இன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது?

igபுகைப்பட பகிர்வு செயலியான, இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக என்று தனியே ’ஐஜிடிவி’ செயலியை (https://instagram-press.com/blog/2018/06/20/welcome-to-igtv/ ) அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் வீடியோ சார்ந்த உள்ளடக்கத்திற்கு இன்னும் அதிக பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இன்ஸ்டாகிராம் டிவி அறிமுகமாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமின் இந்த புதிய சேவை பற்றி பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், இன்ஸ்டாகிராமில் தான் ஏற்கனவே வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறதே அப்படியிருக்க, இதென்ன புதிய வசதி என கேட்கலாம். இன்ஸ்டாகிராமில் இப்போதே கூட புகைப்படங்கள் தவிர வீடியோக்களையும் பகிர்லாம் தான். ஆனால் ஒரு நிமிடம் வரையிலான வீடியோக்களை மட்டுமே பகிர முடியும்.

ஆனால், இப்போது வீடியோக்களுக்கு என்று இன்ஸ்டாகிராம் பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ள ஐஜிடிவி, நீள் வீடியோக்களுக்கானது. ஆங்கிலத்தில் லாங்க்பார்ம் வீடியோ என்கின்றனர். அதாவது 15 விநாடி முதல் ஒரு மணி நேரம் வரையான வீடியோக்களை உருவாக்கி இந்த செயலி வாயிலாக பகிரலாம். தவிர இது முழுக்க முழுக்க வீடியோக்களுக்கானது.

இரண்டாவது விஷயம், இந்த அறிமுகம் யூடியூப்பின் போட்டி சேவை என சொல்லப்படுவது. நிச்சயமாக, இது யுடியூப்புக்கு போட்டி தான். ஆனால், யூடியூப்புடன் ,இன்ஸ்டாகிராமின் புதிய வீடியோ செயலியை ஒப்பிட்டு பேசுவதற்கு முன், யூடியூப் வேறு, ஐஜிடிவி வேறு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கூகுளுக்கு சொந்தமான யூடியூப் வீடியோ பகிர்வின் கோட்டையாக இருக்கிறது. விமியோ உள்ளிட்ட வீடியோ சேவைகள் போட்டியாக இருந்தாலும் இன்னமும் யூடியூப் தான் ராஜாவாக இருக்கிறது. எனவே இப்போது தான் அறிமுகமாகியிருக்கும் ஐஜிடிவியை, இத்துறை ஜாம்பவானான யூடியூப்புடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. அது மட்டும் அல்ல, யூடியூப் மனநிலையியுடன் ஐஜிடிவியை அணுகுவதும் சரியாக இருக்காது. ஐஜிடிவி எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனில் இன்ஸ்டாகிராம் மனநிலையுடன் அதை அணுக வேண்டும். தவிர யூடியூப் போன்ற அம்சங்களை எதிர்பார்த்துச்சென்றால், ஐஜிடிவி ஏமாற்றமே அளிக்கும்.

இரண்டு சேவைகளுக்கும் அடிப்படையில் முக்கிய வேறுபாடு இருக்கிறது. யூடியூப் நாம் பார்த்து பழகிய தொலைக்காட்சி ஒளிபரப்பு பாணியில் பக்கவாட்டு வீடியோவுக்கானது. ஐஜிடிவி, இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னேப்சேட் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக்கிய ஸ்மார்ட்போனுக்கு இயல்பான நீள வாக்கிலானது. (போட்ரயட் வடிவம்). இன்னொரு விஷயம் யூடியூப்பில், உள்ளே நுழைந்ததுமே விதவிதமான தலைப்புகளில் சேனல்களை பார்க்கலாம். ஐஜிடிவி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இது தரும் அனுபவமும் வேறுவிதமானது.

இனி, ஐஜிடிவி செயலியை பயன்படுத்தும் விதம் பற்றி பார்க்கலாம். இது பிரத்யேக செயலி என்பதால் தனியே டவுண்லோடு செய்து நிறுவ வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலியை நிறுவிக்கொள்ளலாம். தேவை எனில், இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்தே கூட ஐஜிடிவிக்கான இணைப்பை தேடிப்பிடித்து பயன்படுத்தலாம்.

உள்ளே நுழையும் போது, ஏற்கனவே உள்ள இன்ஸ்டாகிராம் உறுப்பினர் கணக்கு மூலமே புதிய கணக்கையும் இயக்கி கொள்ளலாம். அல்லது இதற்கென புதிய கணக்கு உருவாக்கி கொள்ளலாம். கணக்கை துவக்கியுடன் புதிய சேனலை அமைத்துக்கொள்ளலாம். இதற்கான வழிமுறையும் எளிமையானது. செட்டிங் பகுதிக்குச்சென்று புதிய சேனலை உருவாக்கவும் பகுதியை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால், உங்களுக்கான சேனல் தயார். அதன் பிறகு, போனில் உள்ள வீடியோக்களை அல்லது புதிய வீடியோவை சேனலில் பதிவேற்றலாம்.

ig1நீங்கள் மற்றவர்கள் உருவாக்கும் வீடியோக்களை பார்க்க வேண்டும் எனில், செயலியின் கீழ் பகுதியிலேயே அதற்கான வசதி இருக்கிறது. பிரவுஸ் எனும் பகுதியின் வாயிலாக சக உறுப்பினர்களின் வீடியோக்களை அணுகலாம். உங்களுக்கான வீடியோக்கள் என்று செயலியே வீடியோக்களை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது. மேலும் பிரபலமான வீடியோக்களும் அடுத்தடுத்து தோன்றுகின்றன. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பார்க்கலாம். விரும்பிய சேனல்களை பின் தொடரலாம்.

ஸ்மார்ட்போன் செயலிக்குள் வீடியோக்களை பார்ப்பது புதிய அனுபவமாக தான் இருக்கிறது.

முதல் கட்டமாக இடம்பெறும் வீடியோக்கள் ஒருவித இன்ஸ்டாகிராம் தன்மையுடன் இருக்கின்றன. பெரும்பாலும் பொழுதுபோக்கு மயமாக இருக்கிறது. இப்போது தான் பிரபலங்கள் வரத்துவங்கியிருக்கின்றனர். மேலும் உறுப்பினர்கள் இணைந்து, அவரவர் தங்கள் பாணியில் சேனல்களை உருவாக்கும் போது தான் இன்ஸ்டாகிராம் வீடியோ செயலி எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர முடியும்.

இதனிடையே இன்ஸ்டாகிராம் போட்டியை யூகித்தோ என்னவோ யூடியூப் தனது வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. ரசிகர்கள் தங்கள் அபிமான சேனல் படைப்பாளிகளை ஆதரிப்பதற்கான வசதி, சேனலில் மேலும் பரவலாக விளம்பர பொருட்களை இடம்பெறச்செய்யும் வசதி மற்றும் எதிர்வரும் வீடியோவுக்கான முன்னோட்ட வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம்-யூடியூப் போட்டி என்பதை விட இணையத்தில், அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போனில் வீடியோ இன்னும் பெரிய விஷயமாக உருவாக்கி கொண்டிருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய செய்தி.

தளம் புதிது; லட்சியப்பணிகளுக்கான இணௌயதளம்

idவேலைவாய்ப்பு தங்கலை பொருத்தவரை, அனைத்துவிதமான வேலைகளையும் பட்டியலிடும் பொதுவான வேலைவாய்ப்பு தளங்கள் பல இருக்கின்றன. இவைத்தவிர குறிப்பிட்ட பிரிவிலான வேலைவாய்ப்புகளை மட்டும் தேடித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் துறை சார்ந்தவையாக இருக்கலாம். இந்த வகையில், ஐடியலிஸ்ட்.ஆர்க் இணையதளம் லட்சிய பணிகளை தேடித்தருகிறது. உலகில் அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் மற்றும் ஐடி போன்ற பணிகளை நாடுபவர்கள் இருக்கின்றனர். அதே போலவே, வேலை என்பது ஊதியம் அளித்தால் மட்டும் போதாது மனதுக்கு நெருக்கமான கொள்கைகள் அல்லது நோக்கங்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என நினைப்பர்வர்கள் தொண்டு நிறுவன பணிகள் தன்னார்வ பணிகள் போன்றவற்றை விரும்பலாம். இத்தகைய பணி வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது இந்த இணையதளம்.

நல்லது செய்ய விரும்பும் நபர்களை அதற்கான பணிகள் மற்றும் வாய்ப்புகளுடன் தொடர்பு படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இந்த இணையதளம் தெரிவிக்கிறது. இந்த வகையிலான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பட்டியலிடுகிறது.

இணைய முகவரி: https://www.idealist.org/en/?type=JOB

தகவல் புதிது; கூகுள் குரோமில் புதிய வசதி

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் புதிய அம்சம் ஒன்றை கவனித்திருக்கலாம். பிரபலமான இணைய பக்கங்கள் அனைத்தும் தானாக டவுண்லோடு செய்யப்படுவது தான் அது. இந்த பக்கங்களை புதிய டேப் பகுதியில் காணலாம். ( குரோமில் சைன் இன் சைதிருக்கும் போது இது செயல்படும்). இந்த பக்கங்களை பின்னர் எப்போது தேவையோ அப்போது அணுகலாம். அப்போது இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆக, ஆப்லைனிலும் தேர்தெடுக்கப்பட்ட இணைய பக்கங்களை பார்க்கும் வசதி என இதை புரிந்து கொள்ளலாம். இணையம் இல்லாமலே உலாவும் வசதி என வைத்துக்கொள்ளலாம். ஆனால் முழு இணையம் அல்ல: குரோமில் சேமிக்கப்பட்ட இணையம். இந்தியா போன்ற இணைய இணைப்பு மெதுவாக உள்ள நாடுகளுக்காக என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதி என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் செய்தி சுருக்கங்கள் மட்டுமே இவ்வாறு சேமிக்கப்பட்டு வந்தது.தற்போது முழு உள்ளடக்கமும் சேமிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு நிச்சயம் சுவாரஸ்யமான வசதி தான்.

செயலி புதிது; மைக்ரோசாப்டின் புதிய செய்தி செயலி

ஸ்மார்ட்போனிலேயே செய்திகளை தெரிந்து உதவும் எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் பங்கிற்கு , செய்தி செயலியை அறிமுகம் செய்துள்ளது. மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் செய்தி தொர்பான சேவையை அளிப்பது புதிதல்ல; அதன் எம்.எஸ்.என் சேவை ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக இருந்தது. இந்த சேவை அறிமுகமான 23 ஆண்டுகள் கழித்து, மைக்ரோசாப்ட் நியூஸ் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. 3,000 க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் செய்தைகளை இதன் மூலம் பெறலாம். செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித எடிட்டர்கள் இணைந்து செய்திகளை தேர்வு செய்து வழங்குகின்றனர்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.amp.apps.bingnews

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *