Tag Archives: flim

பூனைகளுக்காக ஒரு இணைய பட விழா.

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற பட்டத்தை வேண்டுமானால் நாய்கள் தட்டிச்சென்றிருக்கலாம்.ஆனால் இணையத்தை பொருத்தவரை சிறந்த தோழன் என்ற பெருமை பூனைகளுக்கே சொந்தமானது.

சந்தேகம் இருந்தால் பூனை வீடியோக்களை தேடிப்பாருங்கள்.அதாவது இது வரை யூடியூப் மூலமோ அல்லது நண்பர்கள் அனுப்பி வைத்த பூனை வீடியோவையோ இது வரை நீங்கள் பார்த்து ரசித்ததில்லை என்றால்!

காரணம் இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது.பூனைகள் வீடியோ பூனைகள் புகைப்படங்கள் என்று இணையத்தில் எங்கு திரும்பினாலும் பூனைகள் தான்.அதிலும் அழகான பூனை வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பியானோ வாசிக்கும் பூனை,கம்ப்யூட்டர் இயக்கும் பூனை என விதவிதமான பூனை வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பலட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் என்று சொல்வது போல இண்டெர்நெட்டுக்கு முந்திய யூஸ்நெட் காலத்திலேயே பூனை புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உருவாகி விட்டதாக பூனைகளுக்கான வரலாற்று பக்கம் சொல்கிறது.(ஆம் பூனைகளுக்கும் இணையத்திற்குமான வரலாற்றை விளக்குவதற்கு என்றே ஒரு நீளமான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.)

அதன் பிறகு வீடியோ பகிர்வை சுலபமாக்கிய யூடியூப் 2006 ல் அறிமுகமான போது பூனைகள் தோன்றும் வீடியோ காட்சிகள் தலை காட்டத்துவங்கின.

பூனைகளுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டா என்று தெரியவில்லை.ஆனால் பூனை வீடியோ காட்சிகள் எல்லாமே செம கியூட்டாக ரசித்து சிரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.இதன் காரணமாக பூனை வீடியோக்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக் வருகைக்கு பிறகு பூனை வீடியோக்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வது இன்னும் அதிகரித்தது.

இதனிடையே புனைகளை வைத்து நகைச்சுவையை ஏற்படுத்தும் போக்கிற்கு எல் ஒ எல் கேட்ஸ் என பட்டப்பெயரும் சூட்டப்பட்டது .

எல் ஓ எல் கேட்ஸ் என்று இணையத்தில் தேடிப்பாருங்கள் அதன் பின்னர் சிரித்து கொண்டே இருப்பீர்கள் .

பிரபல அமெரிக்க நாளிதழான நியுயார்க் டைம்ஸ் இது பற்று பூனைகள் ஏன் இணையத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன? என்று ஒரு கட்டுரையே வெளியிட்டிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.டைம் பத்திரிகையும் இணையத்தில் பூனைகள் இல்லாமல் ஒரு நாள் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளது.

பூனைகள் வீடியோக்கள் யூடியூப்பில் உடனே ஹிட்டாவது ஏன் என்று எல்லாம் ஆய்வு செய்துள்ளனர் தெரியுமா?

இந்த திடீர் பூனை புராணம் எதற்கு என்று கேட்கலாம்.பூனைகளுக்காக என்றே ஒரு திரைப்பட விழா நடைபெற்று இருப்பதை தெரிவிக்க தான் இந்த முன்னோட்டம்.

இணைய பூனை வீடியோ பட விழா என அழைக்கப்படும் அந்த பட விழா ஆகஸ்டு 30 ம் தேதி நடைபெற்றுள்ளது.அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இந்த பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட‌து.கேத்தே ஹால் என்பவர் இந்த படவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

திரைப்பட விழாக்கள் போலவே இந்த பட விழாவிற்கான பூனை வீடியோ ப்டங்களையும் சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டிருந்தது..இணையவாசிகள் தங்கள் அபிமான பூனை வீடியோவை சமர்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இந்த பட விழாவிற்கான இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் தனிமையில் அனுபவிக்கும் பூனை வீடீயோ ரசனையை பொது அரங்கிறகு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாக இந்த பட விழாவை நடத்தும் ஹில் உற்சாகமாக கூறியுள்ளார்.

பூனைகள் ரசிகத்தக்கவை,அவற்றின் வீடியோ காட்சிகள் எளிதில் நகைச்சுவை உணர்வை அள்ளித்தருபவை என்றெல்லாம் சொல்லப்படுவதன் அடையாளமாகவே இந்த பட விழா உருவாகியுள்ளது.

பூனைகளுக்கெல்லாம் ஒரு பட விழாவா என நம்ப முடியாவிட்டால் இப்போதே பூனைகள் பற்றி கூகுலில் தேடிப்பாருங்கள்.அந்த சந்தேகம் இல்லாவிட்டால் பூனை படவிழா தளத்திற்கு சென்று பாருங்கள்.

இணையதள முகவரி;http://www.walkerart.org/openfield/event/internet-cat-video-film-festival/

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே இருப்பது உண்மையிலேயே அவர்கள் தானா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது தான்.

எனவே ஏமாற விரும்பாதவர்கள் பிரபலங்களின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடருவதற்கு முன் அந்த பதிவுகளை எழுதுவது அவர்கள் தானா என்பதை உறுதி படுத்தி கொள்ள விரும்புவார்கள்.ஒரு சிலர் அக்னிபரிட்சை வைப்பது போல பிரபலங்களிடமே இது நீங்கள் தான் என்பதை நிருபித்து காட்ட முடியுமா என்று கேட்பது உண்டு.

பிரபல‌ மாடல் அழகியான கெல்லி புருக்கிடம் லே பிரான்சிஸ் என்பவர் இது போன்ற கேள்வியை தானெ எழுப்பினார்.இது உண்மையான கெல்லி தானா அல்லது,வேறு யாராவது வயதான மனிதர் கெல்லி பெயரில் ஏமாற்றுகிறாரா என்பது போல அவர் கேள்வி அமைந்திருந்தது.

கெல்லி இதை படித்ததும் ,ஆம் நானே தான்,அதை நிருபிக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

வேறு ஒன்றும் வேண்டாம் எனக்கு உங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நேரடியாக ஒரு மெசேஜ் அனுப்புங்கள் போதும் என்று அவர் கூறியிருந்தார்.

கெல்லி என்ன நினைத்தாரோ தெரியவில்லை,கண்ணாடி முன் அரை நிர்வான்மாக நிற்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டதோடு ,இந்த படத்தை பார்த்த பின்னாவது நான் தான் என நம்புவீர்களா என கேட்டிருந்தார்.

நடிகைகள் அவப்போது தங்கள் எக்ஸ்குலுசிவ் படங்களை ரசிகர்களுடன் நேரடியாக் பகிர்ந்து கொள்ள டிவிட்டரை பயன்படுத்துவதால் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை.ஆனால் இந்த படத்தை பார்த்த பிற‌கும் அந்த நபர் இந்த படமும் போலியாக இருக்கலாம் என்று சொன்னது தான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.

டிவிட்டர் செய்கிறார் ஜேம்ஸ் பாண்ட்

திரையில் ஜேம்ஸ் பாண்ட செய்யாத சாக‌சங்கள் கிடையாது.பாண்டின் சாக்சங்கள் எப்போதுமே ஹைடெக்காக இருக்கும்.இப்போது பாண்ட் டிவிட்டரும் செய்யத்துவங்கியிருக்கிறார்.

பாண்டின் டிவிட்டர் கைப்பிடி (முகவரி) என்னவாக இருக்கும் என்று யூகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.பாண்டின் அடையாளமான 007 என்னும் இருந்து தான் ஜேம்ஸ் பாண்ட் டிவீட் செய்யத்துவங்கியிருக்கிறார்.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படத்திற்கான அறிவிப்பின் போது தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் நாயகன் ஜேம்ஸ் பாண்ட் சார்பில் பேஸ்புக் பக்கமும் டிவிட்டர் கணக்கும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

@007 என்னும் டிவிட்டர் முகவ‌ரியில் ஜேம்ஸ் பாண்டை பின்தொடரலாம்.பாண்டின் குறும்பதிவுகள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமா இல்லை வெறும் மார்க்கெட்டிங் முயற்சியாக போரடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
———–

http://twitter.com/#!/007

நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம்

billaடாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.காரணம் நாமும் ஒரு டாப் டென் பட்டியலை தயாரித்து வெளியிடுவது சுலபம்.ஆனால் அதன் தரவரிசையை புரிய வைப்பதற்கும் நியாயப்ப‌டுத்துவதற்கும் நிறைய உழைக்க வேண்டும்.மனம் போன போக்கில் பட்டியல் தயாரித்து வெளியிடுவது வாசகர்களை ஏமாற்றும் செயல்.

என் மனதுக்குள் பல பட்டியல் இருந்தாலும் அவற்றை பரிசிலித்து அலசி ஆய்வு செய்ய போதிய நேரமும் உழைப்பும் செலவிட முடியாததால் இப்போதைக்கு எந்த பட்டியலையும் வெளியிடுவதாக இல்லை.

இருப்பினும் ‘பிலிம்ஜாக்’ இணையதள‌த்தை நம்பர் ஒன் திரைப்பட இணையதளம் என்று அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.நம்பர் ஒன் என்பது இது வரை நான் பார்த்த திரை இணையதள‌ங்களிலேயே இது அதி சிறந்தது என தோன்றச்செய்வதால்.

எத்த‌னையே திரைப்ப‌ட‌ இணைய‌தள‌‌ங்க‌ள் இல்லாம‌ல் இல்லை.ஆனால் அவ‌ற்றை எல்லாம்விட‌ பிலிம்ஜாக் மேம்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து.
அப்ப‌டி இந்த‌ தள‌த்தில் என்ன‌ சிற‌ப்பு என்று கேட்க‌லாம்.

அடிப்ப‌டையில் இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் எளிமையான‌து.திரைப்ப‌டங்க‌ள் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌ இந்த‌ த‌ள‌ம் உத‌வுகிற‌து.இத‌னை மிக‌வும் அழ‌காக‌ செய்கிற‌து.

‌த‌க‌வ‌ல்க‌ளை தேட‌ தான் கூகுல் இருக்கிற‌தே என்று நினைக்க‌ வேண்டாம்.அல்ல‌து இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் போன்ற‌ தள‌ங்க‌ள் இருக்கின்ற‌னெவே என‌ அல‌ட்சிய‌மாக‌ க‌ருத‌ வேண்டாம்.

பிலிம்ஜாக் த‌ன‌து அறிமுக‌த்தில் கூறுவ‌து போல திரைப்ப‌ட‌ங்க‌ள் சார்ந்த‌ த‌க‌வ‌ல்க‌ளை ‌முற்றிலும் புது வித‌மாக‌ தேடித்த‌ருகிற‌து.

நீங்க‌ள் எந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி அறிய‌ விரும்புகிறீர்க்ளோ அந்த‌ ப‌டத்தின் பெய‌ரை தேட‌ல் க‌ட்ட‌த்தில் டைப் செய்து காத்திருந்தால் போதும் படம் பற்றிய விவரங்களை வெகு அழகாக பட்டியலீட்டு காட்டி விடுகிற‌து.

ஒரு திரைப்ப‌ட‌ம் குறித்து நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ விரும்பும் த‌க‌வ‌ல்க‌ள் அனைத்துமே அழ‌காக‌வும் தெளிவாக‌வும் இட‌ம்பெறுகிற‌து.

தைர‌ப்ப‌ட‌ம் ப‌ற்றிய‌ சுருக்க‌ம் இட‌ம்பெற்றிருக்க,அதில் ப‌ங்கேற் க‌லைஞ்ச‌ர்க‌ள் ப‌ர்ரிய‌ விவ‌ர‌ங்க‌ளும்,வ‌ர்த‌த‌க் ரீதியாக‌ அப்ப‌ட‌ம் வெற்றி பெற்ற‌தா என‌ விள‌க்கும் க‌ட்ட‌மும் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.கூட‌வே ப‌ட‌ம் தொட‌ர்பான‌ இணைய‌த‌ள‌ இணைப்புக‌ளும் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு அதில் ந‌டித்த‌ ந‌டிக‌ர்க‌ளுக்கென்று த‌னி ப‌ட்டிய‌லும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை நீங்க‌ளே கூட‌கூகுலில் தேட‌லாம். ஆனால் அவ‌ற்றை மிக‌ அழ‌காக‌ ஒர்ரே இட‌த்தில் தொகுத்து த‌ந்திருப்ப‌து தான் சிற‌ப்பு.இப்ப‌டி எல்லா ப‌ட‌ங‌க‌ள் ப‌ற்றியும் ஒரே இட‌த்தில் த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ முடிவ‌து அரிது தான்.

இந்த‌ த‌ள‌த்தின் ம‌ற்றொரு சிற‌ப்ப‌ம்ச‌ம்,ப‌ட‌ங்க‌ளுக்கான‌ டிவிட்ட‌ர் இணைப்பும் கொடுக்க‌ப‌ப்ட்டிருப்ப‌து தான்.அதாவ‌து குறிப்பிட்ட‌ ப‌ட‌ம் குறித்து த‌ற்போது டிவிட்ட‌ர் வ‌ழியே ர‌சிக‌ர்க‌ள் என்ன‌ சொல்கின்ற‌ன‌ர் என்ப‌தை தெரிந்து கொள்ள‌ முடியும்.ப‌ட‌த்தை பார்க்க‌லாமா வேண்டாம எஅன் முடிவு செய்ய‌ இது உத‌வும்.

இவ‌ற்றைவிட‌ இந்த‌த‌ள‌த்தில் பார்ட்டும்ப‌டியான‌ அம்ச‌ம் என்ன‌வென்றால் ந‌ம்மூர் ப‌ட‌ங்க‌ளௌக்கான‌ விவ‌ர‌ங்க‌ளையும் தொகுத்து வைத்திருப்ப‌து தான்.

போதுவாக‌ திரைப்ப‌ட‌ சேவை தள‌‌ங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் ப‌ட‌ங்கள‌சார்ந்த‌தாக‌வே இருக்கும். இந்திஅய் ப‌ட‌ங‌க‌ளை தேடிப்பார்த்தால் ஏமார்ற‌மே ஏற்ப‌டும். ஆனால் இந்த‌ த‌ல‌த்தில்ம‌த‌ர் இண்டியா ப‌ற்றி தெடினாலும் த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகிர‌து. அஜித்தின் பில்லா பற்றி தேடினாலும் த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகிற‌து.பெரிய‌ விஷ‌ய‌ம் தானே.

———–
link;
http://www.filmjog.com/