லினக்ஸ் வார இதழ் ஒரு அறிமுகம்

இணைய யுகத்தில் ஒரு வார இதழ் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

உள்ளடக்கம், வடிவமைப்பு, விநியோகம், முக்கியமாக நிதி ஆதாரம் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு நோக்கினாலும், இந்த கேள்விக்கான பதில் ’லினக்ஸ் வார இதழாக’ அமைகிறது. –  https://lwn.net/

இணைய யுகத்தின் வார இதழ் என குறிப்பிடக்கூடிய முன்னோடி இணைய சஞ்சிகைகள் ஒரு சில இருந்தாலும், லினக்ஸ் சமூகத்திற்கு என்றே பிரத்யேக பத்திரிகைகளும், செய்தி தளங்களும் பல இருந்தாலும், எல்.டபிள்யூ.நெட் என குறிப்பிடப்படும் லினக்ஸ் வார இதழ் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகிறது.

ஆனால் ஒன்று, உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் என்பது போல, இதன் முகப்பு பக்கத்தை கண்டு ஏமாந்துவிட வேண்டாம். அதோடு, தகவல் நோக்கில் இந்த இணைய இதழின் தன்மையை புரிந்து கொள்ள லினக்ஸ் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் லினக்ஸ் மீது ஆதித ஆர்வம் கொண்டவர்கள் இருப்பதையேனும் அறிந்திருக்க வேண்டும்.

வலை 1.0 கால வடிவமைப்பு கொண்டுள்ள இதன் முகப்பு தன்மையை கொண்டு இதன் தரத்தை தீர்மானிக்காமல், இதில் என்ன இருக்கிறது என அறிந்து கொள்ள முற்பட்டால், சகலமும் லினக்ஸ் சார்ந்து இருப்பதை உணரலாம். லினக்ஸ் சமூகத்தின் அண்மை செய்திகளில் துவங்கி, அதன் ஆகச்சிறந்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், முக்கிய விவாத சரடுகள், குறிப்பிடத்தக்க போக்குகள் என செய்திகளும், கட்டுரைகளும் அமைந்திருக்கும்.

செய்திகளுக்கான வடிவமைப்பு அந்த கால விவாத குழு சரடு போலவே இருப்பதையும் உணரலாம்.;

லினக்ஸ் சார்ந்த செய்திகளை வார பதிப்பாக தொகுத்தளிக்கும் இதழ் என்பதால், முகப்பு பக்கத்தில் அண்மை இதழ் கட்டுரைகளை பார்க்கலாம். இந்த கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்றால் உறுப்பினராக இருக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் அல்லாதோர் கவலைப்பட வேண்டாம், சற்று தாமதமாக இந்த கட்டுரைகளை கட்டணச்சுவர் இல்லாமல் வாசிக்கலாம்.

முகப்பு பக்கத்தில் இடப்பக்கத்தில் உள்ள தகவல் பட்டியல் வாயிலாக உள்ளட்டக்கத்தை இன்னும் எளிதாக அணுகலாம். வார பதிப்பு எனும் தலைப்புக்கு கீழ், கடந்த கால இதழ்களை ஆவண கோப்புகளாக அணுகலாம். குறிப்பிட்ட கட்டுரைகளை கண்டறிவதற்கான தேடல் வசதியும் இருக்கிறது. லினக்ஸ் நிகழ்வுகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றுக்கான தலைப்புகளும் பட்டியலில் உள்ளன.

அதற்கும் கீழ், வார இதழ் வரலாறு தொடர்பான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் மிக்க பயனாளிகள் எனில், தங்களுக்கு தேவையானதை எளிதாக கண்டறியலாம். புதியவர்கள் எனில், தளத்தின் தன்மையை புரிந்து கொண்டு பழைய இதழ்களில் மூழகலாம்.

லினக்ஸ் சார்ந்த செய்திகளையும், தகவல்களையும் வார இதழாக தொகுத்தளிக்கும் தன்மையும், அவற்றை எளிதாக அணுகும் வகைப்படுத்தலும் இந்த தளத்தின் சிறப்பம்சம். அனலாக் பத்திரிகைகளின் முகப்பு பக்க படம், அட்டவணை போன்றவை எல்லாம் இல்லாமலே உள்ளடக்கத்தின் மூலம் இந்த தளம் கவர்கிறது.

அதோடு, உறுப்பினர்களின் கட்டணம் மூலம் இயங்குகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கட்டணம் செலுத்தலாம், மற்றவர்கள் தாமதமாக உள்ளடக்கத்தை அணுகலாம். கட்டுரைக்கான தகவல்களையும் பயனாளிகள் பகிரலாம்.

இடையே ஏற்பட்ட சோதனைகளை மீறி, 28 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வார இதழை முன்னோடி செய்தி இதழ்களில் ஒன்றாகவும் கருதலாம்.

பி.கு: செய்தி நோக்கில் வழிகாட்டும் இணைய செய்தி கையேட்டில், நூறு தளங்களை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த பட்டியலில் விடுபட்ட முக்கிய தளங்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக லினக்ஸ் வார இதழை கருதலாம்.

* லினக்ஸ் வார இதழ் தளம், Jonathan Corbet and Elizabeth Coolbaugh ஆகியோரால் நடத்தப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *