மறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி !

d41586-018-02839-9_15516176ஸ்டீபன் ஹாகிங் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். ஹாகிங் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஹாகிங்கின் மறைவு, விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானியாக வரை நன்கறிந்த பொது மக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கையையும், அறிவியல் உலகிற்கான அவரது பங்களிப்பையும் சற்று திரும்பி பார்க்கலாம்.

ஹாகிங் மறைவு பேரிழப்பு தான். ஆனாலும் கூட அவரது வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் போது இழப்பு என்று வார்த்தை நினைவில் வராது. இத்தனை ஊக்கமளிக்கும் வகையில் ஒருவர் வாழ முடியுமா? என்ற வியப்பே ஏற்படும். அவரது அறிவியல் அசாதரணமானது. அதைவிட அவரது வாழ்க்கை அசாதரணமானது. எல்லையில்லா தடைகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு மனித வாழ்க்கையின் எல்லையை விரிவாக்கியவர் ஹாக்கிங்.

நியூட்டன், ஐன்ஸ்டின் எனும் மகத்தான விஞ்ஞானிகள் வரிசையில் நம் காலத்து நாயகனாக வாழ்ந்த ஹாக்கிங், பிரபஞ்சம் தொடர்பான புதிர்களை விடுவிக்கும் கோட்பாடுகளுக்கும், கருந்துகளைகள் குறித்த புரிதலுக்கும் விஞ்ஞான உலகினரால் கொண்டாடப்படுபவர். காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் தலைப்பில் அவர் எழுதிய, அறிவியல் புத்தகம் பல காலம் பெஸ்ட் செல்லராக சக்கை போடு போட்டதோடு இன்னமும் விற்பனையில் இருக்கிறது. இந்த புத்தகம் தான் பொதுமக்கள் மத்தியில் அவரை நட்சத்திரமாக்கியது.

இந்த புத்தகம் அவர் முன் வைத்த பிரபஞ்சம் தொடர்பான அறிவியல் கோட்பாடுகளை எளிமையாக்கி தந்த நிலையில் கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான அவரது ஆய்வுகளும், தேடல்களும் தொடர்ந்தன. உடலும், குரலும் முடங்கிய நிலையில் அவர் இந்த தேடலில் ஓய்வில்லாமல் ஈடுபட்டிருந்தார் என்பது தான் அவரது வாழ்க்கை நமக்கு விட்டுச்சென்றிருக்கும் முக்கிய சித்திரம்.

ஆம், 76 வயது வயதில் இயற்கை எய்திய ஹாக்கிங், 21 வயதில் இனி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழமாட்டார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டவர். 1963 ம் ஆண்டில் அவர் மோட்டார் நியூரான் நோய் பாதிப்புக்குள்ளானார். அவரது உடலியக்கத்தை முடக்கத்துவங்கிய இந்த நோய் அவரை அதிக காலம் வாழவிட வாய்ப்பில்லை என்றே மருத்துவர்கள் கருதினர். அப்போது அவர் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவராக இருந்தார்.

ஆனால், இந்த நோய் தன்னை முற்றிலுமாக முடக்கிவிட ஹாக்கிங் அனுமதிக்கவில்லை. நோயின் தாக்கத்தால் சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், அவரது அறிவியல் தேடல் தொடர்ந்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் நோயின் தாக்கத்தால் குரலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மென்பொருள் மூலமான குரல் சேவை மூலம் தனது ஆய்வுகளையும், கருத்துகளையும் வெளியிட்டு வந்தார். நோயின் தாக்கம் ஏற்படுத்திய வரம்புகளும், சோதனைகளும் அவரது ஆய்வையும், அறிவியலையும் எந்த விதத்திலும் பாதிக்க அனுமதிக்காத அளவுக்கு விடா முயற்சிக்கும், மன உறுதிக்கும் உதாரணமாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தது.

மரணத்தின் நிழலில் வாழ நேர்ந்தாலும் அவர் அவ நம்பிக்கை கொள்ளவும் இல்லை, உள்ளத்தில் உடைந்து போகவும் இல்லை. “ எனது எதிர்காலம் மீது ஒரு மேகம் படர்ந்திருந்தாலும், ஆச்சர்யப்படும் வகையில் முன்பை விட வாழ்க்கையை இப்போது அதிகம் அனுபவிக்கிறேன். என்னுடைய ஆய்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன் ” என ஒருமுறை அவர் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்க்கையிலும், ஆய்விலும் அவரது குறிக்கோள் தெளிவாக இருந்தது. “ எனது குறிக்கோள் எளிதானது. பிரபஞ்சம் ஏன் அது இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது, பிரபஞ்ச இருப்பிற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பிரபஞ்சம் தொடர்பான முழுமையான புரிதலை பெறுவதே என நோக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேட்க்கைக்கு ஈடுகொடுக்க கூடிய அறிவியல் ஆற்றலும் அவருக்கு இருந்ததால், ஹாக்கிங்கால் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த முடிந்தது. அறிவியல் உலகில் அவரது முதல் மைல்கல் பங்களிப்பு 1970 ல் நிகழ்ந்தது. ரோஜர் பென்ரோஸ் எனும் ஆய்வாளருடன் இணைந்து, கணிதவியல் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சத்தின் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் விளக்கம் அளித்தார். சிங்குலாரட்டி என்று சொல்லக்கூடிய எல்லாவற்றுக்கும் முந்தைய ஆதியில், காலவெளியின் நேரத்தில் (ஸ்பேஸ்டைம்) எல்லையில்லா வளைவாக இருக்க கூடிய பிராந்தியத்தில், கடந்த காலத்தின் நீள் தொலைவில் பிரபஞ்சம் தோன்றிய பெருவெடிப்பிற்கான துவக்கப்புள்ளி இருப்பதாக அவர் கூறினார்.

