்தை ஈர்த்தது. பெயரே சுவாரஸ்யமாக இருக்கிறதே என அந்த தளத்திற்கு நுழைந்து பார்த்தால் அதன் உள்ளடக்கமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

உண்மையில் தளத்தின் பெயர் தான் உள்ளடக்கமே. அது தான் சுவாரஸ்யமே என்று வைத்துக்கொள்ளுங்களேன். காபி வாங்கி கொடுங்கள் என்பதை ஆங்கிலத்தில் பை மீ ஏ காபி என்று சொல்கிறோம் அல்லவா? இதையே கோரிக்கையாக வைப்பதற்காக தான் இந்த இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆம், இணையம் மூலம் நிதி திரட்ட உதவும் இணையதளங்கள் போல இந்த தளம், இணைவாசிகள் உங்களுக்காக காபி வாங்கித்தர வழி செய்கிறது. இந்த தளத்தில் ஒரு கோரிக்கை பக்கம் அமைத்தால், காபி வாங்கி கொடுக்கவும் என வேண்டுகோள் வைப்பதாக புரிந்து கொள்ளலாம். வேண்டுகோளை ஏற்றுக்கொள்பவர்கள், காபி வாங்கி கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்கு ஆகக்கூடிய தொகையை நன்கொடையாக அளிக்கலாம். பேபால் போன்ற இணைய பண பரிவர்த்தனை சேவை மூலம் இந்த தொகையை அனுப்பி வைக்கலாம்.

இந்த தளம் யாருக்காக என்றால், கலைஞர்கள், வலைப்பதிவாளர்கள், டெவலப்பர்கள் போன்ற உருவாக்குனர்களுக்கானது. அதாவது கிரியேட்டர்களுக்கானது. புதிய இணைய சேவை அல்லது படைப்புகளை உருவாக்குபவர்கள் தங்கள் பயனாளிகளிடம் இருந்து அதற்கான ஆதரவாக நிதி கோர இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய புதுமைகள், சேவைகள் தழைக்க வேண்டும் எனில் இது போன்ற ஆதரவு அவசியம் அல்லவா? அதை தான் இந்த தளம் உறுதி செய்ய முயற்சிக்கிறது.

இணையம், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பலர் வர்த்தக வெற்றியை இலக்காக கொண்டு புதிய சேவைகள், செயலிகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். பலர் இதை ஸ்டார்ட் அப் கனவுகளுடனும் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் வெற்றி கிடைத்து டாலர்களும், ரூபாயும் கொட்டலாம். அல்லது தோல்வி பாடங்களை கற்றுத்தரலாம். விஷயம் அதுவல்ல, வர்த்தக நோக்கம் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் புதிய சேவைகளை உருவாக்கி அறிமுகம் செய்யும் தொழில்நுட்ப கில்லாடிகளும் அநேகம் பேர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், தொழில்நுட்பம் தரக்கூடிய சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்து ஊருக்கு பயன்படும் புதிய சேவையை உருவாக்கும் உத்வேகத்துடன் மட்டுமே செயல்படுகின்றனர். தங்கள் சேவை இணையவாசிகளின் பிரச்சனைக்கு தீர்வாகவோ அல்லது அவர்களுக்கு புதிய வசதியை ஏற்படுத்தி தரும் சேவையாகவோ அமைந்திருப்பதே இவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது.

இவர்களில் பலர் வேறு வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரத்தில் ஆர்வத்தோடு இந்த முயற்சியில் தங்களை கரைத்துக்கொள்கின்றனர். இதையே முழு நேரமாக செய்யும் கர்மவீரர் மென்பொருளாலர்களும் இருக்கின்றனர். இணையத்தின் பல பயனுள்ள சேவைகள் இப்படி அறிமுகமானவை தான்.

மென்பொருளாளர்கள் மட்டும் அல்ல வலைப்பதிவாளர்கள் பலர் வாசகர்களுக்கு பயனுள்ள தகவல் அளிக்கும் நோக்கத்துடன் வலைப்பதிவு செய்கின்றனர். வீடியோக்களை உருவாக்குகின்றனர். கலைஞர்கள் பலர் கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர். இவை எல்லாவற்றுக்குமே நேரமும், உழைப்பு அவசியம்.

இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்று இந்த பிரம்மாக்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. தொழில் முறையிலான வேறு வழிகளில் தங்களுக்கான வருமானத்தை ஈடு செய்து கொள்கின்றனர். அல்லது, மென்பொருள் திட்டங்களை பகிர்வதற்கான கிட் ஹப் போன்ற இணையதளங்களில், ஓபன் சோர்ஸ் அடிப்படையில் தங்கள் திட்டத்தை வெளியிட்டு விட்டு ஆதரவு கேட்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவில், இந்த சேவை பயனுள்ளது என உணர்ந்தால் இதை உருவாக்கிய என் முயற்சியை பாராட்டும் விதமாக நிதி அளியுங்கள் என கோருவதும் உண்டு.

