Category Archives: செல்பேசி

தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப்

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொஞ்சம் புதுமையானது. கூடவே சுவாரஸ்யமானது. வேக்கி சாதராணமான அலாரம் இல்லை. மனித முகம் கொண்ட சமூக அலாரம். இந்த செயலியை பயன்படுத்தும் போது, இதில் தொலபேசி எண்ணை தெரிவித்து ( ரகசியம் காக்கப்படுமாம்) எந்த நேரத்திற்கு தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும் என தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் வழக்கமான துயிலெழுப்பும் செயலிகளில் உள்ளது தான். ஆனால் வேக்கியில் என்ன வேறுபாடு என்றால் , குறிப்பட்ட நேரம் வந்தவுடன், யாரேனும் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் போன் செய்து எழுப்புவார் என்பது தான்.

இந்த செயலியில் பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் இப்படி போன் செய்து எழுதிருங்கள் என்பார். அநேகமாக அவர் சம வயதான எதிர் பாலினத்தை சேர்ந்தவராக இருப்பார் என வேக்கி தெரிவிக்கிறது. இந்த அழைப்புகள் தானாக ஒரு நிமிட்த்தில் துண்டிக்கப்பட்டு விடும். நீங்கள் விரும்பினால் யாரேனும் ஒருவரை இப்படி துயிலெழுப்பவும் பதிவு செய்து கொள்ளலாம். அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் , போன் செய்து தூக்கத்தில் இருந்து எழுப்புவது வித்தியாசமான யோசனை தான். ஆனால் வில்லங்கமாக இல்லாமல் இருக்க வேண்டும். சரி , யாருமே கிடைக்காவிட்டால் என்ன செய்வது ? அந்த கவலை வேண்டாம் தானியங்கி மெசேஜ் எழுப்பி விடுமாம். அமெரிக்கா, யு.கே உள்ளிட்ட நாடுகளில் துயிலெழ இந்த சேவையை பயன்படுத்தலாம். ஆனால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் துயிலெழுப்ப முன்வரலாம்:

வேக்கி பற்றி அறிய: http://wakie.com/

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

nirbhayaசெல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

ஹெல்ப் மீ ஆன் மொபைல்

ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.

இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

https://play.google.com/store/apps/details?id=com.onmobile.helpme&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5vbm1vYmlsZS5oZWxwbWUiXQ..


நிர்பயா செயலி.

ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.

இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html

ஆறு பேர் வட்டம்.

சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.

இணையதள முகவரி; http://www.circleof6app.com/

நண்பர்கள் ரியாக்‌ஷனை பார்த்து ரசிக்க ஒரு செயலி

app_prevcவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ? சொல்லுங்கள். ஆரம்பத்தில் இமெயில் வாயிலாக, அப்புறம் பேஸ்புக் வாயிலாக என்று , யாம் பெற்ற சிரிப்பு நண்பர்களும் பெறட்டும் என , நகைச்சுவை படங்களை அனுப்பி வைப்பது இயல்பாக தான் இருக்கிறது. இப்போது , இதற்காக என்றே ஒரு செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது.

கிகில் மெயில் எனும் அந்த செயலி சிரிக்க வைக்கும் படங்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்க உதவுகிறது. இது என்ன புது விஷயமா ? புகைப்பட புகழ் செயலி ஸ்னேப்சேட் இதை தானே செய்கிறது என்று கேட்கலாம். இன்னும் கூட பல செயலிகள் செல்வழி புகைப்படங்களை பகிர வைக்கின்றனவே என்று செயலிகள் விஷயத்தில் அப்டட்டாக இருப்பவர்கள் கேட்கலாம்.

சரி தான், புகைப்பட பகிர்வுக்கு செய்லிகள் இல்லாமல் இல்லை. ஆனால் கிகிலி மெயில் செயலி , ஸ்னேப்சேட்டை விட ஒரு படி மேலே சென்று அசத்துகிறது. எப்படி தெரியுமா?  ஸ்னேப்சேட் போன்றவை புகைப்படங்களை எடுத்து அனுப்ப மட்டும் தானே செய்கின்றன ? கிகில் மெயில் இப்படி அனுப்பிய புகைப்படத்தை பார்த்ததும் நண்பர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்கின்றன்றோ அதை பார்த்து ரசிக்க உதவுகிறது.

சிரிப்பு புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்வதே, என்னைப்போல நீங்களும் சிரியுங்கள் என்று சொல்வது தானே. அப்படி இருக்க, சிரிப்பு படத்தை பார்த்த்தும் நண்பர்கள் எப்படி உணர்ந்தனர் என்று தெரிந்து கொண்டால் தான் அந்த பகிர்வு முழுமையாகும். ஆனால் எங்கோ இருக்கும் நண்பர்கள் ரியாக்‌ஷனை எப்படி தெரிந்து கொள்வது? இதை தான் கிகில் மெயில் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் , புகைப்பட அல்லது வீடியோவை அனுப்பியதுமே , அவர்கள் போனில் புதிய  மெயிலுக்கான தகவல் போய் சேரும் . அந்த மெயிலை கிளிக் செய்து பார்த்ததுமே நண்பர்கள் ரியாக்‌ஷன் என்னவோ அது அப்படியே புகைப்படமாக கிளிக் ஆகி, பதில் மெயிலாக வந்தடையும். ஆக, நண்பர்கள் நகைச்சுவை காட்சியை பார்த்து , எப்படி ரசித்து மகிழ்கின்றனர் என்று இந்த செயலி வழியே உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் சுவாரஸ்ய்மான செயலி தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இதில் எத்தனை விதமான ரியாக்‌ஷ்ன்களை எல்லாம் பார்க்க கூடும் என்பதை . சில வீடியோக்களை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். சிலர் சிரித்து கொண்டே இருக்கலாம். இன்னும் சில படங்களை பார்த்து யாரேனும் , உம்மனா மூஞ்சியாக முகத்தை வைத்துக்கொள்ளலாம். சிரிப்பு படத்துக்கான இந்த ரியாகஷனே கூட சிரிக்க வைக்கலாம் தானே.

செயலி முகவரி; http://www.gigglemail.com/#

நண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி

chocசமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ?

செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும்.

உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி.

சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, இப்படி தான் நடக்கும் எவ்வளவு பெட் என்று கேட்பது உண்டல்லாவா ? பொதுவாக இப்படி பெட் கட்டும் போது அதற்கான பரிசாக பணத்தையோ, ஒரு பக்க மீசையை எடுக்க வேண்டும் என்பது போன்ற செயலையோ குறிப்பிடுவது உண்டு.

எல்லோருக்குள்ளும் இருக்கும் இந்த பழக்கத்தை தான்  , பட்ஜ் செயலி மாற்றிக்காட்டுகிறது. இந்த செயலியை செல்போனில் டவுண்லோடு செய்து , அதன் மூலம் நண்பர்களை சவாலுக்கு அழைக்கலாம். அஜீத் பழம் ஓடுமா , விஜய்யின் ஜில்லா ஹிட்டாகுமா ? என்பது உட்பட சவால் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் யார் வெற்றி பெற்றாலும் , தோற்றவர்கள் பேசப்பட்ட தொகையை சேவை அமைப்பு ஒன்றுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். நண்பர்களுடன் விளையாடியது போலவும் இருக்கும். நன்கொடை வழங்கியது போலவும் இருக்கும்.

எல்லோரும் நல்லவரே, மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவரே எனும் நம்பிக்கையில் அந்த கொடைதன்மைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக் பட்ஜ் தெரிவிக்கிறது.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி. அமெரிக்காவை மையமாக கொண்டது, இதில் பட்டியலிடப்பட்டுள்ள சேவை அமைப்புகளும் அமெரிக்காவை மையமாக கொண்டதாக இருக்கலாம். அதனால் என்ன , நல்ல செயலி. தெரிந்து கொள்வோமே. நாமும் இது போன்ற செயலியை உருவாக்குவோமே.

செயலி முகவரி: http://www.thebudge.com/

ஷூ அளவை அறிய ஒரு செயலி

screen568x568ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா ? என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள். உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே. எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே. அதை தான் இந்த செயலி செய்கிறது. இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது. நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: http://www.mercurydesign.in/convert-my-shoe-size/