உலகின் முதல் பிரவுசரில் உலாவலாம் வாருங்கள்…

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா?

ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. செர்ன் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆய்வுக்குழு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இக்குழு உருவாக்கியுள்ள இணையதளத்தில், நீங்கள் பயன்படுத்தும் நவீன பிரவுசரிலேயே, உலகின் முதல் பிரவுசரை பயன்படுத்திப் பார்க்கலாம்.

புகைப்படம், கிராபிக்ஸ், வீடியோ… இத்யாதி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான இணைய அனுபவத்திற்கு பழகியவர்களுக்கு, முதல் பிரவுசரில் உலாவும் அனுபவம் ஏமாற்றத்தைக் கூட அளிக்கலாம். ஏனெனில், இந்த பிரவுசரில் வரிவடிவ எழுத்துக்கள் தவிர எதுவும் கிடையாது. வடிவமைப்பு நோக்கிலும் கவரக்கூடிய அம்சங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், இணையத்தில் முதன்முதலில் பிரவுசர் உருவாக்கப்பட்ட போது, அது எத்தகைய அனுபவத்தை அளித்ததோ, அதே வரலாற்று அனுபவத்தை நீங்கள் பெறலாம் என்பது தான் விஷேசம்.

இந்த அனுபவத்தை அளிப்பதற்காக தான், முதல் பிரவுசர் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வலை உருவாக்கப்பட்டதன் 30ம் ஆண்டுநிறைவை கொண்டாடும் வகையில் மென்பொருள் உருவாக்குனர்கள் குழு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் ஒன்று கூடி, முதல் பிரவுசரை மீண்டும் உலகிற்கு அளித்துள்ளது.

முதல் பிரவுசர் பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், வலை உருவான வரலாறு தொடர்பாக சுருக்கமான பிளேஷ்பேக்கை பார்க்கலாம். அதற்கு முன், இணையத்திற்கும், வலைக்குமான வேறுப்பாட்டை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக, வலையும், இணையமும் ஒரே பொருள் தரும் வகையில் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டிற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையம், கம்ப்யூட்டர்களால் ஆன வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என புரிந்து கொள்ளலாம்.

வைய விரிவு வலையின் ( World Wide Web (WWW) ) சுருக்கமாக அமையும் வலை என்பது இணையத்தின் ஒரு அங்கம் அல்லது இணையத்தின் மீது செயல்படும் ஒரு பிரதான செயலி என வைத்துக்கொள்ளலாம்.

இணையத்தின் மூலம் தகவல்களை அணுகுவதற்கான வசதி என்றும் வலையை புரிந்து கொள்ளலாம். இணையத்தின் மூலம் எப்படி இமெயில், எப்டிபி உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்துகிறோமோ, அது போலவே வலையும் இணையத்தை அணுகுவதற்கான ஒரு வசதி. அதாவது இணையம் என்பது அடிப்படை கட்டமைப்பு என்றால், வலை அதன் மீது செயல்படும் ஒரு முக்கிய வசதி. இந்த வேறுபாட்டை அறியாமலே கூட, இணையத்தை பயன்படுத்தலாம் தான்.

மேலும் வலையையே இணையம் என்று கொள்ளக்கூடிய அளவுக்கு வலை மூலம் இணையத்தை அணுகுவதே வெகுஜனமயமாகி இருக்கிறது. இதை வலை நுட்பத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 1969 ஆய்வு திட்டமாக உருவாகி படிப்படியாக வளர்ந்த இணையம், அதன் ஆரம்ப கால கட்டங்களில் பெரும்பாலும், ராணுவ பயன்பாடு, ஆய்வுப்பணிகள் போன்றவற்றுக்கே பயன்படுத்தப்பட்டது. இணைய பயன்பாடு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்ட போது கூட அது சாமானிய மக்கள் அணுகக் கூடியதாக இல்லை. பெரும்பாலும், தொழில்நுட்ப ஆர்வமும், திறனும் உள்ளவர்களே இணையத்தை பயன்படுத்தினர்.

1990 களில் தான் இந்த நிலை மாறியது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, வைய விரிவு வலையின் உருவாக்கமே. வைய விரிவு வலையயே இணையத்தை சாமானிய மக்களும் அணுக வழி செய்தது. இணையத்தில் நாம் அறிந்த புதுமைகளும், பயன்பாடுகளும் வலையின் அறிமுகத்திற்கு பிறகே உருவானவை. பிரவுசர்கள் மூலம் இணையதளங்களை, அணுகுவதும், இணைய பக்கங்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்து சரளமாக வேறு பக்கத்திற்கு தாவி உலாவுவதும் வலை இணைய உலகிற்கு அளித்த கொடையாக திகழ்கின்றன.