அதன் பிறகு 1974 ல் குவாண்டம் கோட்பாடு உதவியுடன் கருந்துளைகள் வெப்பத்தை வெளிப்படுத்தி இறுதியில் இல்லாமல் போக வேண்டும் என குறிப்பிட்டார். கருந்துளைகள் வெப்பத்தை கதிர்வீச்சாக வெளிப்படுத்தின எனும் அவரது கண்டுபிடிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது விஞ்ஞான உலகில் அவர் மீதான முக்கியத்துவத்தை அதிகமாக்கியது. இதன் பயனாக 32 வயதில் அவர் பிரிட்டனின் ராயல் சொசைட்டிக்கு தேர்வானார். அடுத்த 5 ஆண்டுகளில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராரிசிரியரானார்.

1980 களில், அவரது உடல்நிலை மோசமானாலும் அவரது அறிவியல் ஆய்வு தொடர்ந்தது. 1982 ல் அவர் குவாண்டம் அதிர்வுகள் எப்படி, பிரபஞ்சம் விரிவடைய காரணமாக அமைந்தது என விளக்கினார். இந்த அதிர்வு அலைகளில் தான் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நாம் அறிந்த வகையிலான உயிர் வாழ்க்கைக்கான விதை அடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1988 ல் அவர், தனது அறிவியல் கோட்பாடுகளை எளிமையாக விளக்கி, காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்த புத்தகம் பெரும் வரவேற்பை பெற்று ஹாக்கிங்கை உலகறிந்த விஞ்ஞானியாக்கியது. இந்த புத்தகம் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையானதோடு, 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இதனிடயே அவர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். அவர் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குறியதாக இருந்தது.  ஹாக்கிங் தனது கருத்துக்களில் உறுதியாகவும் இருந்திருக்கிறார், பிடிவாதமாகவும் இருந்திருக்கிறார். 1975 ல் அவர் காஸ்மிக் எக்ஸ் கதிர் கருந்துளை அல்ல என பெட் கட்டி தோற்றிருக்கிறார். 1990 களின் இறுதியில் கருந்துளைகளில் தகவல்கள் காணமால போக வேண்டும் என வாதாடி பின்னர் அதை மாற்றிக்கொண்டார். கடவுள் துகள் கண்டறியப்பட வாய்ப்பில்லை என்றும் வாதிட்டு அவர் தோற்றிருக்கிறார்.

இந்த விவாதங்களும் சர்ச்சைகளும் ஹாக்கிங் மீதும் அவரது அறிவியல் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. இதனிடையே அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான தி தியரி ஆப் எவரிதிங் படம் அவரை மேலும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

தொடர்ந்து ஆய்வுலகில் தீவிரமாக இயங்கி வந்த ஹாக்கிங், செய்ற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி எல்லாம் கருத்து தெரிவித்து வந்தார். மனிதகுலத்தின் எதிர்காலம் பிற கோள்களுக்கு குடிபெயர்வதில் தான் இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.

மனிதமூளையை கம்ப்யூட்டருடன் ஒப்பிட்டவர், அதன் உறுப்புகள் பழுதடைந்தால் அது செயலிழந்து போகும் என்றும், செயலிழந்த கம்ப்யூட்டர்களுக்கு சொர்கமே, மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையோ கிடைடாது என ஒரு முறை கூறியிருக்கிறார். ’ மரணத்தை கண்டு நான் அச்சப்படவும் இல்லை, அவசரப்படவும் இல்லை, முதலில் நான் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது” என கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை சுருக்கமாக…

 • 1942 ல் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.
 • 1959 ல் ஆக்ஸ்போர்டில் நேச்சுரல் சயின்ஸ் பயிலும் வாய்ப்பை பெற்று பின்னர் கேம்பிரிட்ஜில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
 • 1963 ல் மோட்டார் நியூரான் எனும் உடலியக்க பாதிப்பு நோயால் தாக்கப்பட்டார்.
 • 1974 ல் ஹாக்கிங் கதிரியக்கம் என அழைகப்படும் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
 • 1979 ல் கேம்ப்ரிட்ஜில் லிகாசியன் கணிதவியல் பேராசிரியரானார். நியூட்டன் வகித்த பதவி இது.
 • 1988 ல் ஏ பிர்ப் ஹிஸ்டரி ஆப் டைம் புத்தகம் வெளியானது.
 • 2014 ல் வாழ்க்கை வரலாறு படமான தி தியரி ஆப் எவ்ரிதிங் வெளியானது.

தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தில் எழுதியது. 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *