Tag Archives: chrome

பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

broஇணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்கும்.அதே போல கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என்றாலும் சரி ஒரு கிளிக் தான் தேவை. கால்குலேட்டர் வந்து நிற்கும்.

 

கால்குலேட்டரை தனியே கூட தருவிக்க வேண்டாம்.கூகுலில் கணக்கை கூட்டலோ கழித்தலோ டைப் செய்தால் போதும் அதுவே கால்குலேட்டரை வரவைத்து கணக்கு போட்டு காட்டிவிடும்.

 

இப்படி கூகுலை தேடிப்போய் கூட கணக்கு போட வேண்டியதில்லை .உங்கள் பிரவுசரில் இருந்தே கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.பிரவுசரின் முகவரி கட்டத்தில் விடை தெரிய வேண்டிய கணக்கை டைப் செய்தால் நேராக கால்குலேட்டர் சேவை வந்து விடும்.

 

இதற்கு ஒரே தேவை கூகுல் தேடியந்திரத்தை முகப்பு பக்க தேடிய்ந்திரமாக நீங்கள் அமைத்திருக்க வேண்டும்.குரோம் மற்றும் எக்ஸ்பிலோரர் பிரவுசரில் இந்த குறுக்கு வழி செயல்ப‌டும்.நெருப்பு நரி என்றால் அதில் உள்ள கூகுல் தேடல் கட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

 

கூகுல் இல்லாமலே கூட பிரவுச‌ரிலேயே தேடலாம்.பிரவுசரின் முகவரி கட்டத்தில் ஜாவாஸ்கிரிப்ட் என ஆங்கிலத்தில் டைப் செய்து விட்டு தொடர்ந்து கணக்கை டைப் செய்தால் கால்குலேட்டர் வசதி வந்து விடும்.இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் இது செயல்படும் .எவ்வளவு சிக்கலான கணக்காக இருந்தாலும் இதை பயன்படுத்தலாம்.

 

பிரவசரில் இருந்தே செய்யக்கூடிய சின்ன சின்ன மாயங்கள் மேலும் சில இருக்கின்றன‌.

 

ஏதேனும் இணைய பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? அதற்கென தனியே எந்த சேவையையும் நாடிச்செல்ல வேண்டாம்.பிரவுசரில் குறிப்பிட்ட இணைய முகவ்ரியை அடிப்பதற்கு முன், ஏவெரி என டைப் செய்து, என்டர் கீயை அடித்தால் போதும் அந்த தளத்தின் ஸ்கிரீன்ஷாட் ரெடி.

 

அதே போல குறிப்பிட்ட இணைய முகவ்ரியை சுருக்க வேண்டுமா? பிரவுசரின் முகவரி கட்டத்தில் முதலில் பிட்.லே என டைப் செய்து விட்டு இணையதள முகவரியை அடித்தால் அது தானாக சுருங்கி போய்விடும்.

 

————
எலலா பிரவுசர்களிலும் செயல்படக்கூடிய எளிய குறுக்குவழிகள்; http://www.howtogeek.com/114518/47-keyboard-shortcuts-that-work-in-all-web-browsers/

ஏற்கனவே பார்த்த தள‌ங்களை எளிதாக தேட!

சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தேடியந்திரத்தை மாற்றி கொள்ள வேண்டாம்.கூகுல் தான் உங்கள் அபிமான தேடியந்திரமாக இருந்தால் அதனையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அப்படி என்றால் சீம்பிவோர் எத‌ற்கு என்று கேட்கலாம்?

சீன் பிபோர் கூகுலில் நீங்கள் ஏற்கனவே தேடியதை மீண்டும் எளிதாக தேடுவதற்கான தேடியந்திரம்.அதாவது நீங்கள் நேற்றோ அதற்கு முன் தினமோ அல்லது கடந்த வாரத்திலோ பார்த்த இணையதளங்களை இப்போது எளிதாக தேடி கண்டு பிடித்து தருவது தான் இதன் வேலை.

அதனால் தான் நீங்கள் ஏற்கனவே பார்த்த தளங்களை தேடுவதற்கான தேடியந்திரம் என்று சீன் பிபோர் தன்னை வர்ணித்து கொள்கிறது.அதே பொருள் படும் வகையில் தான் அதன் பெயரும் அமைந்துள்ளது.

ஏற்கனவே பார்த்த தள‌ங்களை ஏன் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு இணையவாசியாக நீங்கள் அசட்டுத்தனமாக கேட்க வாய்ப்பில்லை.காரணம் உங்களுக்கே பல முறை இத்தகைய அனுபவம் இருந்திருக்கும்.கடந்த வாரத்தில் அல்லது கடந்த மாதத்தில் பார்த்த ஒரு இணையதளத்தை மீண்டும் பார்க்க நேரும் தேவையும் விருப்பமும் பல முறை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் என்ன பிரச்சனை என்றால் அந்த தளத்தின் முகவரி சரியாக நினைவில் இல்லாமல் போவது தான்.தளத்தின் ஏதாவது ஒரு சில குறிசொற்களை கொண்டு கூகுலிலேயே மீண்டும் தேடிப்பார்க்கலாம் தான்.அனால் என்ன பிரச்ச‌னை என்றால் கூகுல் பல்லாயிரக்கணக்கில் முடிவுகளை பட்டியல்லிட்டு வெறுப்பேற்றும்.அதிலிருந்து நாம் பார்த்த தளத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு மாறாக பார்த்த தளங்களை எல்லாம் புக்மார்க் செய்து கொள்ளலாம் தான்.

ஆனால் புக்மார்க்கிலும் சிக்கல் இல்லாமல் இல்லை.சுறுசுறுப்பாக புக்மார்க் செய்து விட்டு பின்னர் மறந்து போய் விடுவோம்.

இந்த பிரச்ச‌னை எவையும் இல்லாமல் ஏற்கனவே பார்த்த தளம் எதுவாக இருந்தாலும் அதை எளிதாக தேடித்தருவது தான் சீன் பிபோரின் சிறப்பாக இருக்கிறது.அடிப்படையில் புக்மார்கிங் போல தான் இதுவும்.இதன் புக்மார்கிங் பாரை டவுண்லோடு செய்து கொண்டு விட்டீர்கள் என்றால் அதன் பிறகு நீங்கள் செல்லும் ஒவ்வொரு இணையதளத்தையும் இது குறித்து வைத்து கொள்ளும்.

பின் எப்போது உங்களுக்கு ஏற்கனவே பார்த்த இணையதளம் தேவையோ அப்போது இதில் தேடிப்பார்த்தால் நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலில் இருந்து பொருத்தமான தளத்தை அடையாளம் காட்டும்.

கம்புயூட்டர் விட்டு கம்ப்யூட்டர் மாறினாலும் எந்த பிரச்சனையும் இல்லை.நீங்கள் பார்த்த இணையதளத்தின் பக்கமே மாறியிருந்தாலும் கவலையில்லை,அதன் நகலை இது வைத்திருக்கும்.

பிரவுசரில் உள்ள வரலாறு பக்கத்தோடு இதனை ஒப்பிடலாம் என்றாலும் பலவிதங்களில் இது மேம்பட்டது.காரணம் பிரவுசரில் வரலாற்று பக்கத்தை நாமே கூட அடிக்கடி டெலிட் செய்து விடுவோம்.

சீன் பிபோரில் அந்த சிக்கல் எல்லாம் கிடையாது.

இதனை பயன்ப‌டுத்தும் போது மிக அழகாக எந்த நாளில் பார்த்தது,செய்தியா புகைப்படமா அல்லது வீடியோவா என்றெல்லாம் குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம்.

இணையத்தில் தேடப்படுவதில் 40 சதவீதம் ஏற்கனவே பார்த்த தளங்கள் தொடர்பானதாக இருப்பதாக சொல்லும் இந்த் தேடியந்திரம் அந்த தேடலை எளிதாக்கி தருவதாக சொல்கிற‌து.

வீட்டில் பொருட்களை வைத்த இடம் தெரியாமல் தேடுபவர்கள் போல இணையத்தில் பார்த்த தளங்களை மறந்து திண்டாடுபவர்கள் இந்த தேடியந்திரத்தை பற்றிக்கொள்ளலாம்.

தேடியந்திர‌ முகவரி;https://www.seenbefore.com/pages/landing

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான்.

ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி தளங்களை பற்றி கேட்கவே வேண்டாம்,ஒலிம்பிக்கிற்கு என்று தனி பகுதியே அமைக்கப்பட்டுள்ளது.

தேடியந்திரமான கூகுல் வேறு தினம் ஒரு ஒலிம்பிக் லோகோ என கலக்கி கொண்டிருக்கிறது.

ஒலிம்பிக் வீரர்களின் டிவிட்டர் குறும்பதிவுகள் பற்றியும் பரப‌ரப்பாக பேசப்படுகிறது.

விளையாட்டு திருவிழா என்று வர்ணிக்கப்படும் ஒலிம்பிக் தொடர்பான எதிர்பார்ப்பும் பரபரப்பும் புரிந்து கொள்ளக்கூடியது தான்.

இப்படி இணையமே ஒலிம்பிக் மயமாகி இருக்கும் நிலையில் ஒலிம்பிக்கிற்கு எதிராக ஒரு இணைய சேவை அறிமுகமாகியிருக்கிறது தெரியுமா?

ஒலிம்பிக் செய்திகளை உங்கள் பார்வையில் இருந்து முற்றிலுமாக மறைத்து விடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சேவை அது.

எந்த இணையதளத்திற்கு சென்றாலும் ஒலிம்பிக் செய்திகள் கண்ணில் படுவதை விரும்பாத‌வர்கள் (அப்படி எத்தனை பேர் இருப்பார்கள்)பிரவுசரின் நீட்சியாக வரும் இந்த சேவையை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் பிற‌கு ஒலிம்பிக் தொடர்பான எல்லா செய்திகளும் அவர்கள் பார்வைக்கு முடக்கப்பட்டு விடும்.

ஆக ஒலிம்பிக் பற்றிய கவன‌ சிதறல் இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.

ப்ரி ஆர்ட் ஆண்டு டெக்னாலஜி என்னும் தொழிநுட்ப இணையதளம் ஒல்விம்பிக்ஸ் என்னும் பெயரிலான இந்த பிரவுசர் நீட்சி சாதனத்தை உருவாக்கி உள்ளது.

ஒலிம்பிக்ஸ் வந்து விட்டது,எல்லா பெரிய நிகழ்வுகள் போல இப்போதும் இணையத்தில் நாம் விரும்பி செல்லும் இடங்களில் எல்லாம் ஒலிம்பிக்கின் ஆதிக்கம் தான்.என‌வே தடகளம் பற்றி எல்லாம் கவலைப்படாத இணையவாசிகள் வசதிக்காக இந்த சேவையை உருவாக்கி இருப்பதாக இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌து.

குரோம்,பயர்பாக்ஸ்,சபாரி ஆகிய பிரவுசர்களில் இது செயல்படுகிறது.

விளையாட்டு பிரியர்களும்,ஒலிம்பிக் ரசிகர்களும் இதனை கொஞ்சம் ஓவர் என கருதலாம்.

ஆனால் விஷயம் என்னவென்றால் இண்டெர்நெட்டில் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்த்தும் சேவை இது.

ஒலிம்பிக்கை பின் தொடர‌ விருப்பமில்லாதவர்கள் எல்லா இணையதளங்களிலும் ஒலிம்பிக் பற்றிய செய்திகளே இடம் பெறூம் போது வெறுப்படைய வாய்ப்பிருக்கிற‌து அல்லவா?

அவர்கள் தங்கள் அளவில் ஒலிம்பிக்கிற்கு தடை விதித்து கொள்ள இந்த சேவை வழி செய்கிறது.

விளையாட்டு உணர்வின் உச்சமாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியை இப்படி விரோதமாக நினைப்பதை ஏற்று கொள்ள முடியாது தான்.ஆனால் குறிப்பிட்ட நிக்ழ்வுகளின் போது எல்லா தளங்களும் அந்த நிகழ்வு பற்றியே பேசுவதும் அலசி ஆராய்வதும் பலருக்கு அயர்ச்சியை தருவது நிச்சயம்.

இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட அந்த நிகழ்வுகளை குறிச்சொல் பூட்டு போட்டு முடக்கி விடக்கூடிய பொதுவான ஒரு இணைய தடுப்பு சேவையை உருவாக்கினாலும் நன்றாக தான் இருக்கும்.

இணையதள முகவரி;http://fffff.at/olwimpics/