Tag Archives: net

இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு; கொண்டாடும் இணையம்

Car-cv0W0AADWF7
இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்ட கட்டணங்கள் தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள உத்தரவு, இந்தியாவில் பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்தை செல்லாததாக ஆக்கியிருப்பதோடு, எந்த விதத்திலும் இணைய சேவைகளுக்கு உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறு வேறு கட்டண விகிதங்களை வசூலிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதன் பொருள் இணைய சேவைக்கான கட்டணம் ஒரே விதமாக தான் இருக்க வேண்டும்.

இந்த உத்தரவை தான் இணைய சமநிலை ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டிவிட்டரில் இந்த கொண்டாட்டம் குறும்பதிவுகள் பொங்கி கொண்டிருக்கின்றன.இணைய சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது போற்றப்படுகிறது. இணைய சமநிலைக்கு ஆதரவான கருத்துக்களை பிரதிபலிப்பதுடன், இந்த விவகாரத்தில் பேஸ்புக் மண்ணை கவ்விய விதத்தையும் அவை கேலி செய்து கொண்டிருக்கின்றன.

இணைய சமநிலை ஆதரவாளர்களின் மனநிலையை உணர்த்தும் குறும்பதிவுகள் #NetNeutrality எனும் ஹாஷ்டேகின் கீழ் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்திய இணையவாசிகள் மட்டும் அல்லாமல் சர்வதேச இணையவாசிகளும் இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்வத்துடன் குறும்பதிவிட்டு, இணைய சமநிலைக்கு ஆதரவான உத்தரவை வரவேற்றுள்ளனர்.

இந்த குறும்பதிவு அலைகளை பார்ப்பதற்கு முன்பாக, டிராய் உத்தரவின் சாரம்சம்,அதன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

* எந்த ஒரு இணைய சேவை நிறுவனமும் உள்ளடக்கத்தின் அடிப்ப்டையில் டேட்டாவுக்கான கட்டணத்தை பாரபட்சமான முறையில் வழங்க கூடாது.

* எந்த இணைய சேவை நிறுவனமும், பாரபட்சமான முறையில் இணைய சேவையை வழங்க யாருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது.
CasAIeZUsAA3j5d
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிராய் அமைப்பு டிபரன்ஷியல் பிரைசிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட கட்டண விகிதங்கள் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டது.மாறுபட்ட கட்டணங்கள் என்பது இணைய சேவைக்கு அவை பயன்படுத்தும் விதங்களுக்கு ஏற்ப வேறு வேறு கட்டணங்களை வழங்குவதாகும். ஒரு சில இணையதளங்களை மட்டும் டேட்டா கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கும் ஜிரோ ரேட்டிங் திட்டமும் இதன் கீழ் தான் வருகிறது.

உள்ளடக்கத்திற்கு ஏற்ப மாறுபட்ட கட்டணங்கள் முறை இணையசமநிலைக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பேஸ்புக் நிறுவனம் தனது பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மெயில் அனுப்புமாறு பேஸ்புக் தனது பயனாளிகளுக்கு கோரிக்கை வைத்தது கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் இலக்கானது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டுமே இலவசமாக வழங்கும் பிரிபேசிக்ஸ் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

இந்த விஷயத்தில் தான் டிராய் அமைப்பு இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. டேட்டா சேவைகளுக்கான பாரபட்சமான கட்டண முறைகள் தடை கட்டுப்பாடுகள்,2016 எனும் பெயரிலான அறிவிக்கையில் இது தொடர்பாக கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்ப வார்த்தைகளை விலக்கி விட்டுப்பார்த்தால், இணைய சேவைகளுக்கு எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. மாறுபட்ட கட்டணங்களுக்கு அனுமதிக்க முடியாது என கூறப்பட்டிருப்பது பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு த்டை விதிப்பதாக அமைந்துள்ளதோடு, இணைய சமநிலைக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இணையம் திறந்த வெளி தன்மை கொண்டதாகவும் ,பாரபட்சமற்ற முறையிலும் இருக்க வேண்டும் என்றும் டிராய் கூறியுள்ளது.

