செய்திகளை தெரிந்து கொள்ள ஒரே ஒரு இணையதளம் தேவை என நினைப்பவர்கள் நியூஸ்நவ் (https://www.newsnow.co.uk/h/ ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். நியூஸ் அக்ரகேட்டர் என சொல்லப்படும் செய்தி திரட்டி வகையைச் சேர்ந்ந்த நியூஸ் நவ், உலகின் ஆயிரக்கணக்கான நாளிதழ் தளங்கள், செய்தி தளங்களில் இருந்து செய்திகளை தொகுத்தளிக்கிறது. எண்ணற்ற இடங்களில் இருந்து செய்திகளை திரட்டித்தந்தாலும், இதன் முகப்பு பக்கம் செய்திகளை எளிதாக அணுகும் வகையில் இருக்கிறது.
சூடாத தலைப்புகள், உலக செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளை காணலாம். இவைத்தவிர, அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப முக்கிய தலைப்புகளிலும் செய்திகளை அணுகலாம். இப்போது ஈரான் – இஸ்ரேல் மோதல், உக்ரைன் போர், இஸ்ரேல் –பால்ஸ்தீனம் உள்ளிட்ட சிறப்பு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
உலக பதிப்பு, யுகே பதிப்பு, அமெரிக்க பதிப்பு உள்ளிட்ட தனிப்பட்ட பதிப்புகளும் உள்ளன.
செய்திக்கான இணைப்பை கிளிக் செய்தால் மூலத்தை சென்றடையலாம். செய்திகள் தொடர்பான முக்கிய குறிச்சொற்கள் அடையாளம் காட்டப்படுவதோடு, அதே செய்தியை வேறு செய்தி தளங்களில் வாசிக்கும் வசதியும் உள்ளது. செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால், பயனாளிகள் தங்களுக்கான தனிப்பட்ட செய்தி வசதியை அமைத்துக்கொள்ளலாம். கட்டணம் செலுத்தி உறுப்பினரானால் கூடுதலாக பல பிரத்யேக வசதிகளை அணுகலாம்.
1997 முதல் இணையத்தில் செயல்பட்டு வரும் செய்தி திரட்டி சேவை.
–
செய்தி வழிகாட்டியான இணைய செய்தி கையேடு சேவையின் நீட்டிப்பாக இடம் பெறும் செய்தி தளங்கள் பட்டியலின் கீழ் வருகிறது.