சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல் சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏஐ மொழியில் இந்த உளறலை ஹால்யுசினேஷன் (hallucination) என்று சொல்கின்றனர்.
அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இல்லாத, பயிற்சி அடிப்படையில் அளிக்க வேண்டிய பதில்களுக்கு மாறாக, இல்லாத தகவல்கள் கொண்ட பதிலை சாட்ஜிபிடி அளிக்கும் போது, அது உளறிக்கொடுவதாக கருதப்படுகிறது.
இது சாட்ஜிபிடியின் பிழை அல்ல: அதன் பின்னே உள்ள மொழி மாதிரியின் (language models) கோளாறு. எல்லா மொழி மாதிரிகளிலும் இந்த சிக்கல் உள்ளது.
ஏஐ சேவைகள் உளறிக்கொட்டுது மட்டும் அல்ல, அவை மிகுந்த நம்பிக்கயோடு இல்லாத பொய்த்தகவல்களை இருப்பதாக முன் வைக்கின்றன. எனவே, சில நேரங்களில் நடக்கவே நடக்காத சம்பவங்கள் செய்திகளாக, கட்டுரைகளாக அளிக்கப்படலாம்.
ஏஐ உளறல்கள் ஏன் நிகழ்கின்றன? இந்த கேள்விக்கான எளிய விளக்கம்:
சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரிகள் அடிப்படையில், குறிப்பிட்ட சூழலில் கொடுக்கப்பட்ட முந்தைய வார்த்தைகளை கொண்டு அடுத்த வார்த்தை என்ன என்பதை யூகிக்கின்றன.
ஆனால் அடுத்த வார்த்தை யூகிப்பதில் தீர்மானமான அணுகுமுறை இல்லாமல், நிகழ்தகழ்வு அடிப்படையிலான தோராய தன்மை (randomness ) இருக்கிறது. எனவே ஒவ்வொரு முறையில், வெவ்வேறு யூகங்கள் அடிப்படையில் வார்த்தைகள் முன்வைக்கப்படும். சாட்ஜிபிடி ஒரே கேள்விக்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில் அளிக்க இதுவே காரணம். இவை ஏஐ கிளிப்பிள்ளைகள் என அழைக்கப்படுவதும் இதனால் தான்.
இந்த உத்தேச தன்மையில் சில நன்மைகளும் இருக்கின்றன. பயனாளிகள் நோக்கில் இது விரும்பிய பதிலாக அமையலாம். அதே நேரத்தில் பயனாளிகள் கருத்தறிந்து, ஏஐ செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.
இந்த தன்மையே, மொழி மாதிரிகள் பல நேரங்களில் உளறிக்கொட்டவும் காரணமாகிறது.
–
சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தில், ஏஐ கிளிப்பிள்ளைகள், ஏஐ உளறல் பற்றிய விளக்கம் விரிவாக உள்ளது.