இணையத்தை எளிதாக்கிய, வலையை உருவாக்கியவர் பிரட்டன் கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டீம் பெர்னர்ஸ் லீ . சுவிட்சர்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, லீ வலையை உருவாக்கினார். முதல் பிரவுசர் 1990ல் உருவாக்கப்பட்டு, முதல் இணையதளம் 1991ல் அமைக்கப்பட்டு, 1993ல் வலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வலை இணையத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.

வலை தோன்றியவிதம் மிகவும் சுவாரஸ்யமானது. செர்ன் பல்கலைக்கழக்கத்தில் டிம் பெர்னர்ஸ் லீ வந்தடைந்த போது, அங்கு நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றுவதை பார்த்தார். எல்லோரும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக்காக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தினாலும், ஒருவர் பயன்படுத்தும் கோப்புகளை இன்னொருவர் அணுகுவது என்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது.

இதற்கு மாறாக விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வை பகிர்ந்து கொள்ள எளிதான வழி இருக்க வேண்டும் என லீ விரும்பினார். அந்த வழியே தானே உருவாக்க முற்பட்டு, அதற்கான யோசனையை செர்ன் ஆய்வுக்கூட தலைவரிடம் சமர்பித்தார். இன்பர்மேஷன் மெஷ் நெட்வொர்க் எனும் பெயரில், இதற்கான கருத்தாக்க திட்டத்தை அவர் 1989 மார்ச் மாதம் சமர்பித்தார். செர்ன் ஆய்வுகூட தலைவர் இந்த திட்டத்தை ஏற்கவில்லை: நிராகரிக்கவும் இல்லை: தெளிவில்லாமல் ஆனால் சுவாரஸ்மாக இருக்கிறது என்று மட்டும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின், லீயின் கருத்தாக்கம் ஏற்கப்பட்டதும், அதன் பயனாக வலை அறிமுகமானதும் வரலாறு. உலகை மாற்றிய வரலாறு!.

லீ வலைக்கான மூல கருத்தாக்கத்தை சமர்பித்தன் 30 ஆண்டு நிறைவு அடுத்த மாதம் வருகிறது. இடைப்பட்ட 30 ஆண்டுகளில் வலை கோடிக்கணக்கான இணையதளங்களுடன் எங்கேயே முன்னேறிவந்துவிட்டது. இன்னும் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வலையின் துவக்கத்தை நினைத்துப்பார்க்கும் வகையில், அதில் அறிமுகம் செய்த போது லீ உருவாக்கிய முதல் பிரவுசரை மறு உருவாக்கம் செய்துள்ளனர். வலையை குறிக்கும் வகையில் ’வேர்ல்டு வைட் வெப்’ எனும் பெயரிலேயே இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது பிரவுசர்களில் நாம் பார்க்கக் கூடிய அநேக அம்சங்கள் இதில்கிடையாது. இணையதள பெயர்களை டைப் செய்வதற்கான முகவரி கட்டம் கூட கிடையாது. ஆனால் பிரவுசர்களுக்கான அடிப்படி அம்சங்கள் எல்லாம் உண்டு. முக்கியமாக இணைப்புகளுக்கான ஹைபர்டெக்ஸ்ட் வசதி இதில் உண்டு. இணையதளத்தில் உலாவதற்கான வழிகாட்டுதல் வசதியும் உண்டு. இந்தத் தளத்தில் உள்ள அம்சங்கள் எதையும் பயன்படுத்த அவற்றை இரு முறை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த பிரவுசரில், தகவல்களை அணுகுவதோடு, இதிலேயே தகவல்களை உருவாக்கவும் முடியும். அதற்கான வசதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் இதற்கான எடிட்டிங்கில் ஈடுபடலாம்.

வலை துவக்கத்தில் எப்படி இருந்தது என்பதை திரும்பி பார்க்க மட்டும் அல்ல, வலை எப்படி வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முழுமையாக புரிந்து கொள்ள, முதல் பிரவுசரில் உலாவிப்பாருங்கள்: https://worldwideweb.cern.ch/worldwideweb/

நன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *