நான் டாட்காம்காரன்!
யார் இவர்?
பெயர் மிட்ச மேடாக்ஸ்- Mitch Maddox , கம்ப்யூட்டர் வல்லுனர்
25 ஆண்டுகளுக்கு முன் இவர் இணையத்தில் அதிரடியாக மேற்கொண்ட பரிசோதனை வாழ்க்கைக்காக இப்போது நாம் அவரை திரும்பி பார்க்கிறோம்.
2000 ல் அதிரடி முடிவு எடுத்து, அடுத்த ஓராண்டு இ-காமர்சும் நானும் மட்டுமே என்று அறிவித்தார். அதற்கேற்ப தனது பெயரையும் அதிகாரப்பூர்வமாக டாட்காம்காரன் (DotComGuy ) என மாற்றிக்கொண்டார்.
இந்த ஓராண்டு காலமும், தனி வீட்டுக்குள் கம்ப்யூட்டரும், இணையமும் தானும் மட்டுமே இருக்கப்போவதாக தெரிவித்தார். அவரது செல்லப்பிராணி நாய் மட்டும் உடன் இருக்கும்.
–
ஏன்?
எங்கும் டாட்காம் அலை வீசிக்கொண்டிருந்த காலம். இணையத்தின் ஆற்றலால், புதிய ஐடியா இருந்தால் போதும், சொந்தமாக நிறுவனம் துவக்கி வெளுத்துக்கட்டலாம் என கருதப்பட்டது. பலரும், இதற்கேற்ப டாட்காம்களை துவக்கி முதலீடுகளை அள்ளினர். சிலர் சும்மாவேனும், தங்கள் நிறுவன பெயருடன் டாட்காமை சேர்த்துக்கொண்டனர்.
இ- காம் அலை
டாட்காம் அலையில் பலரும் மிதந்து கொண்டிருந்த பின்னணியில், மேடாக்ஸ் தன் பங்கிற்கு இ-காம் அலையில் மூழ்கி திளைக்கலாம் என நினைத்தார். அமேசான் உள்ளிட்ட இகாம் நிறுவனங்கள் பரப்பரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த சூழலில், இகாம் பெருமையை உணர்த்தும் வகையில், ஓராண்டுக்கு எல்லா பொருட்களையும் இணையம் மூலம் மட்டுமே வாங்கி தனி வீட்டில் வாழ்ந்து காட்டுவேன் என கூறி கவனத்தை ஈர்த்தார்.
எல்லாம் லைவ்
தனி வீட்டில் இருந்தவர், தனது இகாம் படலத்திற்காக என்று டாட்காம்கய் எனும் இணையதளத்தையும் அமைத்திருந்தார். அந்த தளத்தில் இந்த பரிசோதனை பற்றி விளக்கம் அளித்தவர் இன்னும் பல விவரங்களையும் அளித்திருந்தார். அவரது தினசரி நடவடிக்கைகளை வெளியிட்டதோடு, 16 காமிராக்களோடு இணையத்திலும் ஒளிபரப்பு செய்தார். இணைய பிக்பாஸ்!
என்ன ஆனது?
இந்த பரிசோதனைக்காக பெரிய அளவில் ஸ்பான்சர்கள் கிடைத்தனர். லட்சக்கணக்கில் டாலர்கள் ஒப்பந்தம் ஆனதாக பேசப்பட்டது. சோதனை இறுதியில் தனி விமானத்தில் வெளியே வருவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகி சில மாதம் பரபரப்பு நிலவினாலும், அடுத்து வந்த மாதங்களில் ஆர்வம் குறைந்தது. சோதனை முடிவதற்கு முன் ஆர்வம் காணமால் போய்விட்டது.
மேடாக்ஸ் எதிர்பார்த்த பலன் கிடைக்காததோடு, அவரது இணையதள முகவரியும் ஏலத்தில் எடுபடவில்லை. கடைசியில் டாட்காம்காரன் பெயரை விட்டுவிட்டு சொந்த பெயருக்கு மாறி பின் காணாமல் போனார்.
இது டாட்காம் காரனின் கதை.
இனி இந்த கதை நமக்கு சொல்லும் பாடத்தை பார்க்கலாம்.
டாட்காம் அலைக்கு மத்தியில், மேடாக்ஸ் மேற்கொண்டது ஒரு புத்திசாலித்தனமான விளம்பர முயற்சி. ஆனால், இதில் புதுமை இருந்த அளவுக்கு பலன் இல்லாமல் போனது.
அந்த காலத்திலேயே கடும் விமர்சனமும் எழுந்தது.
பொருட்களை வாங்குவதை தவிர இதில் எந்த புதுமையில் இல்லை என்றனர்.
இன்னும் சிலர், பொருட்களை வாங்குவதை மட்டும் முன்வைத்து இணையத்தின் வணிகத்தன்மையை நிறுவுகிறார் என விமர்சித்தனர்.
இதனிடையா பத்திரிகையாளர் ஒருவர் நோகாம்காரன் (NotComGuy) என பெயர் வைத்துக்கொண்டு இந்த சோதனையை கேலியும் கிண்டலுமாக விமர்சித்தார். சமூகத்தில் இருந்து விலகுவதற்கு பதிலாக இணையத்தில் இருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.
எது எப்படியோ, டாட்காம்காரன் சோதனை எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், இ-காமர்ஸ் வளர்ச்சியில் அவருக்கு ஒரு சிறிய பங்கு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதோடு, டாட்காம் அலை காலத்தில் நிலவிய போக்கை உணர்த்தும் உதாரணமாகவும் இருக்கிறார்.
ஏஐ யுகத்தில் டாட்காம்காரனை பொருத்திப்பார்ப்பது நமக்கான பாடமாக இருக்கும்.
ஏஐ யுகத்தில் இதே பாணியில், சாட்ஜிபிடி கொண்டு மட்டுமே அதை செய்வேன், தேர்வு எழுதுவேன் என்றெல்லாம் கூறி கவனத்தை ஈர்க்கலாம்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஏஐ ஏஜெண்ட்கள் கையில் நம்மை ஒப்படைத்து அதன் விளைவுகளை பதிவு செய்யலாம்- இது பற்றி சாட்ஜிபிடி அளிக்கும் விளக்கம் இது.-
நிற்க, இப்படி எல்லாம் செய்தால், டாட்காம்காரன் செய்த தவறை நகலெடுப்பது போல தான். பலரும் ஏஐ சேவைகளை இப்படி தான் பயன்படுத்த முயல்கின்றனர். மாறாக, பரபரப்பை விலக்கி ஏஐ சேவைகள் நம் வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் எப்படி பயன்படும் என்று பார்ப்பது தான் விவேகமானது. டாட்காம்காரன் கற்றுத்தரும் பாடமும் அது தான்.