மெகல்லன் எனும் மாயமாய் மறைந்த தேடியந்திரம்!

மெகல்லன் பற்றி தற்செயலாக தெரிந்து கொண்ட போது, இப்படி ஒரு தேடியந்திரம் இருந்ததா? எனும் வியப்பே ஏற்பட்டது. இணைய வரலாற்றில் ஆர்வம் உள்ளவன் என்ற முறையில், பழைய தேடியந்திரங்கள் பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும், இதற்கு முன் மெகல்லன் எனும் தேடியந்திரம் பற்றி அறிந்தது இல்லை.

அந்த கால தேடியந்திரங்கள் பற்றி கட்டுரைகளில் கூட, லைகோஸ், அல்டாவிஸ்ட்,இன்போசீக், எக்சைட், கோ, ஆஸ்க்ஜீவ்ஸ், ஹாட்பாட் போன்ற எண்ணற்ற தேடியந்திரங்களை அடிக்கடி எதிர்கொண்டிருந்தாலும், மெகல்லன் இதுவரை கண்ணில் பட்டதில்லை.

இணைய தேடல் வரலாறு தொடர்பான தேடலில் ஈடுபட்டிருந்த போது, அறிமுகமான இப்போது பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட இணைய தேடல் வல்லுனர் ஸ்காட் நிக்கல்சன் எழுதிய பழைய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தான் மெகல்லன் தேடியந்திரம் பற்றிய குறிப்பை பார்த்தேன்.

உடனே மெகல்லன் தேடியந்திரம் பற்றி மேலும் அறிய முயற்சித்த போது, கூகுள் தேடல், இதே பெயரிலான முன்னோடி கண்டுபிடிப்பாளர் பெர்னாண்டஸ் மெகல்லனை முன்னிறுத்தியதோடு, இதே பெயரிலான ஏஐ சேவைகளை இன்னும் பிற முடிவுகளையும் காண்பித்தது. ஆனால், மெகல்லன் தேடியந்திரத்தை காண முடியவில்லை.

நல்ல வேளையாக, மெகல்லன்+ தேடியந்திரம் என ஆங்கிலத்தில் தேடிய போது, மெகல்லன் தேடியந்திரம் தொடர்பான பழைய கட்டுரைகளை சிலவற்றை அடையாளம் காட்டியது.

பழைய கட்டுரைகள் வாயிலாக மெகல்லன் தேடியந்திரம் பற்றி தெரிந்து கொண்ட தகவல்களும் வியக்க வைக்கின்றன.

பிரிட்டன் ஊடக உரிமையாளர் மேக்ஸ்வெல்லின் வாரிசுகள் துவக்கிய இந்த தேடியந்திரம் 1995 ம் ஆண்டு அறிமுகமானது. அடுத்த ஆண்டே மற்றொரு முன்னணி தேடியந்திரம் எக்ஸைட் வசமானதால், மெகல்லன் தனித்து தெரியவில்லை. பின்னர் எக்ஸைட் நிறுவனமே மூடப்பட்டு விட்டது.

ஒவ்வொரு தேடியந்திரமும் இணைய தேடலில் புதிய பாதை காண முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில், மனிதர்களால் தேர்வு செய்து தொகுக்கபட்ட இணையதள கையேடாக அறிமுகமானது. இதில் தகவல்களை தேடும் போது, பட்டியலிடப்பட்ட பொருத்தமான இணையதளங்கள், அவற்றுக்கான விமர்சன குறிப்புகளையும் கொண்டிருந்தன.

இணையதளங்களை தேடி எடுத்து சீர் தூக்கிப்பார்த்து, விமர்சன குறிப்புகளை எழுதுவதற்கு என்றே தனியே ஆசிரியர் குழு பணியாற்றியது. விமர்சன குறிப்புகளோடு இணையதளங்களை அறிந்து கொள்ளும் வசதி என்பது நிச்சயம் அந்த காலத்தில் புதுமையாக இருந்திருக்கும். அதோடு நம்பகமான வழியாகவும் இருந்திருக்கும்.

இதே காலகட்டத்தில், இணையதளங்கள் பட்டியலிட்ட கையேடாக யாஹு அறிமுகமாகி புகழ் பெற்றாலும், எல்லா இணையதளங்களையும் அவற்றுக்கான விமர்சன குறிப்புகளுடன் அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது மெகல்லனின் தனிச்சிறப்பு.

இப்போது திரும்பி பார்க்கையில் மெகல்லன் காணாமல் போனதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

மெகல்லன் மட்டும் கையகப்படுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படிருந்தால், மகத்தான இணைய கையேடாக இருந்திருக்கும். ஆசிரியர் குழு கவனமாக பரிசீலித்து எழுதிய விமர்சன குறிப்புகளோடு ஒவ்வொரு இணையதளங்களை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்.

இணையதளங்கள் வெடித்து பெருகத்துவங்கிய காலத்தில் விமர்சன குறிப்புகளை எழுதுவது சவாலாக இருந்திருக்கும் என்றாலும், வலை 2.0 அலையை பயன்படுத்தி இணையவாசிகள் பங்களிப்போடு இதை செய்திருக்கலாம். இணையதள விமர்சனங்களுக்கான விக்கிபீடியாவாக கூட உருவாகியிருக்கலாம்.

மெகல்லான் மாபெரும் வலை 2.0 தேடியந்திரமாக உருவாகாமல் போனது ஒரு ஏமாற்றம் என்றால், இதன் சுவடுகளை இணையத்தில் காண்பதும் அரிதாகி இருப்பது இன்னும் பெரிய ஏமாற்றம்.

மெகல்லன் எனும் பெயரில் ஒரு தேடியந்திரம் இருந்தது எனத்தெரியாத யாரும், மெகல்லன் எனும் தேடலில் இதை கண்டறிய வாய்ப்பில்லை. அதோடு, பிரப்ளக்சிட்டி போன்ற ஏஐ தேடியந்திரங்களிடம் மெக்கலன் பற்றி கேட்டாலும், அவை தேடியந்திரம் தொடர்பான சரியான பதிலை அளிக்கவில்லை. எனவே ஏஐ தேடலிலும் இதை அறிய முடியாது. ஏஐ தேடலின் போதாமைகளில் ஒன்றாக இதை நினைவில் கொள்வது நல்லது.

மெகல்லன் பற்றிய பழைய கட்டுரை: https://onioncity.io/clearweb/magellan/

https://web.archive.org/web/19981206173231/http://www2.mckinley.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *