Tag Archives: cern

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

 

browser-2-800x594இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது.

அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் எத்தனை மகத்தான கண்டுபிடிப்பு என்பதும், அந்த தொழில்நுட்ப அற்புதம் எத்தனை எளிமையாக கருக்கொண்டு வளர்ந்துள்ளது என்பதும் உங்களுக்கு புரிய வரும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இதற்கு உதாரணமாக இணையத்தின் ஆதி கதைகளில் மிக சுவாரஸ்யமான கதை ஒன்றை பார்ப்பதற்கு முன் அமெரிக்க புரோகிரமரான ஜே ஹாப்மனை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் தான் இணையத்தின் மறக்கப்பட்ட கதைகளை எல்லாம் அகழ்வராய்ச்சி செய்து கண்டெடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ஹாப்மன், ’திஹிஸ்டரிஆப்திவெப்’ எனும் பெயரில் வலையின் வரலாற்றை பதிவு செய்வதற்கான இணையதளத்தை அமைத்திருக்கிறார். ( இணையமும், வலையும் ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இணையம் வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். வலை அதில் ஒரு அங்கம். இணையத்தை எளிதாக அணுகக்கூடிய மூல செயலியாக வலையை புரிந்து கொள்ளலாம். எனினும் நடைமுறையில் இரண்டையும் ஒன்றென கொள்வதில் தவறில்லை). அதாவது வேர்ல்டு வைட் வெப் எனப்படும் வலை உருவான கதைகளை அவர் இந்த தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

வலையின் வரலாற்றை கூகுளில் தேடினால் படித்துவிடலாமே என நினைப்பவர்கள் ஹாப்மன் தளத்திற்கு கட்டாயம் விஜயம் செய்து பார்க்க வேண்டும். பரவலாக அறியப்பட்ட வலையின் தோற்றம், வளர்ச்சி, விஸ்விரூப வெற்றி சார்ந்த தகவல்கள் மற்றும் காலவரிசை விவரங்களை எல்லாம் கடந்து, வலையின் உருவாக்கத்தில் இன்னும் தெரிந்து கொள்ள எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த தளத்தின் மூலம் உணரலாம். ஹாப்மனே இப்படி உணர்ந்ததால் தான் இந்த தளத்தை அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

browser-3அவர் ஒரு வரலாற்று மாணவராம். படிக்கும் காலத்திலேயே இணையதள உருவாக்கத்தில் பகுதிநேரமாக ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அதுவே முழு நேர பணியாக மாறிவிட்டாலும் மனிதருக்கு வலை உருவான வரலாற்றின் மீதான காதல் மாறாமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வலை தொடர்பான கதைகளை படித்தவருக்கு அதன் ஆரம்பமும் அடுத்தடுத்து நிகழும் பாய்ச்சல்களும் வசீகரித்தன. அந்த ஆர்வத்தில் தான் கண்டெடுத்த கதைகளையும், அவற்றுக்கான இணைப்புகளையும் சேகரித்து வைக்கத்துவங்கினார்.

இந்த வரலாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். அது மட்டும் அல்ல, வலை ஆவணங்களின் பக்கமாக உருவானது என்றும், இந்த பக்கங்கள் காணாமல் போகும் தன்மை கொண்டவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே எண்ணற்ற பக்கங்கள் காணாமல் போயிருக்கின்றன என்கிறார். அதிலும் குறிப்பாக நாம் அறிந்த வகையில் வலை வேகமாக வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதன் பாதையில் ஒரு சில தருணங்கள் மைல்கற்களாக அமைந்து மற்ற தருணங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிடும் நிலை உள்ளது.

இந்த தருணங்கள் அனைத்தையும் திரட்டி தொகுத்து வலையின் முழுமையான கால வரிசையை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கான இணையதளத்தை அமைத்து, இணையக்கடலில் தான் தேடி கண்டுபிடிக்கும் கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். இணையத்தின் அங்கமாக வலை கருக்கொண்ட 1988 ம் ஆண்டு முதல் இந்த கதைகளை காலவரிசையாக படித்துப்பார்க்கலாம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வலையின் முக்கிய தருணங்களாக விளங்கிய நிகழ்வுகளின் பின்னே உள்ள கதைகள் படு சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதைவிட சுவையான வரலாற்றுப்பாடங்களையும் கொண்டிருக்கின்றன.

இதற்கு உதாரணமாக கதையை இனி பார்க்கலாம். வேர்ல்டு வைடு வெப் என குறிப்பிடப்படும் வலையை உருவாக்கியது பிரிட்டனைச்சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஞ்ஞானியான அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, 1989 ம் ஆண்டில் வலையை உருவாக்குவதற்கான யோசனையை முன் வைத்து, அது பின்னர் ஏற்கப்பட்டு 1991 ல் வலை பிரவுசர் மற்றும் எச்டிஎம்.எல் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களோடு உதயமானது எனும் சுருக்கமான வரலாற்றையும் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் இதற்கான யோசனையை லீ, உலக அளவிலான போன் புத்தகமாக முன்வைத்து தான் வெற்றி பெற்றார் என்பது உங்களுக்குத்தெரியுமா?

லீ அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த செர்ன் ஆய்வுக்கூடம் நவீன இயற்பியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இயற்பியல் சார்ந்த ஆய்வு தவிர வேறு விஷயங்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், லீயோ உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழியை எச்.டிம்.எம்.எல் உள்ளிட்ட அம்சங்களோடு உருவாக்க கனவு கண்டார். ஆனால் செர்ன் போன்ற ஆய்வுக்கூடத்தில் இத்தகைய திட்டத்திற்கான அனுமதி கிடைப்பது கடினம். இதை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ஆய்வு வேலையை கவனியுங்கள் என்றே எச்சரிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

ஆனால் நல்லவேளையாக டிம் பெர்னர்ஸ் லீ முன் வைத்த யோசனைக்கு அந்த கதி ஏற்படவில்லை. அவரது தலைமை அதிகாரியான மைக் செண்டல், இந்த யோசனையை ஆதரிக்க விரும்பினார். எனினும் மூல வடிவில் அது அதிகார மேல் அடுக்குகளில் செல்லுபடியாகாது என அறிந்திருந்தவர் இதற்கான மாற்று வழியை முன்வைத்தார். இந்த யோசனையை அப்படியே முன்வைக்காமல் செர்ன் ஆய்வு கூடத்திற்கு மிகவும் அவசியமான போன் புத்தகத்தை இணையத்தில் உருவாக்கித்தரும் திட்டமாக முன்வைக்குமாறு கூறினார். செர்ன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு போன் புத்தகம் தேவைப்பட்டது என்பதால் இந்த போர்வையில் ஐடியாவை சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள் என அவர் நம்பினார். அதன்படியே இணைய போன் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியாக வலை துவங்கி பின்னர் மெல்ல நிலைப்பெற்று இன்று வலையில்லாமல் வாழ்க்கை இல்லை எனச்சொல்லும் நிலையை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இது போன்ற வரலாற்று கதைகளை தெரிந்து கொள்ள: https://thehistoryoftheweb.com/

 

wendyhall

வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவையான பிளேஷ்பேக்

ண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விரவம் எத்தனை பேருக்கு தெரியும்?
வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயறகையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது , தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது. அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?
லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம் தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில் வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும் பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணித்ததை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதை தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.
லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதிததவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.
வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில் இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாக தான் இருக்கும்.
வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்த்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006 ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.
வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.
மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!

பேராசிரியர் வெண்டி ஹால் பேட்டி: http://www.cnet.com/news/inventor-of-the-web-wanted-to-call-web-sites-psychohistory/

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

linux_runs_supercomputersநீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம்.

ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் எதிலும் லினக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் லின்கஸ் பயன்பாடு இருப்பதை தொழில்நுட்ப தளமான மேக் யூஸ் ஆப் , கட்டுரை அழகாக உணர்த்துகிறது. சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் கூகுலின் தானியங்கி கார் வரை எல்லாவற்றிலும் லினக்ஸ் பயன்படுத்தப்படுத்தப்படுதவதாக இந்த கட்டுரை உணர்த்துகிறது.

லின்கஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத பத்து விஷயங்கள் எனும் தலைப்பிலான் இந்த கட்டுரை , உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் ,லினக்ஸ் எங்கும் இருக்கிறது என்கிறது. ஓபன் சோர்ஸ் என்பதால் வளைந்து கொடுக்க கூடியது, எந்த அமைப்பிற்கும் மாற்றக்கூடியது மற்றும் எந்த ஹார்ட்வேரிலும் செயல்படக்கூடியது ஆகியவற்றை லின்கசின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மைக்கான காரணங்களாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் லினக்ஸ் இலவசமானது.

சரி லினக்ஸ் அப்படி எங்கெல்லாம் பயன்படுகிறது ? பார்க்கலாம்;

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் உலகின் அதிவேக கப்யூட்டர்கள் பற்றி அடிக்கட்டி கேள்விபட்டிருக்கிறீர்கள் இல்லையா? நம்பர் ஓன் அந்தஸ்து மாறுவது போல ,சூப்பர் கம்ப்யூட்டரும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்? இவ்வளவு ஏன் ? உலகின் முன்னணி 500 சூப்பர் கம்ப்யூட்டர்களை பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது ( http://www.top500.org/). அதைவிட முக்கியம் இவற்றில் பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் லினக்சில் தான் இயங்குகின்றன. 2013 நவம்பரில் வெளியான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியல்படி உலகின் 482 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்களை லின்கஸ் சார்ந்தவை. சதவீதப்படி இது 96.4 சதவீதம்! இந்த பட்டயலில் விண்டோசுக்கு கொஞ்சுண்டு இடம் தான். நாமெல்லாம் , டெஸ்க்டாப்பில் லின்க்ஸ் பயன்படுத்தவோ யோசித்துக்கொண்டிருக்கிறோம் ,ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர்களே லின்க்சை தான் நம்புகின்றன பாருங்கள்!

விமானங்களில்

விமான பயணங்களில் டிவி பார்க்கவும் திரைப்படங்களை கண்டு ரசிக்கவும் வசதி இருக்கிறது . இணையததையும் பயன்படுத்த்லாம், வீடியோ கேம் ஆடலாம். இவற்றுக்கெல்லாம் எது அடிப்படை என்று நினைக்கிறீர்கள்? லினக்ஸ் தான். லின்கஸ் சுலபமானது மற்றும் இலவசமானது என்பதால் விமான சேவை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற அமைப்புகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதால் ஆகாயத்தில் லின்க்ஸ் கோலோச்சுகிறது. யுனைடெட்,ஏர் டெல்டா, வர்ஜின் என எல்லா விமான சேவை நிறுவனங்களும் லின்க்சை தான் பயன்படுத்துகின்றன.

ஸ்மார்ட் பிரிட்ஜ்

போனில் இருந்து வாட்ச், டி.வி  என எல்லாமே ஸ்மார்ட் ஆகி கொண்டிருக்கும் காலம் இது. பிரிட்ஜிலும் கூட ஸ்மார்ட் பிரிட்ஜ் வந்துவிட்டது. ஸ்மார்ட் பிரிட்ஜ் என்றால் இணைய வசதி கொண்ட பிரிட்ஜ்!. கொஞ்சம் பழைய கருத்தாக்கம் என்றாலும் இப்போது தான் பிரபலமா

கண்டோம் கடவுளை!இனி அடுத்தது என்ன?

அந்த அறிவிப்பை கேட்டு ஆத்திகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.நாத்திகர்களோ உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.சாமான்யர்களோ என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியானல் குழம்பித்தவித்தனர்.விஞ்ஞானிகளோ ஆனந்தத்தில் திளைத்தாலும் கவனம் தேவை என்று நிதானம் காத்தனர்.
ஜூலை நான்காம் தேதி வெளியிடப்பட்ட ‘கடவுகள் துகள்’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஏற்படுத்திய எதிர்வினைகள் தான் இவை.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக இது கருதப்பட்டது.ஒரு விதத்தில் இது வரை நிகழ்த்தப்பட்ட விஞ்ஞான சாதனைகளை எல்லாம் மிஞ்சி நிற்க கூடிய சாதனை இது.பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலையே மாற்றி அமைக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.
கடவுள் துகளை கன்டுபிடிக்கப்பட்டது கடவுளையே கன்டுபிடித்து விட்டது போன்ற பரபரப்பையும் உண்டாக்கியது.அதாவது கடவுள் இடத்தை நிரப்பக்கூடிய
அடிப்படை துகளை கண்டுபிடித்து விட்டதாக கருதப்பட்டது.
ஹிக்ஸ் போசன் என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படும் கடவுள் துகள் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி விளக்ககூடியதாக கருதப்படுவதால் இது விஞ்ஞானிகள் வசம் சிக்கியது கடவுளே மனிதன் கைகளில் அகப்பட்டது போல கருதப்பட்டாலும் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தும் உண்மை இவ்வாறு எளிமைபடுத்தி விடக்கூடியது அல்ல.
முதலில் பரவலாக புரிந்து கொள்ளப்படுவது போல கடவுள் துகளை விஞ்ஞானிகல் கண்டுபிடித்து விடவில்லை.அந்த துகளுக்கான ஆதாரத்தை தான் கண்டுபிடித்துள்ளனர்.அதுவும் 100 சதவீதம் துல்லியத்துடன் இல்லை.விஞ்ஞானிகள் மொழியில் 99.999 சதவீத உறுதியுடன்!.இந்த நுடபமான வேறுபாடு போலவே கடவுள் துகள் ஆயவும் மிக மிக நுட்பமான விஷயங்களை கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி கடவுள் துகள் என்றால் என்ன?விஞ்ஞான ஆய்வில் அதன் முக்கியத்துவம் என்ன?இந்த கண்டுபிடிப்பு இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியது ஏன்?
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் கண்ணுக்கு தெரியாத அணுக்களால் ஆகியிருக்கிறது.அணுக்களின் இருப்பை தெரிந்து கொள்ளவே மனித குலத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.அணுக்களை புரிந்து கொள்ள முற்பட்ட போது அணுக்கள் இறுதியானவை அல்ல அவற்றினும் சிறிய துகள்களான புரோட்டான்,எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகிய மூன்று அடிப்படை துகள்களால் ஆகியிருக்கும் உண்மையை உலகம் தெரிந்து கொண்டது.
ஆனால் அணுவின் அதிசயம் இத்தோடு நின்றுவிடவில்லை.அதன் சூடசமத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு புரோட்டான்,எலக்ட்ரான் தவிர குவார்க்ஸ்,லெப்டான்,போட்டான்,குலோவான் போன்ற அடிப்படை துகள்களும் அணுவுக்குள் இருப்பதும் தெரிய வந்தது.
இவை அனைத்தும் அணுவுக்குள் உள்ள உப துகள்களாக கருதப்படுகின்றன.அதாவது அணுவுக்குள் உள்ள அணு துகள்கள்.இநத் அணுத்துகள்களின் சேர்க்கையின் மூலம் தான் அணுவின் உறுப்புக்களான ப்ரோட்டன்களும் நியூட்ரான்களும் உருவாகியிருக்கின்றன.உதாரணத்திற்கு ஒரு புரோட்டான் மூன்று குவார்களின் சேர்க்கையால் ஆகியிருக்கிறது.அந்த மூன்று குவார்க்குகளையும் குலோவான்கள் இறுக பற்றியிருக்கின்றன.
இவ்வாறு 14 அடிப்படையான துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.இவை குவார்க்ஸ்,லெப்டான்,பெசான்ஸ் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 14 அணுத்துகள்கள் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.இவற்றை கொண்டு அணுக்களின் உலகை விவரிக்க உருவாக்கப்பட்ட மாதிரியே அடிப்படை மாதிரி (ஸ்டான்டர்டு மாடல்)என அழைக்கப்படுகிறது.