இணைய சமநிலை ஆர்வலர்கள் கோரி வந்ததும் இது தான். பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு எதிரான முன்வைக்கப்பட்ட வாதமும் இது தான். கட்டுப்பாட்டு அமைப்பான டிராயும் இதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருப்பது இணைய சமநிலை ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சுந்தர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, இணைய சமநிலை காக்கப்பட்டுள்ளது எனும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
CasHZvSVAAE2-Nc
இந்த மனநிலையையும், இதன் பின்னே உள்ள நிலைப்பாட்டையும் புரிய வைக்கும் டிவிட்டர் பதிவுகள் வருமாறு:

* மீடியாநாமா; டிராய் உத்தரவு இணைய சேவைகளுக்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் சாத்தியமில்லை என தெரிவிக்கிறது.

* ரெனேடா அவிலா; உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஜீரோ ரேட்டிங்கிற்கு தடை விதித்துள்ளது. துணிச்சலான இந்தியா

* கார்திக் பாலகிருஷ்ணன்; மாறுபட்ட கட்டணங்களுக்கு டிராய் தடை.இணையமாகிய நாம் சாதித்துவிட்டோம்.

* வீணா வேனுகோபால்; டிராய் இணைய சமநிலைக்கு ஆதராவாக் உத்தவு. மாறுபட்ட கட்டணங்கள் இல்லை.

* ஸ்பார்கிள்; வேலைவாய்ப்பு,கல்வி,தகவல் போலவே இணைய சமநிலையும் மக்களின் உரிமை.

* குணால் பால்; இணைய சமநிலைக்கு டிராய் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இணையத்தை சுந்திரமாக வைத்திருப்போம்.

எனும் ஹாஷ்டேகில் இவற்றை பின் தொடரலாம்.

இவை எல்லாவற்றையும் விட ஜேக்கர்ஹேக் எனும் டிவிட்டர் பயனாளியின், இந்த குறும்பதிவு மிக அழகாக இந்த போராட்டத்தின் வெற்றியை உணர்த்துகிறது; நாம் வென்று விட்டோம். #SaveTheInternet இனி #SavedTheInternet.

———–

நன்றி; யுவர்ஸ்டோரியில் எழுதியது

NM_16Ahmed10

அறிவியல் ஆர்வத்தால் கைதான மாணவருக்கு ஆதரவாக இணைய குரல் !

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அகமNM_16Ahmed1து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மத்த்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.
நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது.இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது.
இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது.

அகமது குடும்பத்தினர் இந்த நிகழ்வு தொடர்பாக @IStandWithAhmed எனும் பெயரில் டிவிட்டர் கணக்கு துவங்கி இந்த நிகழ்வை பதிவு செய்து வருகின்றனர்.

நன்றி;விகடன்.காமில் எழுதியது

Screen+Shot+2015-06-03+at+8.30.28+PM

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம்.

கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் வரை பல அரிய இடங்களை ஸ்டிரீட்வியூவில் பார்க்கலாம்.

இப்போது கூகுள் கடலுக்கடியிலும் இந்த சேவையை கொண்டு சென்றுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள சகோஸ் தீவுகள் , டென் பசுபிக் பெருங்டலில் உள்ள அமெரிக்கன் சமோவா உள்ளிட்ட பல அரிய கடல் பகுதிகளை ஸ்டிரீட்வியூ காட்சியாக்கி இருக்கிறது. இந்த பகுதிகளுக்கான இணைப்பை கிளிக் செய்தால் அவற்றின் அழ்கடல் காட்சிகளை சுற்றிலும் பார்க்கலாம். அந்த அந்த பகுதியில் காணப்படும் அரிய விலங்குகளுடன் சேர்ந்து நீந்துவது போன்ற உணர்வுடன் இந்த காட்சிகளை காணலாம்.

நிலத்தில் பிரத்யேக் காமிரா கொண்டு 360 கோண காட்சிகளை படம் பிடிப்பது போல ஆழ்கடல் பகுதியில் இந்த காட்சிகளை கூகுள் குழு படம் பிடித்துள்ளது. உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த காட்சிகளை கூகுள் பதிவேற்றியுள்ளது.

இந்த ஆழ்கடல் காட்சிகள் கடல் உயிரினங்களை கண்டு ரசிப்பதற்கு மட்டும் அல்ல; பருவநிலை மாற்றத்தால் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

பூமியின் பெரும்பகுதி உயிரினத்தை கொண்டிருக்கும் பெருங்கடல்கள் பருவநிலை முதல், மழை , பிராணவாயு என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினாலும் மாசுபடுதல் மற்றும் அதிக மீன்பிடி காரணமாக அவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ,இது நம் காலத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த காட்சிகள் எதிர்காலத்தில் ஆழ்கடலில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கான டிஜிட்டல் அடையாளமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆக, உலக பெருங்கடல் தினத்தில் ஆழ்கடலில் ஒரு உலா வாருங்கள். பெருங்கடல் நிலை பற்றிய விழிப்புணர்வையும் பெறுங்கள்!.

ஆழ்கடலில் உலா வர;http://google-latlong.blogspot.fr/2015/06/explore-life-beneath-waves-in-honor-of.html

—–

e

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன.
நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.
கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் காட்சி மொழியை மெருக்கூட்ட புதிய இமோஜி எழுத்துக்கள் அடுத்த ஜூனில் அறிமுகமாக உள்ளன.
இணையத்தில் பயன்படுத்தும் எழுத்துருக்களை தர நிர்ணயம் செய்யும் பொறுப்பை வகிக்கும் யூனியோர்ட் கூட்டமைப்பின் இமோஜி குழு இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய இமோஜிகள் வரும் ஜூனில் கீப்போர்டுகளுக்கும் டச்பேடுகளுக்கும் வருகை தர உள்ளன. அடுத்த அப்டேட்டாக இமோஜி 9.0, 38 எழுத்துக்களுடன் அமைய உள்ளது.
புதிய இமோஜி எழுத்துக்களில் செல்ஃபிக்கான உருவமும், உடல் நலம் சரியில்லை என உணர்த்தும் உருவமும் அடங்கும் என்பது கூடுதல் சுவாரஸ்யம். போன் பேசுவதை உணர்த்தும் இமோஜியும் காத்திருக்கிறது. சுறா,நரி, வாத்து உள்ளிட்ட ஆறு விலங்குகளும் இமோஜி வடிவம் எடுக்க உள்ளது.
இமோஜி ரசிகர்களிடம் இருந்து வந்த கோரிக்கை மற்றும் இதர அம்சங்களை பரிசிலித்து புதிய இமோஜிகளுக்கு ஓகே சொல்லப்பட்டுள்ளது. செல்ஃபி இமோஜி மட்டும் இணையத்தில் எக்கச்சக்கமாக தேடப்பட்டதால் மேள தாள மரியாதையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பட்டியலை யூனிகோடின் இமோஜி குழு வெளியிட்டுள்ளது.- (http://www.unicode.org/L2/L2015/15054r4-emoji-tranche5.pdf )
இமோஜி என்பது வரலாற்றின் வேகமாக வளரும் காட்சி மொழி எனும் சான்றிதழை பிரிட்டன் ஆய்வாளர் ஒருவர் வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது அழகான தற்செயல் தான்.
நிற்க, இமோஜி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமா? ஆம் எனில் உங்கள் இமோஜி அறிவை பரிசோதித்துக்கொள்ளும் வினாடி வினாவை பேராசிரியர் வயான் ஈவன்ஸ் ( Vyvyan Evans ) உருவாக்கியுள்ளார். மொழியியல் வல்லுனரான இவர் தான் இமோஜிகளுக்கு வேகமாக வளரும் காட்சி மொழி சான்றிதழ் வழங்கிய ஆய்வாளர். இதோ இமோஜி சோதனை.;https://www.testyouremojiiq.com/

——-

தளம் புதிது; ஏ.ஐ பற்றி எல்லாமும்!

இணையத்தில் புதிதாக ஒரு வீக்லி அறிமுகமாகி இருக்கிறது. ஏ.ஐ பற்றிய செய்திகளை சுடச்சுட தருவதற்காகவே இமெயில் வார இதழாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ என்றால் செயற்கை அறிவை குறிக்கும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பத்ததின் சுருக்கம். ஏகப்பட்ட எந்திரன்களும் , தானியங்கி கார்களும் இந்த பிரிவின் கீழ் தான் வருகிறது. எதிர்காலத்தில் ஏ.ஐ தாறுமாறாக முன்னேற்றம் காண இருப்பதாக பலரும் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கை கொண்டவர்கள் இத்துறை செய்திகளை தவறவிடாமல் தெரிந்து கொள்வதற்கான வழி தான் ஏஐவீக்லி இணையதளம்: http://aiweekly.co/