நிதியுதவி என்றால் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ அல்ல, உங்களால் முடிந்ததை கொடுங்கள் என மென்மையாக கேட்டு விட்டு அமைதி காப்பதாக இருக்கிறது. இதை கூட நிதி உதவி என்பது போல கோருவதில்லை. என் திறமையயும், நேரத்தையும் செலவிட்டு உங்களுக்கான சேவையை உருவாக்கி இருக்கிறேன். அது பிடித்திருந்தால், எனக்கு ஒரு காபி வாங்கி கொடுங்களேன் என்று கேட்கின்றனர். இ-காமர்ஸ் யுகத்திலும் இணையம் மூலம் காபி அனுப்பி வைக்க முடியாது என்பதால் அதற்கு ஈடான தொகையை நன்கொடையாக அனுப்பி வைக்கலாம்.

இந்த வழக்கம் தான், இணைய உலகில் பிரபலமாக ’பை மீ ஏ காபி’ என குறிப்பிடப்படுகிறது. நிதியுதவி என்பதை விட, உழைப்புக்கான பரிசு என வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் ஆரம்ப காலத்தில் இந்த கோரிக்கை டோனேட் மீ எனப்படும் நன்கொடை கோரும் பட்டன்கள் வடிவில் வெளிப்பட்டது. இணையவாசிகள் இந்த பட்டனை கிளிக் செய்து பேபால் அல்லது கிரெடிட் கார்டு மூலம் நிதி அளிக்கலாம்.

இந்த நிதி கோரிக்கை இன்னும் எளிமையாக்கித்தருவதற்கான இணைய மேடையாக பை மீ ஏ காபி இணையதளம் அமைந்துள்ளது. உருவாக்குனர்கள் இதற்கென தங்கள் இணையதளத்தில் தனியே கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. அதற்கு பதிலாக இந்த தளத்தில் தங்களுக்கான பக்கத்தை அமைத்துவிட்டு, தங்களது சேவை அல்லது திட்டம் குறித்த தகவல்களை அதில் பகிர்ந்து கொண்டால் போதுமானது. அந்த பக்கத்தை பார்க்கும் இணைவாசிகள் காபி வாங்கிக்கொள்வதற்கு நிகரான நிதி அளிக்கலாம். பயன்படுத்த எளிதானது என்பதோடு, இணையவாசிகள் அதி அளித்து ஆதரிப்பதற்கான இணைய மேடை என்பதால் இதன் மூலம் கிடைக்க கூடிய பலனும் அதிகமாக இருக்கலாம்.

அந்த வகையில் இந்த தளம் நிதி திரட்டுவதற்கான அபவுட்.மீ இணையதளம் போல இருப்பதாக பிராடக்ட் ஹண்ட் தளத்தின் நிறுவனர் ரயான் ஹோவர் பாராட்டியுள்ளார். ( அபவுட்.மீ என்பது இணையவாசிகள் தங்களுக்கான அறிமுகத்தை உருவாக்கி கொள்ள வழி செய்யும் சேவை). பிராடக்ட் ஹண்ட் தள பின்னூட்ட வடிவில் அளிக்கப்பட்ட இந்த பாராட்டை ஏற்றுக்கொண்டுள்ள, தளத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஜோசப் சன்னி (@josephsunny_ ) தாங்கள் எதிர்பாராத விதங்களில் எல்லாம் இந்த தளம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த தளத்தின் மூலம் பிட்காயின் வடிவில் நிதி அளிக்கும் வசதியும் அறிமுகம் ஆகியிருக்கிறது என்பது இன்னும் சுவாரஸ்யம்.

இணையம் மூலம் நிதி திரட்ட கிக்ஸ்டார்ட்டர் உள்ளிட்ட பல தளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் படைப்பாளுக்கான பிரத்யேக நிதி திரட்டும் மேடையான பேட்ரனும் சேர்ந்துள்ளது. ஆனால் பயனாளிகளிடம் தோளில் கைபோட்டபடி உரிமையோடு ஆதரவு கோர வழி செய்வதற்காக இந்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்குனர்களாக இருந்தால், இந்த தளத்தில் உங்களுக்கான கோரிக்கை பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அல்லது அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களை ஒரு பார்வை பார்த்து ஆதரவு அளிக்கலாம்.- https://www.buymeacoffee.com/

டெயில்பீஸ்; கோ-பீ (ko-fi.com) எனும் இணையதளமும் இதே போன்ற சேவையை வழங்கி வருவதாக அறிய முடிகிறது. ஆனால் இந்த சேவை குறித்து எந்த பரபரப்பும் இல்லை.

யுவர்ஸ்டோரி தமிழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.