கூகுளை வழி நடித்தும் தமிழர் சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

g3
உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள், அடுத்த கட்ட வளர்ச்சியை குறி வைத்து மாபெரும் சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், புதிதாக தாய் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கீழ் இயங்கும் மணி மகுடமான கூகுளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையை தேடி வந்திருக்கிறது. சாப்ட்வேர் கனவுகளுடன் அமெரிக்க சென்று அந்நாட்டின் முன்னணி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு வந்திருக்கும் இந்த தமிழரின் வெற்றிக்கதை இது;

இந்தியர்கள் சாப்ட்வேர் புலிகள் என்பது தெரிந்த விஷயம் தான்.இந்திய சாப்ட்வேர் வல்லுனர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது எல்லாம் இப்போது செய்தி அல்ல; அந்த நிறுவனங்களை வழிநடத்தும் பெறும் அளவுக்கு அவர்கள் ஆற்றப் பெற்றிருப்பது தான் செய்தி. ஏற்கனவே முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான சத்யா நாதெள்ளா இருந்து வருகிறார். சவாலான சூழலில் அவர் மைக்ரோசாப்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்கிறார். இப்போது இன்னொரு முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு இந்தியரான சுந்தர் பிச்சையை தேடி வந்திருக்கிறது. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்த பச்சைத்தமிழர் என்பது கூடுதல் சிறப்பு.
இணைய உலகில் கூகுளை தெரியாதவர்களே இருக்க முடியாது. இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தேடியந்திரத்தை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். எது தேவை என்றாலும் கூகுளிடம் கேளுங்கள் என்று சொல்வது பலருக்கு இயல்பாக இருக்கிறது.

கூகுள் சாம்ப்ராஜ்யம்

கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரமாக இருப்பதில் கூட வியப்பில்லை. தேடல் தவிர இ-மெயில் சேவை, பிரவுசர், இயங்கு தளம், கோப்பு பகிர்வு சேவை என்று எண்ணற்ற பிரிவுகளில் அது செல்வாக்கு பெற்றிருக்கிறது.இவற்றில் பெரும்பாலானவற்றில் கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது. இ-மெயில் சேவையில் அதன் ஜி-மெயில் தான் முன்னணியில் இருக்கிறது. பிரவுசர்களில் கூகுள் குரோம் தான் அதிகம் பயன்பட்ய்த்தப்படுகிறது. அதன் கோப்பு பகிர்வு சேவையான கூகுள் டிரைவும் சந்தையில் முன்னோடியான டிராப்பாக்சிற்கு நிகராக உள்ளது.
மேலும், ஸ்மார்ட்போன் உலகில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் ஆதிக்கம் செலுத்துகிறது. இவை தவிர கூகுள் ரோபோக்கள் உருவாக்கம், தானாக இயங்கும் கார்கள், பலூன் மூலம் இணைய வசதி என பல சோதனை முறையிலான மற்றும் ஆய்வு நோக்கிலான திட்டங்களிலும் கவனம் செலுத்து வருகிறது.
சுருக்கமாக சொல்வது என்றால் இணைய உலகில் கூகுள் ஒரு சாம்ப்ராஜ்யமாக இருக்கிறது. இந்த இணைய சாம்பிராஜ்யம் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரண்டு இளைஞர்களால் துவக்கப்பட்டது. துவக்கத்தில் தூய்மையான தேடிய்ந்திரமாக இருந்த கூகுள், மிகச்சிறந்த தேடல் அனுபவத்தை வழங்கி முன்னணி தேடியந்திரமாக உருவானது. அதன் பிறகு தேடலை மையமாக கொண்டு இ-மெயில் உள்ளிட்ட துணை சேவைகளை அறிமுகம் செய்து தனது செல்வாக்கை பல துறைகளில் விரிவாக்கம் செய்து கொண்டது.இன்று கூகுள் கால் வைக்காத துறையே கிடையாது என்று சொல்லும் வகையில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கிறது.
இன்னும் வளர்ச்சி எனும் குறிக்கோளுடன் கூகுள் துடிப்புடன்
g4
திடீர் சீரமைப்பு
செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. கூகுள் நிறுவனத்தி அதிரடி சீரமைப்பு மேற்கொள்ளப்படுவதற்கான அந்த அறிவிப்பை நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் வெளியிட்டார். கூகுளுக்கு புதிதாக தாய் நிறுவனம் ஒன்று உருவாக்கப்படுக்கிறது என்பது அந்த சீரமைப்பின் மையம். புதிய தாய் நிறுவனம் ஆல்பபெட் என அழைக்கப்படும். கூகுள் அதன் துணை நிறுவனமாக தனியே இயங்கும். ஜி-மெயில், ஆண்ட்ராய்டு , யூடியூப் உள்ளிட்ட சேவைகளில் கூகுள் வசம் இருக்கும். ஆய்வு திட்டங்கள் மற்றும் ரோபோ பிரிவு உள்ளிட்டவை தாய நிறுவனத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாய் நிறுவனமான அல்பபெட் தனது தலைமையில் இயங்கும் என அறிவித்த லாரி பேஜ், கூகுள் நிறுவனம் இந்தியரான சுந்தர் பிச்சையின் கீழ் இயங்கும் என அறிவித்தார். 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து தனது திறமையால் வேகமாக முன்னேறிய சுந்தர் பிச்சை மூத்த துணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தார்.நிறுவனத்தின் தயாரிப்பு புரிவுக்கு பொறுப்பேற்றிருந்தவர் சி.இ.ஓ லாரி பேஜின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். ஆண்ட்ராய்டு வளர்ச்சியிலும் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ எனும் மகுடத்தை அவருக்கு லாரி பேஜ் சூட்டியிருக்கிறார்.பிரம்மாண்டமான வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில் கூகுளை வழிநடத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கூகுளின் திடீர் முடிவு ஆச்சர்யத்தை அளித்தாலும் அதன் தேர்வு கைத்தட்டல்களையே பெற்று வருகிறது. சபாஷ் சரியான நபரிடம் தான் நிறுவனம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா மற்றும் ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் ஆகியோர் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் வாழ்த்துக்கள் குவிகின்றன. இதனிடையே , மற்றொரு முன்னணி இணைய நிறுவனமான டிவிட்டர் தனது தலைமை பதவிக்காக சுந்தர் பிச்சையை கொத்திச்செல்ல குறி வைத்திருந்தது, அதனை அறிந்தே அவரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அவர் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார் எனும் செய்தியும் வெளியானது.

பிச்சை தேர்வு ஏன்?
கூகுளின் இந்த முடிவுக்கு மேலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஐரோப்பாவில் அதன் தேடல் உத்திக்கு எதிராக நடைபெற்றும் வரும் வழக்கில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க கூகுள் தனி நிறுவனமாக ஆக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் பல துறைகளில் செயல்பாடுகளை கொண்டிருக்கும் நிலையில் கவனத்தை கூர்மையாக்கி கொள்ள துணை நிறுவனத்தை உருவாக்குவது உதவும் என கருதப்படுகிறது. மேலும் நிறுவனர்கள் இருவரும் ஆய்வு சார்ந்து முயற்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யவும் இது வித்திடும் என கருதப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் சரி, துணை நிறுவனமாக்கப்பட்ட கூகுளை வழிநடத்தும் பொறுப்பிற்கு சுந்தர் பிச்சை தகுதியானவராகவும், பொருத்தமானவராகவும் கருதப்பட்டிருக்கிறார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
சுந்தர் பிச்சையின் ஆற்றல் மற்றும் ஈடுபாடு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக கூறிய லாரி பேஜ், சுந்தர் பிச்சை போல திறமை வாய்ந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தை வழிநடத்த கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்றும் அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சை இந்த இடத்திற்கு உயர்ந்தது எப்படி? இதற்கான ஆற்றலும் திறமையும் அவரிடம் இயல்பாக இருந்ததை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
சுந்தர் பிச்சை சென்னையில் சாதாரண குடும்ப்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ( அவர் பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை இணையத்தில் இருக்கிறது). அவரது தாய் ஸ்டெனோகிரபராக பணியாற்றினார். தந்தை ரகுநாத பிச்சை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். சிறு வயதில் அவர்கள் வீட்டில் டிவி கூட கிடையாது.

தொழில்நுட்ப ஆர்வம்
சிறுவனாக இருந்த போதே தனது பொறியல் வேலையில் மகனுக்கு ஆர்வம் இருந்ததாக ரகுநாத பிச்சை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
தொழில்நுட்பத்துடனான முதல் அறிமுகம் பிச்சைக்கு 12 வயதில் நிகழ்ந்தது. அப்போது வாங்கிய தொலைபேசி தான் அது. சுந்தர் பிச்சை தொலைபேசி மீது ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டதோடு அதில் டயல் செய்யப்படும் ஒவ்வொரு எண்ணையும் நினைவில் நிறுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்தார். தொலைபேசி எண் ஏதாவது மறந்துவிட்டால் மாமா தன்னிடம் கேட்பார் என்று சுந்தர் பிச்சை இந்த ஆற்றல் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த ஆற்றல் அவருக்கு இன்று பணிசூழலில் கைகொடுக்கும் அம்சங்களில் ஒன்றாக இருப்பதை சக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு முறை கூகுள் ஆலோசனை கூட்டம் ஒன்றில் குரல் வழி தேடல் பற்றிய விவாதம் வந்த போது அது தொடர்பான புள்ளி விவரங்களை பிச்சை அப்படியே ஒப்பித்திருக்கிறார். இந்த பிரிவிற்கு தலைமை வகிக்கும் பொறியாளருக்கு கூட அந்த விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. இப்படி பிச்சை தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களை தனது ஆற்றலால் பல முறை வியக்க வைத்திருக்கிறார்.

ஐஐடியில் இருந்து
பள்ளிப்படிப்பை முடித்த்தும் புகழ் பெற்ற ஐஐடி கராக்பூரில் பொறியியல் பட்டம் பெற்ற பிச்சை, ஸ்காலர்ஷிப் பெற்று அமெரிக்காவின் ஸ்டாட்போர்டிற்கு உயர் கல்விக்காக சென்றார். அமெரிக்க பயணச்செலவுக்காக அவரது குடும்பல் கடன் வாங்க வேண்டியிருந்தது, பெரும்பாலான இந்திய குடும்பங்கள் போலவே பெற்றோர் தனது எதிர்காலத்திற்காக தங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டு பல தியாகங்களை செய்ததாக பிச்சை குறிப்பிடுகிறார்.
1993 ல் அவர் ஸ்டான்போர்டில் படிக்கத்துவங்கினார். அப்போது தனக்கு தேவைப்பட்ட பேக்பாக் சாதனத்தை வாங்க வசதியில்லாமல் இணையத்தின் மூலம் ஏற்கனவே பயன்படுத்திய ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். பிச்சை முதலில் ஸ்டான்போர்டில் பிஎச்டி பட்டம் பெற்று கல்வித்துறையில் தான் பணியாற்ற திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இந்த திட்டத்தை மாற்றிக்கொண்டு சிலிக்கான் வேலி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் எம்பிஏ பட்டம் பெற்று மெக்கின்சி நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றினார்.
இதனிடையே தனது காதலியான அஞ்சலியையும் திருமணம் செய்து கொண்டார்.
2004 ல் அவர் தேடியந்திர நிறுவனமான கூகுளில் சேர்ந்தார். அதிலிருந்து நிறுவன ஏணியில் ஏறிக்கொண்டே இருந்தார். முதலில் தேடல் சார்ந்த உப சேவை ஒன்றில் பணியாற்றினார். டூல் பார் எனும் இந்த சேவை பிரவுசரில் இருந்தே தேடுவதை சாத்தியமாக்கியது. இந்த கால கட்டத்தில் தான் பிச்சை கூகுளி சொந்தமாக பிரவுசரை உருவாக்க வேண்டும் என நிறுவரான லாரி பேஜிடம் வலியுறுத்தினார். அப்போதைய தலைவரான எரிக் ஸ்கிமிட் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் லாரி பேஜ் பச்சைக்கொடி காட்டினார். இதன் பயனாக தான் கூகுள் குரோம் பிரவுசர் உண்டானது. பிரவுசர் பரப்பில் கூகுளுக்கு வெற்றியையும் கொடுத்தது.இப்போது சந்தையின் 32 சதவீத பங்கு குரோம் வசம் இருக்கிறது.
குரோமை அடிப்படையாக கொண்டு லேப்டாப்களுக்கான இயங்கு தளத்தை உருவாக்கும் பிச்சையின் யோசனையும் நல்ல பலனை கொடுத்தது.

ஆண்ட்ராய்டு பொறுப்பு
2008ல் ஆண்ட்ராய்டு போன்கள் அறிமுகம் போது அதன் செயல்பாட்டிலும் பிச்சை முக்கிய பங்கு வகித்தார். ஆண்ட்ராய்டை உருவாக்கிய ரூபின் அதை கூகுளிடம் விற்றுவிட்டு தொடர்ந்து அதன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்தார். ரூபினுக்கும் கூகுள் குழுவினருக்கும் ஆண்ட்ராய்டு தொடர்பாக மோதல் ஏற்பட்ட போதெல்லாம் பிச்சை தான் அதை திறம்பட சமாளித்து இருக்கிறார். இறுதியில் ஆண்ட்ராய்டும் பிச்சையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் நிறுவன பிராடக்ட் பிரிவுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட பிச்சை அதன் மூத்த துணைத்தலைவராக உயர்ந்தார். சமீப காலமாக ஆண்ட்ராய்டு தொடர்பாக முக்கிய அறிமுகங்களை பிச்சையே வெளியிட்டு வந்தார்.
புதிய திட்டம் பற்றிய அறிவிப்பில் லாரி பேஜ், என்னைவிட அதிகமாக நிறுவன தயாரிப்புகள் பற்றி பேசி வருவதாகவும், தன்னைவிட சிறப்பாக பேசி வருவதாகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் தான் சுந்தர் பிச்சை 43 வது வயதில் கூகுள் சி.இ.ஒ வாகி இருக்கிறார்.
ஒல்லியான தோற்றத்துடன் , தாடியுடன் சிரித்த முகத்துடன் காணப்படும் சுந்தர் பிச்சை கூகுள் ஊழியர்கள் மத்தியில் அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரியவராக கருதப்படுகிறார். அவரை எளிதாக அணுக முடிவதாக பலரும் பாராட்டுகின்றனர். மேலும் அவரது அரவணைத்து போகும் ஆற்றலும் முக்கியமாக சொல்லப்படுகிறது. நிறுவன சிக்கல்களை அவர் லாவகமான எதிர்கொள்ளும் விதமும் குறிப்பிட்த்தக்கதாக சொல்லப்படுகிறது. ஒருமுறை ஆண்ட்ராய்டு பயன்பாடு தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் பிரச்சனை வந்த போது பிச்சை தான் அதை திறம்பட கையாண்டு தீர்த்து வைத்திருக்கிறார். அன்பான தந்தையாகவும் இருக்கும் சுந்தர் பிச்சை இணைய உலகிலும் விரும்ப்படுகிறார் . இப்போது கூகுள் நிறுவனத்தில் உச்சிக்கு வந்து, சிலிக்கான் வேலியில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தியர்கள் மத்தியில் இன்னமும் ஆழமாக விதைத்திருக்கிறார்.

—————-
\

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.