1950 களில் இந்த கோட்பாடு முன்வைக்கப்பட்டது.பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இந்த கோட்பாட்டினால் விளங்கி கொள்ள முடியும் என்று விஞ்ஞான உலகம் நம்புகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம் என்றால் ஆதியில் எல்லாம் எப்படி உருவானது என்பது தான்.அதாவது முதன் முதலில் எந்த புள்ளியில் இருந்து பிரபஞ்சம் உண்டானது என்னும் கேள்விக்கான பதில்.
கடவுள் உலகை படைத்தார் என்று சொல்லப்பட்டாலும் பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் திடிரென ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு அப்போது அளப்பறிய ஆற்றலும் வெப்பமும் வெளிப்பட்டு அவை குளிர்ர்ந்த போது கோள்களும் நட்சத்திரங்களும் இந்த உலகமும் உருவானதாக கருதப்படுகிறது.இந்த ஆதார நிகழ்வு பிக் பேங் என்று குறிப்பிடப்படுகிறது.
பிக் பேங் என்னும் பெருவெடிப்பின் மூலமே பிரபஞ்சம் உண்டானதாக சொல்லப்படும் கோட்பாடு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த கோட்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதில் பல கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் கடவுள் துகளுக்கான தேடல்.பெருவெடிப்புக்கு முன் எதுவுமே இருக்கவில்லை.காலமும் இல்லை.இடமும் இல்லை.பொருளும் இல்லை.இந்த இல்லை என்னும் நிலையில் இருந்து எல்லையில்லாமல் சுருங்கி செல்லகூடிய மைய புள்ளியில் இருந்து பெரு வெடிப்பு உண்டாகி பிரபஞ்சம் பிறந்தது.அதன் பின் தான் அணுவும் வந்தது,அகிலமும் வந்தது.அண்டமும் வந்தது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதார சக்தி கிடைத்தது எப்படி?
இந்த கேள்வி தான் கடவுள் துகளை தேட வைத்தது.பிரபஞ்சத்தின் அடிப்படையான அணுக்களின் அடிப்படையான புரோட்டான்களும் இதர துகள்களும் குறிப்பிட்ட தன்மை கொண்டவை.நிறை கொண்டவை.
ஆனால் பெருவெடிப்பின் போது எல்லா துகள்களும் ஒலியை மிஞ்சும் வேகத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.அந்த வேகத்தில் அவற்றுக்கு நிறை என எதுவும் இருக்கவில்லை.நிறை இல்லாததால் அவற்றின் மூலம் அணுத்துகள்களும் அணுக்களும் உருவாக வாய்ப்பிருக்கவில்லை.
இதன் பொருள் பெருவெடிப்பு நிகழ்ந்த உடன் எல்லாமே அலைபாய்ந்து கொண்டிருந்தனவே தவிர எதுவும் உருவாக வாய்ப்பிருந்திருகாது என்பது தான்.
இதற்கு மாறாக பிரபஞ்சம் எப்படி உருவானது என்றால் பெருவெடிப்பினால் அலை பாய்ந்து கொண்டிருந்த நிறையில்லா போட்டான்களும் குவார்க்குகளும் ஒரு மாய சக்தியுடன் கூட்டணியால் நிறையை பெற்றன.அதன் பின்னரே கோள்கலும் பிரபஞ்சமும் உண்டானது.
அந்த மாய சக்தி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையான துகள்.ஹிக்ஸ் பாசன் துகள்.இதுவே கடவுள் துகள் எனப்படுகிரது.
மற்ற எல்லா அணுத்துகள்களும் கண்டறியப்பட்டு அவற்றின் தனமைகளும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் ஹிக்ஸ் போசன் இருப்பு மற்றும் உறுதி செய்யப்படவில்லை.
இந்டஹ் ஹிக்ஸ் போசன் துகளின் இருப்பு பற்றி முதன் முதலில் தெரிவித்தது பீட்டர் ஹிக்ஸ் என்னும் விஞ்ஞானி.(இதில் இந்திய விஞ்சானி சத்யேந்திர போசின் பங்களிப்பும் இருக்கிறது.)1964 ம் ஆண்டு இது பற்றிய கட்டுரையை அவர் வெளியிட்டார்.
இந்த துகள் இருந்தால் தான் அடிப்படை கோட்பாடு செல்லுபடியாகும்.எனவே கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞான உலகம் இந்த துகளை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை.துகள் என்னும் போதே ஏதோ கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய ஒரு வஸ்து என்பதை அணுமானித்து கொள்ளலாம்.ஆனால் இந்த துகளோ அதனினும் நுண்ணியது.புரோட்டான் போன்றவற்றை கூட ஆய்வு கூடத்தில் பிடித்து நிறுத்து விடலாம்.ஆனால் கடவுள் துகளை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இந்த துகள் புரோட்டான்களை விட 200 மடங்கு நிறை கொண்டதாக கருதப்பட்டாலும் அவை தோன்றும் போதே மறைந்து விடும் தன்மை கொண்டவை.அதாவது கண்ணிமைக்கும் நேரம் என்பார்களோ அதில் நூறு கோடியில் ஒரு பகுதி அதில் நூறு கோடியில் ஒரு பகுதி நேரமே இவை இருக்கும் அதன் பிறகு வேறு வடிவில் அழிவுக்கு உள்ளாகி விடும்.
ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியின் நூறு கோடியில் ஒரு பகுதி எனனும் நேர பரப்பை நம்மால் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றிவிடும்.சும்மாவா பெருவெடிப்பு உண்டான ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதிக்குள் இந்த கடவுள் துகள் தலையை காட்டி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக அமைந்ததாக நவீன விஞ்ஞானம் சொல்கிறது.
எனவே இப்படிப்பட்ட சிறுமைப்பட்ட துகளை எப்படி கண்டறிவது சாத்தியம்?
இந்த விஞ்ஞான சவாலை தான் பூமிக்கு அடியில் 27 மீட்டர் அளவிலான குகை அமைத்து அதில் அதி குளிர்ந்த காந்த தடுப்புக்களை ஏற்படுத்து அவர்றின் நடுவே புரோட்டான்களை ஒளிக்கு நிகரான வேகத்தில் மோதவிட்டு அப்போது உருவான விளைவுகளை கணக்கு போட்டு கடவுள் துகளின் இருப்பை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்.
அதாவது பூவுக்குள் பூகம்பம் என்று சொல்வது போல குகைக்குள் ஆதியில் நிகழந்த பெருவெடிப்புக்கு நிகரான நிலையை உருவாக்கி கடவுள் துகளை சிக்க வைக்க முயன்றுள்ளனர்.
இதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்றதும் ஏதோ பொறியில் சிக்கிய எலி போல அந்த துகள் சிக்கியதாக நினைப்பது சரியாக இருக்காது.அது தான் தோன்றும் போதே வேறு வடிவில் மாறிவிட்டதே.
விஞ்ஞானிகள் செய்தது என்னவென்றால் இந்த துகள் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் விளைவுகளை கொண்டு அதன் இருப்புக்கான ஆதாரங்களை தேடியது தான்.அந்த ஆதாரங்களும் சும்மா கிடைத்துவிடவில்லை.புரோட்டான்களின் மோதல் தொடர்பான லட்சக்கணக்கான தகவல்கள் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களால் அலசி ஆராயப்பட்டு பெறப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளையும் விஞ்ஞானிகள் இரண்டு வருட காலமாக அலசிக்கொண்டிருந்தனர்.கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஓரளவு சாதகமான தகவல்கள் கையில் கிடைத்த போது கடவுள் துகளின் இருப்பை நெருங்கி விட்டதாக உணர்ந்தனர்.ஆனால் இதனை உறுதிப்படுத்தி கொள்ள மேலும் விவரங்கள் தேவைப்பட்டன.
அவை கையில் கிடைக்கவே நம்பிக்கை வலுப்பட்டது.இவற்றின் சிகரமாக தான் ஜூலை 4 ல் கடவுள் துகள் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்தனர்.
ஆக இது வரை கோட்பாடு நோக்கில் மட்டுமே இருந்து வந்த ஹிக்ஸ் போசன் துகளுக்கான சான்று முதல் முறையாக விஞ்ஞான உலகின் கையில் கிடைத்திருக்கிறது.இதன் மூலம் அடிப்படை மாதிரியில் இருந்த முக்கிய ஒட்டை அடைக்கப்பட்டு விட்டது.பிரபஞ்சத்துக்கான விளக்கத்தில் அடிப்படையான சக்தியும் கிடைத்துள்ளது.
எல்லாம் சரி கடவுள் துகள் கிடைத்து விட்டதால் கடவுளுக்கு நிகரான சக்தியை கண்டுபிடித்ததாக கருதலாமா?பிரபஞசத்தின் படைப்பு ரகசியத்தை இனி எளிதாக புரிந்து கொண்டுவிடலாமா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் சுலபமான பதில்கள் கிடையாது.
கடவுளின் மனதை கண்டுபிடித்து விட்டதாகவும் பெருமை பட்டு கொள்ள முடியாது.அதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்திருக்கிறோம்.பிரபஞ்சத்தில் இன்னும் பிடிபடாத மர்மங்கள் நிறைய உள்ளன.
ஹிக்ஸ் போசன் துகள் போலவே இன்னும் ஒரு துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதனை கண்டுபிடிக்க வேண்டும்.ஆம் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அதன் நேர் எதிர் தன்மை கொண்ட பொருளோடு இருப்பதாக ஒரு கோட்பாடு இருக்கிரது.அதனை பரிசோத்தித்து பார்க்க வேண்டும்.இவை ஆன்டி மேட்டர் என்று சொல்லப்படுகிரது.
மேலும் பிரபஞ்சத்தில் ஊடுறுவி இருக்கும் கருப்பு வஸ்துவின் தன்மை என்ன என்று தெரியவில்லை.இவ்வளவு ஏன் பூவி ஈர்ப்பு சக்தி குறித்தே இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும்.
ஆனால் இந்த ஆய்வு பயணத்தில் முக்கிய ஊக்கமாக விளங்க கூடிய ஒன்றாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

———–

புதிதாக உதயமாகியுள்ள பரிவு மாத இதழுக்காக எழுதியது.

நன்றி;‍ப‌ரிவு