——–

செயலி புதிது;

ஸ்மார்ட்போனில் உள்ள காமிராவை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என நினைத்துப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். பாருங்கள், புதிய அலாரம் செயலி ஒன்று காமிராவை கொண்டு அசத்தலான வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. ஆண்டாய்டுக்கான இந்த செயலி (Wave Alarm) மூலம் தினமும் காலையில் கண்விழிக்க அலாரம் செட் செய்யலாம். அதன் பிறகு காலையில் அலாரம் துயிலெழுப்பும் போது அதை நோக்கி கை அசைப்பது மூலமே அதை அமைதியாக்கி விடலாம். காமிரா மூலம் கையின் சைகையை புரிந்து கொண்டு செயல்படுகிறது இந்த செயலி; ஆனால் கையசைத்து விட்டு மறுபடியும் தூங்கி விட்டால் செயலி பொறுப்பல்ல: https://play.google.com/store/apps/details?id=com.camalarm.app

கேட்ஜெட் புதிது; ப்ளு-கனெக்ட்
ஜீப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் ப்ளு கனெக்ட் எனும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒலிபெருக்கிகள், கார் ஸ்டீரியோ, ஹெட்போன்கள் போன்ற ப்ளூடூத் அல்லாத சாதனத்தை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்றுகிறது.ப்ளூ-கனெக்ட் பல்வகை பயன்பாடு கொண்ட சாதனம். இதனால் பல பயன்பாட்டில் உள்ள சாதனங்களுக்கு ப்ளூடூத் அம்சத்தை சேர்க்க முடியும். இதை பயனப்டுத்துவதும் தகவமைப்பதும் சுலபம் என்று ஜீப்ரானிக்ஸ் தெரிவிக்கிறது. ப்ளு-கனெக்ட் ஒலி அவுட்புட்டுக்காக 3.5mm ஆடியோ ஜேக்குடன் வருகிறது. இதற்குள் ஒரு li-ion பேட்டரியும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரவுசர் ரகசியம் !

இணையத்தில் நீங்கள் விஜயம் செய்யும் இணைய பக்கங்களை எல்லாம் உங்கள் பிரவுசர் குறித்து வைப்பது மட்டும் அல்ல சேமித்தும் வைக்கிறது தெரியுமா? அதனால் என்ன என்கிறீர்களா. இணைய இணைப்பு துண்டான பின்னும் ஏற்கனவே நீங்கள் விஜயம் செய்த இணைய பக்கங்களை இந்த வசதி மூலம் பார்க்கலாம், பயன்படுத்தலாம் என்பது தான் விஷயம். குரோம் பிரவுசரில் ஆட்டோ ரீலோட் அல்லது ஷோ சேவ்டு காபி கட்டளை மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம் என ஆண்ட்ராய்டு போலீஸ் தளம் சொல்கிறது. இந்த வசதியை பயன்படுத்த குரோமில் chrome://flags -ல் மேலே சொன்ன கட்டளையை வரவைத்து செயல்படுத்தவும்.


இணையம் கொண்டான்

இணையத்தில் கேலிக்கு ஆளாகி தலைகுணிந்து நின்ற மனிதர் இணைய வெற்றிக்கதையாகி இருக்கிறார். அவரது பெயர் சீன்’ஒ பிரைன். அதற்கு முன்னர் குண்டு மனிதராக அறியப்பட்டார். இணையத்தில் சிலரால் இகழப்பட்டார். பிரிட்டனை சேர்ந்த பிரைன் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாட முற்பட்ட போது, அவரது உடல் வாகினால் கேலி செய்யப்பட்டார். அவர் நடமாடும் புகைப்படமும் ,கேலி வாசகமும் இணையத்தில் வெளியானது. ஆனால் அதன் பிறகு நடந்தது தான் இணைய அற்புதம். உடல் பருமனால் கேலிக்கு இலக்கான அவருக்கு ஆதரவாக் டிவிட்டரில் குறும்பதிவுகள் குவிந்தன. உடல் அமைப்பு ஒருவரின் நடனமாடும் சந்தோசத்திற்கு ஒரு தகுதியாக இருக்க கூடாது என இணையவாசிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்காவை சேர்ந்த காஸ்ண்ட்ரா பேர்பேங்க்ஸ் எனும் எழுத்தாளர் உள்ளிட்ட பெண்கள் , அப்போது நடன்மாடும் மனிதர் என்று மட்டுமே அறியப்பட்ட அவருக்காக நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக கூறி அவரை கண்டறிய வேண்டுக்கொள் விடுத்தனர். இந்த ஆதரவால் நெகிழ்ந்த நடனமாடும் மனிதர் தன்னை டிவிட்டரில் வெளிப்படுத்திக்கொண்டார்.
அவருக்காக திட்டமிடப்பட்ட நடன நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் கோலாலகமாக நடந்திருக்கிறது. பிரைன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்திருக்கிறார். அவரை கேலி செய்தவர்களை இணையம் தலை குணிய வைத்துவிட்டது.

