கூகுளுக்கு மாற்று தேடலை எப்போது நாட வேண்டும்?

கூகுளுக்கு மாற்று தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அறிந்தும் அக்கறை காட்டாமல் இருக்கலாம்.

ஆம் எனில், கூகுளுக்கு மாற்று ஏன் தேவை என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

*

கூகுள் என்றில்லை எந்த முன்னணி சேவைக்கும் தகுந்த மாற்று சேவை அவசியம். இல்லை எனில் அந்த பிரிவில் ஏகபோகத்தின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

நிற்க, கூகுளுக்கு மாற்று சேவைகள் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் எனில், முழுவதுமாக கூகுளை கைவிட்டு வேறு சேவைக்கு மாற வேண்டும் என்று பொருள் இல்லை. ( அதற்கான தேவையும், நியாயமும் இருந்தால் தாராளமாக மாறலாம்.) மாறாக, எப்போதெல்லாம் கூகுளுக்கான மாற்று சேவைகளை நாட வேண்டும் என அறிந்திருக்க வேண்டும்.

கூகுள் அதன் தேடல் பட்டியலில், முதல் முடிவாக வர்த்தக நோக்கிலான சேவையை முன் வைக்கும் போது மாற்று தேடியந்திரங்கள் அதே கீவேர்டுக்கு என்ன முடிவை முதலில் பட்டியலிடுகிறது என ஒப்பிட்டு பார்க்கலாம்.

அதே போல, பழைய செய்திகளை தேடும் போது கூகுள் அந்த செய்தியை அடையாளம் காட்டவில்லை எனில், இணையத்தில் அந்த செய்தியே இல்லை என நினைத்துவிட வேண்டும். அல்லது, கூகுள் அந்த செய்தியை பட்டியலிட்டாலும், அதன் உள்ளடக்கம் அணுக முடியாமல் இருந்தால் அந்த செய்தியை அணுக வேறு வழியில்லை என நினைக்க வேண்டாம்.

இது போன்ற தருணங்களில் மாற்று தேடியந்திரங்களை பயன்படுத்திப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். பல தருணங்களில், பழைய கட்டுரைகளியின் முழு தலைப்பை உள்ளிட்டு தேடியும் கூகுள் பட்டியலிடாத இணைப்பை போட்டித்தேடியந்திரமான மைக்ரோசாப்ட் பிங் பட்டியலிடுவதுண்டு. எனவே, பழைய செய்திகளை தேட வேண்டும் எனில் கூகுளோடு பிங் தேடியந்திரத்தையும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

அதோடு, பழைய செய்தி இணைப்பு கிடைத்தும் அதன் உள்ளடக்கம் கைக்கு எட்டாமல் இருந்தாலும், பிங் தேடலை நாடலாம். ஏனெனில், பிங் தேடியந்திரத்தில் ஒரு இணைப்பின் முந்தைய சேமிக்கப்பட்ட வடிவத்தை பார்க்கலாம். ( பெரும்பாலும்). கூகுள் இதற்கு முன், கேஷ எனும் முறையில் இந்த வசதியை வழங்கி கொண்டிருந்தது. ஆனால், இந்த வசதியை விலக்கி கொண்டுவிட்டது.

ஆக, கூகுளில் தேடியும் கிடைக்காத பழைய வடிவத்தை மைக்ரோசாப்ட் பிங்கில் தேடலாம்.

  • கூகுள் தேடலில் போதமைகள் பல இருந்தாலும், சாட்ஜிபிடியை கூகுளுக்கு மாற்று என சொல்வதை ஏற்க முடியவில்லை. ஏன் என்பதற்கான விவாதங்களையும், பின்னணியையும் ’சாட்ஜிபிடி சரிதம்புத்தகத்தில் காணலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *