ஒரு தேடலில் பல சாட்பாட்கள்

இணையத்தில் சரித்திரம் திரும்புகிறதா எனத்தெரியவில்லை. குவோராவின் போ சாட்பாட் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இப்படி தான் நினைக்க வைக்கிறது.

கேள்வி பதில் சேவையான குவோரா, ஏஐ யுகத்திற்கு ஏற்ப ‘போ’ சாட்பாட்டை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். குவோராவில் கேட்கப்படும் கேள்விகளுகு ஏஐ சாட்பாட் பதிலை பெறும் வசதியை அளிக்கும் நோக்கத்துடன் போ சாட்பாட் அறிமுகமானது.

இப்போது போ சாட்பாட் தளத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட பல்வேறு சாட்பாடுகளுடன் உரையாடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போ சாட்பாட் முகப்பு பக்கத்தில், பயனாளிகள் தங்களது கேள்வியை டைப் செய்ததுமே, அதே கேள்விக்கான பதிலை வேறு சாட்பாட்களில் தேடிப்பார்க்கும் வசதி முன்னிறுத்தப்படுகிறது.

போ பரிந்துரைக்கும் சாட்பாட்களில் தேடுவதோடு, பயனாளிகளே தங்களுக்கு விருப்பமான சாட்பாட்களை அதற்கான பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, கிளாட் என எண்ணற்ற சாட்பாட்களை இப்படி ஒரே சாட்பாட் கட்டத்தில் அணுகலாம். சாட்பாட்களின் உரையாடல்களை ஒப்பீட்டு பார்க்கலாம்.

ஒரே சாட்பாட்டில் அல்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்பாட்களில் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கும் போது இந்த சேவை உதவியாக இருக்கும். சாட்பாட் செலவையும், நேரத்தையும் இது எளிதாக்கும்.

தேடியந்திரங்கள் ஆரம்ப காலத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் மெட்டா தேடியந்திரங்கள் பிரபலமாக இருந்தது போல, இப்போது சாட்பாட்கள் யுகத்தில் மெட்டா சாட்பாட்கள் வந்திருப்பதாக கருதலாம். அல்லது சாட்பாட்களின் திரட்டிகள் என்றும் கருதலாம்.

குவோராவின் போ, பிரப்ளக்சிட்டி தேடியந்திரத்துடன் எப்படி பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.

குவோரா போ முகவரி: https://poe.com/login?redirect_url=%2F

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.