நன்றி; தமிழ் இந்து

monica

பரிவு மிக்க இணையம் வேண்டும்; மோனிகா லெவின்ஸ்கி உருக்கம்.

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் தன்னைப்போன்ற பாதிப்புகுள்ளாகிறவர்கள் சார்பில் பரிவு மிக்க இணையம் வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப்பெண்ணாக இருந்ததும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாகி நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதி தான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டும் அல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டு மவுனத்தை களைத்து கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட்டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்த போது தான் இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் வேதவையின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.

லெவின்ஸ்கி -கிளிண்டன் விவகாரம் இணையத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து அதன் பிறகு உலகை உலுக்கியது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் இது பேசப்பட்டு அவர் தலைகுணிந்து நின்றார்.

இந்நிலையில் மோனிகா லெவின்ஸ்கி, டெட் அமைப்பின் சார்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களை எழுந்து நின்று கைத்தட்டி ஆங்கிகரிக்க வைத்த இந்த உரையில் அவர் இணைய கலாச்சாரம் மற்றும் போக்கு தொடர்பாக கவலை தரும் பல விஷ்யங்களை சுட்டிக்காட்டி பரிவு மிக்க இணையத்தின் அவசியம் பற்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இப்போது இணையச்சீண்டல் என அறியப்படும் பிரச்சனையின் முதல் உதாரணம் தான் என்று கூறியவர், 22 வயதில் எனது மேலதிகாரியுடன் நான் காதலில் விழுந்தேன். 24 வயதில் அதன் மோசமான பாதிப்பை அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டார்

தன்னுடைய தனிப்பட்ட அவமானத்தை இணையம் பன்மடங்கு மோசமாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் டிஜிட்டல் புரட்சியால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதாக குறிப்பிட்டவர் ,தனிப்பட்ட நபராக இருந்த நிலை மாதிரி உலகம் முழுவதும் அவமானத்திற்கு இலக்காக்கப்பட்டவர் , இணையம் முழுவது கல்வீச்சுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டு , மதிப்பை இழந்து, கவுரவத்தை இழந்து கிட்டத்தட்ட வாழ்க்கையையும் இழந்துவிட்டதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டார்.
அவமானத்தின் உணர்வை தொழில்நுட்பம் பன்மடங்காக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தவர், முன்பு நண்பர்கள் வட்டம் , குடும்பத்தினரோடு முடிந்த விஷயம் இப்போது முழு இணைய சமூகத்திற்கும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.

இணையம் மற்றவர்களின் வலி மற்றும் தவிப்பு குறித்து உணர்ச்சியற்று போகச்செய்திருப்பதாக கூறியவர் , அவமானப்படுத்தும் கலாச்சாரத்தில் இருந்து விலகி பரிவு மற்றும் அக்கறை கொண்ட இணையம் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பரிவான பின்னூட்டம் எதிர்மறையான கருத்துக்களை வெல்ல உதவும் என்று கூறியவர் பரிவு எல்லோருக்கும் நலன் பயக்கும் என்றார். மற்றவர்கள் தலைப்புச்செய்தியில் ஒரு மைல் தூரம் பயணித்து பாருங்கள் என்றும் கூறியவர், இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் எவரும் இதை தாக்கு பிடித்து எழுந்து நிற்பது சாத்தியம் என உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோனிகா லெவின்ஸ்கியின் டெட் உரை: http://blog.ted.com/imagine-walking-a-mile-in-someone-elses-headline-monica-lewinsky-speaks-at-ted2015/

——