வலை 3.0 – வலையின் கதை!

Screenshot_2019-03-21 வலை 3 0 அது ஒரு வலைக் காலம்இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல்.

30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தனது மனதில் இருந்த எண்ணத்தை கருத்தாக்க வடிவில் சமர்பித்தார்.

டிம் பெர்னர்ஸ் லீயின் கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், பின்னர் அது செயல்வடிவம் பெற்று அறிமுகமானதும், அதன் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததும் மெல்ல நிகழ்ந்தது. அதன் பிறகு ஆரம்ப வலைமனைகள் உருவாவதும், வலையின் வளர்ச்சியும் கூட மெதுவாக தான் நிகழ்ந்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் வலையின் வளர்ச்சி புதிய உத்வேகம் பெற்று விஸ்வரூபம் எடுக்கத்துவங்கியது.

30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், வலையின் வளர்ச்சி அதே வேகத்தில் தொடர்கிறது. இந்த வளர்ச்சியில், முதல் கட்ட வலை (வலை 1.0), இரண்டாம் கட்ட வலை ( வலை 2.0) என வலை பெரும் பாய்ச்சல் நிகழ்த்தி, இப்போது வலை 3.0 பற்றி உற்சாகமாக பேச வைத்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் வலை பல்வேறு சவால்களுக்கு உள்ளானலும்,  வலைக்கு நிகரான புதிய தொழில்நுட்பமாக சொல்லப்படும் பிளாக்செயின் உள்ளிட்ட நுட்பங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.

மையமில்லா தன்மையும், அனாமேதையத்திற்கான சாத்தியமும், எல்லையில்லா சுதந்திரமும் இணையத்தின் ஆதார தன்மைகள் என சொல்லப்படும் நிலையில், தனியுரிமை சார்ந்த கவலைகளும், கேள்விகளும் தீவிர விவாதத்தை எழுப்பியிருக்கும் நிலையில், வலையின் வரலாற்றை திரும்பி பார்க்க பொருத்தமான நேரம் இது.

வலையின் வரலாற்றை நோக்குவதற்கு முன் முதலில் வலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன், வலைக்கும், இணையத்திற்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, வலையும், இணையமும் ஒன்றாக கருதப்பட்டாலும், இரண்டு பதங்களும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல.

இணையம் (இண்டெர்நெட்) என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலின் வலைப்பின்னல். அது ஒரு மாபெரும் வலைப்பின்னல்களின் தொகுப்பு. அது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களை (சாதனங்களை) இணைத்து, எந்த ஒரு கம்ப்யூட்டரும் வேறு ஒரு கம்ப்யூட்டரை தொடர்பு கொள்வதை சாத்தியமாக்கும் வலைப்பின்னலாக இருக்கிறது.

இணையத்தை கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களின் சர்வதேச வலைப்பின்னல் என சுருக்கமாக வர்ணிக்கலாம்.

மாறாக வலை என சுருக்கமாக குறிப்பிடப்படும் வைய விரிவு வலை, இணையத்தின் ஒரு அங்கம். இணையத்தில் தகவல்களை அணுகுவதற்கான வழி என்றும் வலையை குறிப்பிடலாம். இணையம் என்பது உள்கட்டமைப்பு, வலை அதன் மீது செயல்படும் ஒரு தகவல் பகிர்வு அமைப்பு என்றும் புரிந்து கொள்ளலாம்.

adhu-orujpgவலை என்பது இணையத்தில் தகவல்களை அணுகுவதற்கான பல வழிகளில் ஒன்று. மற்ற வழிகளான இமெயிலும், உடனடி செய்தியனுப்பும் ( இன்ஸ்டண்ட் மெசேஜிங்) வசதியும் இணையத்தை தான் பயன்படுத்திக்கொள்கின்றன, வலையை அல்ல. ஆனால் வலை மிகவும் முக்கியமானதாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வலையே இணையம் எனும் மயக்கத்தை அளிக்க கூடிய அளவுக்கு இது பரவலானதாகவும் ஆகியிருக்கிறது.

வலை மூலமாக நாம் இணையத்தை அணுகுவதால், பேச்சுவழக்கில் இணையத்தையும், வலையையும் ஒன்றாக குறிப்பிட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. வலையில்லாமல் இணையம் உண்டு. ஆனால் இணையம் இல்லாமல் வலை இல்லை.

நாம் அறிந்த விதமாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையம் வன்பொருள் எனில் வலை அதில் செயல்படும் மென்பொருள் என்றும் புரிந்து கொள்ளலாம். வலை என்பது, இணையத்தின் மீது செயல்பாடும் பிரதான செயலி என்றே விக்கிபீடியா அறிமுகம் செய்கிறது.

வலைக்கும், இணையத்திற்குமான இன்னொரு வரலாற்று வேறுபாடும் இருக்கிறது. வலை 1989 ல் உருவானது என்றால், இணையம் அதற்கு வெகுகாலம் முன்னரே, 1969 ல் உருவானது. அர்பாநெட் எனும் பெயரில் அடிப்படையில் ராணுவ ஆய்வு திட்டமாக துவங்கிய இணையம் கம்ப்யூட்டர்களை இணைந்து வளர்ந்து உருமாறி, இன்று இணையம் இல்லா வாழ்க்கை சாத்தியம் இல்லை எனும் நிலையை வந்தடைந்துள்ளது.

இணையத்திற்கும் வலைக்குமான தொழில்நுட்ப நோக்கிலான வேறுபாடுகளை விட, முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், வலை தான் இணையத்தை எளிதாக அணுக வழி செய்தது என்பது. இணையம் வெகுஜனமயமாக வலையின் தோற்றமே முக்கியமாக அமைகிறது. இணையத்தின் அநேக அடிப்படை அம்சங்கள் வலையின் வடிவில் இரண்டற கலந்திருக்கிறது.

இணையத்தில் இன்று எதிர்கொள்ளும் சாத்தியங்களையும், சவால்களையும் புரிந்து கொள்ள வலை தோன்றி வளர்ந்த விதத்தை புரிந்து கொள்வது அவசியம். வலை உருவான விதத்தையும், அதன் தன்மையையும் அறிந்து கொள்வதன் மூலம் இணையத்தை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

வலையின் தனிச்சிறப்பை அறிந்து கொள்ள, இணைய பயன்பாட்டில் அதன் பங்களிப்பை உணர, வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது என தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். இதை இணையத்தின் பூர்வ கதையில் இருந்து துவங்கலாம்.

வாருங்கள் வலை வரலாற்றில் உலா வருவோம்….

தமிழ் இந்துவில் எழுதி வரும் புதிய தொடர்…  https://tamil.thehindu.com/society/lifestyle/article26506364.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.