டெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்

டிரோன்கள் பற்றி அண்மை காலமாக அதிகம் பேசப்படுகிறது. தானாக பறக்கும் விமானங்கள் என புரிந்து கொள்ளலாம். டிரோன்களில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவை அன்மேண்ட் ஏரியல் விஹிகல்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. ஆன்மேண்ட் ஏர்கிராப்ட் சிஸ்டம்ஸ் என்றும் சொல்லப்படுகினறன. யூ.ஏ.வி என சுருக்கமாக சொல்கின்றனர். துவக்கத்தில் இவை உளவு விமானமாக அறிமுகமாயின. எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைந்து வேவு பார்த்து வருவதற்காக உருவாக்கப்பட்ட ரிஸ்க் இல்லாத விமானமாக இவை அமைந்தன. விமானம் என்றால் விமானி ஓட்ட வேண்டும் அல்லவா? ஆனால் பகைவர் பகுதிக்குள் சென்றால் விமானி மாட்டிக்கொள்ளும் ரிஸ்க் அதிகம். அந்த அபாயத்தை குறைக்கிறது விமானி இல்லாமல் இயங்க கூடிய ஆளி இல்லா விமானம். கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றனர். அதாவது புரோகிராம் செய்து பறக்க விடுவதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த உளவுத்தன்மை ஆளி இல்லா விமானங்களுக்கு ஒரு கெட்ட பெயர் ஏற்படுத்தி தந்த நிலையில் டிரோன்கள் அந்த அவப்பெயரை போக்கின. இவை விமானம் போல பெரிதாக இல்லாமல் சின்ன சைசில் இருக்கும். ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொம்மை விமானத்தை இயக்குவது போல இவற்றை இயக்கலாம்.

டிரோன்களின் பல ரகம் உள்ளன. ஹெலிகாப்டர் போல, நான்கு சின்ன இறக்கைகள் சுற்றிக்கொண்டிர்ப்பதை குவாட்ரோகாப்டர் என்கின்றனர். ட்ரோன்களை பலவிதமாக பயன்படுத்தலாம். இவையும் வேவு பார்க்கவும், ஆகாயத்தில் இருந்து படம் எடுக்கவும்,ஏன் துப்பாக்கியால் சுடவும் பயன்படலாம் என அஞ்சப்படுகிறது. அது மட்டும் அல்ல, வானில் பறக்கும் டிரோன்களால் ஆகாயத்தில் டிராபிக் ஜாம் ஆகி பிரச்சனையாகலாம் என்றும் பயம் இருக்கிறது. இதனால் டிரோன்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு இருக்கின்றன.

ஆனால் இவற்றை எல்லாம் மீறி அமெச்சூர்களும், வல்லுனர்களும், ஸ்டார்ட் அப் புலிகளும் டிரோன் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு காரணம் டிரோன்களால் பலவற்றை சாதிக்கலாம் என்பது தான். ஏன் வர்த்தக நிறுவனங்கள் டிரோன் மூலம் வீட்டிற்கு பார்சல் அனுப்பி வைக்கும் டிரோன் டெலிவரி பற்றி பேசுகின்றன. ஹோட்டலில் சர்வருக்கு பதில் 2 இட்லி, காபியை டிரோன் கொண்டு வந்து வைத்துவிட்டு போகலாம்.

இவை எல்லாவற்றையும் விட வனவிலங்கு பாதுகாப்பில் இருந்து ,பேரிடர் மீட்பு பணி வரை டிரோன்கள் ஆபத்பாந்தவனாக செயல்படும் வாய்ப்புள்ளது. ஜிப்லைன் எனும் அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனம், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில், டிரோன்கள் மூலம் குக்கிராமங்களுக்கு இடையே மருத்துவ உபரகரங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை சாம்பிள்களை தூக்கிச்சென்று உயிர் காக்கும் சேவையை வழங்குகின்றன.

நாளை பயோ மிமிகிரி…

( முந்தைய பதிவு: http://cybersimman.com/2018/03/06/tech-6/ )

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *