ஒரு பழைய தேடியந்திரத்தின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள்.

டாக்பைல் (https://www.dogpile.com/ ) என்றொரு தேடியந்திரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. இப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதை அறிமுகம் செய்தால், இதை அறிந்து கொள்வதில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும் என்றும் தெரியவில்லை.

இந்த சந்தேகத்தை மீறி, டாக்பைல் தேடியந்திரத்தை அறிமுகம் செய்யலாம் எனும் நோக்கத்துடன் அதன் முகப்பு பக்கத்திற்கு சென்று பார்த்தால், மன்னிக்கவும் இந்த சேவை உங்கள் நாட்டில் அனுமதிக்கப்படவில்லை எனும் செய்தி இடம்பெற்றுள்ளது.

பல மொழிகளில் இதே வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை விட ஆச்சர்யத்தையே அளிக்கிறது. ஏனெனில், டாக்பைல் ஆகச்சிறந்த தேடியந்திரமாக இல்லாமல் போகலாமேத்தவிர, ஆபத்தான தேடியந்திரம் என கருதப்படக்கூடியது இல்லை. எனில், ஏன் இது இந்தியாவில் முடக்கப்பட்டது.

டாக்பைல் தேடியந்திர முகப்பு பக்கத்தில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இல்லை.

சரி, டாக்பைலுக்கு என்ன ஆச்சு என கூகுள் மூலம் அறியலாம் என்று தேடிப்பார்த்தால், முடக்கம் தொடர்பாக எந்த தகவலையும் அறிய முடியவில்லை.

டாக்பைலுக்கு என்ன ஆச்சு? எனும் ஆங்கில நேர் கேள்விக்கு கூட, கூகுள் சுட்டிக்காட்டும் இணைப்புகள் பதிலாக அமையவில்லை.

அடுத்த முயற்சியாக, இப்போது கூகுளின் போட்டி என வர்ணிக்கப்படும் ஏஐ தேடியந்திரமான பிரப்ளக்சிட்டியில் (https://www.perplexity.ai/search/why-dogpile-is-Nn5igGmBSJ.IcVcLb1hbeA ), டாக்பைல் ஏன் இந்தியாவில் முடக்கப்பட்டது? எனும் கேள்வியை கேட்டால், ஆம், முடக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான குறிப்பிட்ட காரணத்தை அறிய முடியவில்லை என குறிப்பிட்டு, டாக்பைல் தொடர்பான தகவல்களை தொகுத்தளிக்கிறது.

இதே கேள்வியை பிங் தேடியந்திரத்தில் கேட்டால், இந்தியாவில் இணையதளங்கள் முடக்கப்படுவது புதிராக இருப்பதை குறிப்பிடும் இந்தியா டுடே செய்தி இணைப்பு முதலில் முன்வைக்கப்படுகிறது. பிங் கோபைலட் சேவையிடம் ( சாட்ஜிபிடி) இதே கேள்வியை கேட்ட போது, இந்திய அரசால் முடக்கப்பட்ட பல தளங்களில் டாக்பைலும் ஒன்று, ஆனால் அதற்கான குறிப்பிட்ட காரணத்தை அறிய முடியவில்லை என பதில் சொல்கிறது.

அதோடு, இந்த பதிலுக்கான விளக்க தொகுப்பில், முடக்கப்பட்டுள்ள தளங்களின் பட்டியலுக்கான நாளிதழ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சீன இணையதளங்கள் அடங்கியுள்ள அந்த பட்டியலில் டாக்பைல் இடம்பெற்றுள்ளதா எனத்தெரியவில்லை.

டாக்பைல் பட்டியலில் இல்லாத நிலையில், கோபைலட் அதை தொகுத்தளித்தா என்று தெரியவில்லை. மாறாக, பட்டியலில் டாக்பைல் இருக்கும் நிலையில், அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. குறிப்பிட்ட காரணம் இல்லாமல், பொதுவாக அல்லது தவறாகவும் அந்த தளம் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதை சரியாக நாம் அறிய வழியில்லை.

இணைய தளங்கள் முடக்கம் என்பது சர்ச்சைக்குறிய ஒன்று எனும் நிலையில், நம் நாட்டில் குறிப்பிட்ட ஒரு இணையதளம் ஏன் முடக்கப்பட்டது எனத்தெரியாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு முன் ஒரு சில சம்பவங்களில், இணையத்தின் ஆகச்சிறந்த தளங்கள் ஒரு சில இந்தியாவில் தவறாக முடக்கப்பட்ட தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. டாக்பைலுக்கும் அப்படி நிகழ்ந்திருக்கலாம்.

டாக்பைல் அப்படி தவறாக நீக்கப்பட்டிருந்தால், அதை சரி செய்ய கோரலாம். அல்லது அந்த முடிவை எதிர்த்து வாதிடலாம்.

இணைய சுதந்திரம் என்பது கட்டுப்பாடு நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாகி வரும் காலத்தில், டாக்பைல் போன்ற இணையதளங்களை நாம் அறியாமல் இருப்பதும், கண்டு கொள்ளாமல் இருப்பதும் கவலை அளிப்பது.

பி.கு: இதே போல கூகுளுக்கான மாற்று தேடியந்திரங்களில் ஒன்றாக கருதப்படும் குவாண்ட் தேடியந்திரமும் இந்தியாவில் அனுமதிக்கப்பவில்லை என தெரிவிக்கிறது.

https://tech.hindustantimes.com/tech/news/indian-government-bans-220-apps-here-s-the-entire-list-71606220895485.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.