Tagged by: app

சின்ன சின்னதாக எழுதுங்கள்- ஊக்கம் அளிக்கும் இணையதளம்

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ ) இணையதளம் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை குறும் எண்ணங்களாக பதிவு செய்ய உதவுகிறது இந்த தளம். அடிப்படையில் டைனிதாட்ஸ், வாழ்க்கை பதிவு இணையதள வகையைச்சேர்ந்தது. அதாவது, ஒருவர் தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, அவை தொடர்பான எண்ணங்களை டிஜிட்டல் வடிவில் குறித்து வைக்க உதவும் இணையதளம். டைரி எழுதுவது போல, தினசரி வாழ்க்கையை இப்படி குறித்து வைப்பதை […]

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ )...

Read More »

இன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது?

புகைப்பட பகிர்வு செயலியான, இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக என்று தனியே ’ஐஜிடிவி’ செயலியை (https://instagram-press.com/blog/2018/06/20/welcome-to-igtv/ ) அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் வீடியோ சார்ந்த உள்ளடக்கத்திற்கு இன்னும் அதிக பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இன்ஸ்டாகிராம் டிவி அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய சேவை பற்றி பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், இன்ஸ்டாகிராமில் தான் ஏற்கனவே வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி […]

புகைப்பட பகிர்வு செயலியான, இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கா...

Read More »

சுனாமிக்கான காத்திருத்தலை பேஸ்புக்கில் நேரலை செய்தவர்

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டும் அல்ல, பேஸ்புக் நேரலை வசதியை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமக்கள் இதழியலுக்கான (சிட்டிசன் ஜர்னலிசம்) அருமையான உதாரணமாகவும் ஆகியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனக்கான இணைய அபிமானிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார். அலாஸ்கா என்பதே பூகோள ரீதியாக நமக்கு அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம் தான். கனடாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மாநிலமாகும். பெரும்பாலும் பனிப்பிரதேசமான அலாஸ்கா […]

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டு...

Read More »

இயற்கை வளம் காக்கும் இணைய முயற்சி!

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை ஆர்வலர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கும் வகையில் மேலும் இரண்டு இணையதளங்கள் இந்த வரிசையில் சேர்ந்துள்ளன. முதல் இணையதளமான ‘நோ யுவர் பிஷ்’ தளம் இந்தியாவில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், இரண்டாவது தளமான ’பிராக் ஐடி’ ஆஸ்திரேலியாவில் தவளைகள் நலன் காக்க உருவக்கப்பட்டுள்ளது. இரண்டுமே, இயற்கை நலன் காக்க இணையத்தை எப்படி […]

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகள...

Read More »

புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது. டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் […]

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்க...

Read More »