வலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்!

BN-UO739_80807p_HD_20170807010616பாஸ்வேர்டு என்பது இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கான திறவுகோள் மட்டும் அல்ல அவற்றுக்கான பூட்டும் தான். எனவே நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு வலுவானதாக இருப்பது மிகவும் அவசியம். இல்லை எனில் பாஸ்வேர்டு பூட்டு ஹேக்கர்களால் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்து விபரீதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இமெயில் பாஸ்வேர்டு களவாடப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பறிபோகலாம். இணைய வங்கிச்சேவைக்கான பாஸ்பேர்டு களவு போனால் பொருளதாரரீதியாக பெரும் இழப்பு ஏற்படலாம். அது மட்டும் அல்ல, ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளுக்கான திறவுகோளாக பயன்படுத்தும் வழக்கம் இருந்தால், ஒரு பாஸ்வேர்டு திருடப்பட்டால், நீங்கள் பயன்படுத்தும் ஒட்டுமொத்த இணைய சேவைகளுக்கான பின் வாசல் கதவை ஹேக்கர்களுக்கு திறந்து வைத்தது போலாகிவிடும்.

இணைய வாழ்க்கையின் பாதுகாப்பு பாஸ்வேர்டின் பாதுகாப்பில் இருக்கிறது. எனவே வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதற்கான அடிப்படைகள் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நோக்கில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள் என வல்லுனர்களால் முன்வைக்கப்படும் குறிப்புகள் இதோ:

நூறு யூகங்கள்

வலுவான பாஸ்வேர்டுக்கான அடிப்படை விதி மிகவும் எளிதானது. அந்த பாஸ்வேர்டு எளிதாக யூகித்து அறியும் வகையில் இருக்க கூடாது. ஒரு பாஸ்வேர்டு எளிதாக யூகிக்க கூடியதா என அறியவும் எளிதான வழி இருக்கிறது. பாஸ்வேர்டு எதுவாக இருந்தாலும், அது நூறு யூகங்களை தாக்குப்பிடிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பது தான் அது.

அதாவது நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என ஒருவர் வரிசையாக யூகிக்க முற்பட்டால், நூறு முறை யூகித்தாலும் அவரால் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியாமல் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் பாஸ்வேர்டை தேர்வு செய்யும் போது, பெயர், பிறந்த தேதி, முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே பாஸ்வேர்டை அமைப்பதால், ஒருவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் இருந்து திரட்டினால், அவற்றைக்கொண்டு என்ன பாஸ்வேர்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என யூகித்துவிட வாய்ப்பிருக்கிறது. 73 சதவீத ,முயற்சிகளில் ஹேக்கர்கள் பயனாளிகள் பாஸ்வேர்டை சரியாக கணித்துவிடும் வாய்ப்பிருக்கிறது என சைபர் வல்லுனர்கள் சொல்வதை இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்.

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படும் விஷயங்களை கொண்டு ஒருவரைப்பற்றிய தகவல்களை எளிதாக திரட்டிவிடலாம். ஆக, பொதுவெளியில் இருக்க கூடிய தகவல்களை எல்லாம் தவிர்த்து விட்டு உங்களுக்கான பாஸ்வேர்டை உருவாக்க முயற்சிக்கவும்.

சொற்றொடர் வழி

பாஸ்வேர்டை உருவாக்க அகராதி சொற்களை நாடக்கூடாது என்பது பொதுவான விதி. ஏனெனில் ஹேக்கர்கள் பயன்படுத்தும் உத்திகளில், அகராதி சொற்களை எல்லாம் முயன்று பார்க்கும் டிக்‌ஷனரி அட்டாக் மிகவும் பிரபலமானது. அதனால் தான் பாஸ்வேர்டை யோசிக்கும் போது, உங்களுக்கான பிரத்யேக சொற்றடர் ஒன்றை தேர்வு செய்து, அந்த தொடரில் இடம்பெறும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்து பாஸ்வேர்டை அமைக்கலாம் என்கின்றனர். இதை நீங்கள் நினைவில் கொள்வது எளிது. ஆனால் மற்றவர்கள் யூகித்து அறிவது கடினம். மானே தேனே பொன் மானே போட்டுக்கொள்வது போல, இடையே அடைப்பு குறிகள் மற்றும் எண்களை சேர்த்துக்கொள்ளலாம்.

நீளம் முக்கியம்

பெரும்பாலான இணைய சேவைகள் பாஸ்வேர்டு குறைந்தபட்சம் 8 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், உண்மையில் பாஸ்வேர்டு இன்னும் நீளமாக இருந்தால் நல்லது என்கின்றனர். அதிகபட்சம் 64 எழுத்துகள் கொண்டிருந்தாலும் பாதகம் இல்லை என்று வலியுறுத்தப்படுகிறது. பாஸ்வேர்டு எழுத்துக்களுக்கு நடுவே வெற்றிடத்தையும் பயன்படுத்தலாம். ஒரு மைய பொருளின் அடிப்படையில் பாஸ்வேர்டை தொடர் வார்த்தைகள் கொண்டதாகவும் அமைக்கலாம்.

உதாரணத்திற்கு செல்லப்பிராணி பிரியர்கள் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகளின் பெயர்களை எல்லாம் வரிசையாக பயன்படுத்தலாம்.

மாற்றம் தேவையா?

பாஸ்வேர்டு பாலபாடங்களில் ஒன்றாக இவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என சொல்லப்படுவது இப்போது மாறியிருக்கிறது. தேவையில்லாமல் பாஸ்வேர்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் பாஸ்வேர்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகம் எழும் போது மட்டும் மாற்றினால் போதுமானது. ஜிமெயில் உள்ளிட்ட சேவைகளில், சந்தேகத்திற்கு உரிய செயல்பாடுகள் இருந்தாலே எச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இது போன்ற நேரங்கள் உடனடியாக பாஸ்வேர்டை மாற்ற வேண்டியிருக்கலாம். அதே போல, பாஸ்வேர்டு கொள்ளை பற்றி பெரிய அளவில் செய்தி வெளியாகும் போது உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்து கொள்வது நல்லது.

நினைவில் நிற்கும் ரகசியம்

பாஸ்வேர்டை துண்டு சீட்டில் எழுதி வைப்பது நல்ல பழக்கம் இல்லை, தவிர்க்கப்பட வேண்டும் என்கின்றனர். எனவே தனித்தன்மை வாய்ந்த பாஸ்வேர்டை உருவாக்கினால் அது நினைவில் நிற்கும் ரகசியமாக அமையும். இல்லை எனில் பாஸ்வேர்டு நிர்வாகத்திற்கான பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருள்களை பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டை உருவாக்கும் போது, ஒரு எண், ஒரு சிறப்பு குறியீடு, பெரிய மற்றும் சிறிய எழுத்து வேறுபாடு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு

பாஸ்வேர்டு வலுவாக இருந்தால் மட்டும் போதாது. அதற்கு கூடுதல் அரணும் தேவை. இதை தான் டுபேக்டர் ஆதண்டிகேஷன் என்கின்றனர். அதாவது இரண்டு அடுக்கு பாதுகாப்பு. பாஸ்வேர்டை டைப் செய்த பிறகு இமெயில் அல்லது குறுஞ்செய்தி அல்லது செயலி வழியே தனி குறியீட்டை பெற்று அதை உள்ளீடு செய்து கணக்கின் உள்ளே நுழைவதை இது குறிக்கிறது. இணைய கில்லாடிகள் தாக்குதல் நடத்தியதை நீங்கள் உடனடியாக அறியாமலே இருக்கும் வாய்ப்பு இருப்பதால் பாஸ்வேர்டுக்கு இத்தகைய இரண்டு அடுக்கு பாதுகாப்பு இருப்பது நல்லது. பாஸ்வேர்டு மாற்ற முயற்சிக்கப்பட்டால் அல்லது புதிய சாதனம்., புதிய இருப்பிடத்தில் இருந்து கணக்கை அணுக முயன்றாலும் இந்த முறையில் எச்சரிக்கை செய்யப்படும்.

தளம் புதிது; நீங்களும் வடிவமைப்பாளராகலாம்!

போட்டோஷாப், கிராபிக்ஸ் போன்ற எந்த நுணுக்கங்களையும் அறியாமல், அழகான வடிவமைப்புகளை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது கிரெல்லோ இணையதளம்.

இந்த தளத்தில் உள்ள வடிவமைப்புகளை ( டெம்பிளேட்) தேர்வு செய்து அதில் பின்னணியை மாற்றுவது, வாசகங்களை சேர்ப்பது மூலம் பயனாளிகள் தங்களுக்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்கி கொள்ளலாம். பேஸ்புக் பதிவுகளுக்கான வடிவமைப்பு, இன்ஸ்டாகிராம் பகிர்வுக்கான வடிவமைப்பு போன்றவற்றை இந்த தளம் மூலம் எளிதாக உருவாக்கி கொள்ளலாம். போஸ்டர்களையும் வடிவமைக்கலாம். அனிமேஷன் சித்திரங்களையும் உருவாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது. நூற்றுக்கணக்கான டெம்பிளேட்கள் உள்ளன. அவற்றில் இருந்து விரும்பியதை தேர்வு செய்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வடிவமைப்புகளை பார்த்தும் ஊக்கம் பெறலாம். கட்டணச்சேவையில் கூடுதல் வசதிகள் உண்டு. சமூக ஊடக பகிர்வு முதல் வலைப்பதிவு வரை பலவற்றில் பயன்படுத்தலாம்.

இணைய முகவரி: https://crello.com/home/

செயலி புதிது; கலைகளுக்கு ஸ்கேன் செய்யவும்

செயலி உலகில் ஷாஸம் செயலி மிகவும் பிரபலமானது. இசை கண்டறிதல் செயலி என வர்ணிக்கப்படும் ஷாஸம், இசை மெட்டுகள் அல்லது ஒலி குறிப்புகளை கேட்டு அதற்குறிய பாடல் எது என்பது உள்ளிட்ட விவரங்களை அளிக்க வல்லது. இதே போலவே, கலைப்படைப்புகளை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அவை தொடர்பான விவரங்களை அளிக்கும் வகையில் ஸ்மார்ட்டிபை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களுக்கு செல்லும் போது, அங்குள்ள கலைப்படைப்புகள் தொடர்பாக தகவல்கள் தேவை எனில், இந்த செயலியால் அந்த படைப்புகளை ஸ்கேன் செய்தால் போதும், அவை தொடர்பான தகவல்கள் திரையில் தோன்றும். குறிப்பிட்ட அந்த படைப்பை உருவாக்கிய கலைஞரின் நேர்காணலையும் அணுகலாம். உலகின் முன்னணி அருங்காட்சியகங்கள் பலவற்றில் இந்த செயலி செயல்படுகிறது. இந்த பட்டியலில் மேலும் பல அருங்காட்சியகங்கள் இணைக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://smartify.org/

தகவல் புதிது: பொய் செய்தியின் தாக்கம்

இணைய உலகில் பெரும் பிரச்சனையாக உருவாகி இருக்கும் பொய் செய்தி எனப்படும் ஃபேக் நியூஸ் சவாலை சமாளிக்க பேஸ்புக், கூகுள், உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனை இணையத்தின் நம்பகத்தன்மைக்கான சவாலாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் காலின்ஸ் அகராதி இந்த ஆண்டுக்கான சொல்லாக ஃபேக் நியூசை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இன்ஸ்டா, யூனிகார்ன், ஆண்டிபா உள்ளிட்ட பல வார்த்தைகளை பின்னுக்குத்தள்ளி ஃபேக் நியூஸ் முதலிடத்தை பெற்றுள்ளது. செய்தி வெளியீடு எனும் போர்வையில், பரப்பபடும், தவறான, பெரும்பாலான நேரங்களில் பரபரப்பானதாக அமையும் தகவல்களை பொய்ச்செய்தி என காலின்ஸ் அகராதி குறிப்பிடுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://www.collinsdictionary.com/woty

நன்றி; தழிம் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *