Tag Archives: nokia

நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

Nokia-3310-796x398புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்த போன் எதிர்பார்த்தபைடியே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஸ்மார்ட்போன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும்,  அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த போன் இன்னமும் மறக்கப்படாமல் இருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒரு காலத்தில் செல்போன் உலகில் நோக்கிய முன்னணி நிறுவனமாக கொடிகட்டிப்பறந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப்பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், அதன் பிறகு அதன் செல்போன் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் செல்போன் உலகின் பிளேஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம். நோக்கியா போன்களை பயன்படுத்தியிருந்தவர்கள், என்ன தான் இருந்தாலும் நோக்கியா போன் போல வருமா என்று கூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றி பழம் பெருமை பேசலாமேத்தவிர, ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியா போன்களுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிசிற்கு தயாராகி வருகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மொபைல் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 போன்கள் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் போன்களை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்த புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசிய செய்திகளை கசிய விடுவதில் வல்லவராக கருதப்படும் தொழில்நுட்ப பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதார செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பழைய போனின் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். நவீன ஸ்மார்ட்போன் இருந்தால் என்ன, இரண்டாவது போனாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன் என்பது போல பலர் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மொபைல் காங்கிரசில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  https://thenextweb.com/mobile/2017/02/26/the-nokia-3310-is-back-baby/#.tnw_yYfprOBn

AAmS6buஐபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. முதல் விஷயம் இந்த போன் அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப்பிரிவில் மற்ற போன்களில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களை கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாக தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவைத்தவிர, செல்போன் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த போன் பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்கு பிடிக்க கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாக இதன் உறுதியான தன்மையும், இந்த போனை விரும்பத்திற்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கிய பிரியர்கள் பேசித்தீர்க்க தயாராக இருக்கின்றனர்.

1999 ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000 மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் நோக்கியாவின் சூப்பர் ஹிட் போனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் போன்கள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்க கூடியது , உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த போன், ஸ்மார்ட்போன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்கு சான்று.

இந்த போனின் செல்வாக்கிற்கு இன்னொரு உதாரணம், பின்லாந்து நாட்டில் நோக்கியா 3310 – தேசிய இமோஜிகளில் ஒன்றாக 2015 ல் தேர்வு செய்துள்ளனர். உடைக்க முடியாத தன்மையை உணர்த்தும் அந்த இமோஜிக்கு இந்த போன் தான் அடையாளம். இவ்வளவு ஏன், பிரிட்டனைச்சேர்ந்த டேவ் மிட்சல் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்த போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். 2000 மாவது வாங்கி போன் இன்னமும் இயங்கி கொண்டிருப்பதோடு நடுவே ஆப்கானிஸ்தான், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளில் போர் சூழலை தாக்குப்பிடித்ததோடு, ஒரு முறை வாஷிங்மிஷினிலும் துணிகளோடு சுற்றுவிட்டு வந்திருப்பதாக மிட்சல் பெருமையோடு பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இணைய வசதி கொண்ட புதிய போனை மகன் வாங்கித்தந்திருந்தாலும் தனக்கு இந்த போனே போதும் என்கிறார் மிட்சல். நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்கு திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, செல்போன் உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய போன்களே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால் தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய போனாக இருக்கிறதோ!

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. ( அறிமுக செய்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளது)

_82806296_snakerewind_graphic

ஸ்மார்ட்போனில் மறுஅவதாரம் எடுக்கிறது ஸ்னேக் கேம்

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்டும். அந்த காலத்தில் செல்போனின் சின்னத்திரையில் ஆடிய ஸ்னேக் கேம் நினைவில் இருக்கிறதா?

நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில் செல்பேசி பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்த ஸ்னேக் கேம் இப்போது ஸ்மார்ட் போன்களுக்கு மறு அவதாரம் எடுக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய வகையில் இந்த விளையாட்டு அடுத்த வாரம் மறு அறிமுகம் ஆகிறது.
செல்போனில் கிராபிக்ஸ் வித்தைகள் எல்லாம் சாத்தியம் ஆகாத காலகட்டத்தில் 1997ல் இந்த ஸ்னேக் கேம் அறிமுகமானது. செல்பேசி முன்னோடி நிறுவனமான நோக்கியா தனது 6110 போனில் இந்த விளையாட்டை இடம்பெறச்செய்தது.

இந்த பாம்பு விளையாட்டு மிக எளிமையானது. ஆட்டத்தை துவக்கியதும் வளைந்து நெளியும் பாம்பை இரை விழுங்க வைத்து வளர வைக்க வேண்டும். இரை அங்கும் இங்கும் தோன்றுவதற்கு ஏற்ப பாம்பை வளைத்து முன்னேறச்செய்ய வேண்டும். தப்பித்தவறி பக்கவாட்டில் அல்லது மேலும் கீழும் மோதினால் பாம்பு குளோஸ் ஆகிவிடும்.

_82806312_snake_rewindஆரம்ப கால செல்போன்களில் இந்த விளையாட்டு தான் பிரபலமாக இருந்தது. முதல் மொபைல் கேம் என்றும் சொல்லப்படுகிறது. நோக்கியாவின் கோடிக்கனக்கான போன்களில் இந்த விளையாட்டு இடம்பெற்றிருந்தது.
டனேலி அர்மாண்டோ எனும் கேம் வடிவமைப்பாளர் இந்த விளையாட்டை உருவாக்கினார். மனிதர் 2011 வரை நோக்கியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஆனால் ஸ்மார்ட்போன் வருகைக்கு பிறகு நோக்கியா செல்வாகை இழ்ந்தக்து போல ஆங்ரி பேர்ட் யுகத்தில் பாம்பு விளையாட்டும் மறக்கப்பட்டுவிட்டது.
இப்போது வடிவமைப்பாளர் டனேலி ஸ்மார்ட்போன்களில் விளையாடக்கூடிய வகையில் இந்த பாம்பு விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்.

ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ப கிராபிக்ஸ் மற்றும் ஒலி அமைப்புகளுடன் இந்த விளையாட்டு அமைந்துள்ளதாம். பத்து கட்டங்களில் விளையாடக்கூடிய அளவில் இது இருக்கிறதாம். சிறப்பு பழங்கள் மற்றும் புள்ளிகளை பரிசாக பெறலாம். முக்கியமாக சுவரில் மோதினால் பாம்பு உயிரை விடாது என்கிறார். ருமிலுஸ் டிசைன் எனும் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னேக் ரிவைண்ட் எனும் பெயரில் இந்த விளையாட்டை அறிமுகம் செய்கிறார்.
அடுத்த வாரம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் அறிமுகமாகிறது. விண்டோஸ் போனிலும் தான்.
பார்க்கலாம் பாம்பு ஸ்மார்ட்போனில் எப்படி படமெடுக்கிறது என்று?

——-

விகடட்.காமில் எழுதியது

ஸ்மார்ட்போன் உலகில் …. !

பேட்டரியை காக்க ஆறு வழிகள்!

செல்போனோ ,ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜில் இருப்பது முக்கியமானது .ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம் ( அவஸ்த்தை) எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படதான் செய்கிறது. அதிலும் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அனுபவமும் அவஸ்த்தையும் அடிக்கடி ஏற்படலாம். பேட்டரியின் ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பேட்டரியின் ஆயுலையும் , அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம். இதற்கான ஆறு எளிய வழிகளை கிஸ்மோடோ தொழில்நுட்ப தளம் அடையாளம் காட்டியுள்ளது. அவை;
1. வெப்பநிலை உங்கள் பேட்டரியை பாதிக்கலாம். கூடுமானவரை போனை அல்லது எந்த சாதனத்தையும் சூரிய ஒளியில் நேரடியாக படும் படி வைப்பதை தவிர்க்கவும். அதிக குளிருக்கும் இது பொருந்தும்.
2. பேட்டரியை எந்த அளவி சார்ஜ் செய்யலாம். பொதுவாக முழுவதும் சார்ஜ் செய்வது நல்லது எனும் கருத்து இருக்கிறது. ஆனால் உண்மையில் முழு சார்ஜ் செய்யலாமல் பகுதி அளவு சார்ஜ் செய்வது ஏற்றது என வல்லுனர்கள் சொல்கின்றனர். பகுதி அளவு என்றால்? அதற்கு ஒரு பார்முலா சொல்கின்றனர். 40-80 சதவீதம் வரை சார்ஜில் இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது, சார்ஜ் 40 சதவீதம் வந்ததும், மீண்டும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். ஆனால் வேலை அதிகம் அல்லது வெளியூர் செல்வதாக இருந்தால் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்வதே சரியாக இருக்கும்.
3. சார்ஜிங்கில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷ்யம், முழுவதும் சார்ஜான பிறகு பிளக் செய்யப்பட்ட நிலையிலேயே விடப்படுவதி தவிர்க்கவும். அதிகமாக சார்ஜ் ஆவதும் பேட்டரியை பாதிக்கும்.
4. அதே போல அதிவிரைவு சார்ஜர் மற்றும் போலி சார்ஜர்களை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
5. போனை பயன்படுத்தும் போது மட்டும் அல்ல ஸ்விட்ச் ஆப் செய்யும் போது சார்ஜை கவனிக்க வேண்டும். ஸ்விட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டால் 50 சதவீதம் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லாம் சுலபமான வழிகளாக தான் இருக்கிறது அல்லவா? குறித்து வைத்துக்கொள்ளுங்கள் .

ஆண்ட்ராய்டில் நோக்கியா ஹியர்

நோக்கியாவின் செல்போன் பிரிவை கையகப்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா ஸ்மார்ட்போன்களை நோக்கியா பெயர் இல்லாமல் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது. நோக்கியா லூமியாவில் இருந்து மைக்ரோசாப்ட் லூமியாவுக்கான மாற்றம் துவங்கியிருக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சாதாரண செல்போன்களில் நோக்கியா பெயரை தொடர்ந்து பயன்படுத்த உள்ளது. சமீபத்தில் நோக்கியா 130 புதிய போன் அறிமுகமானது . இரட்டை சிம் கார்டு வசதி கொண்ட இந்த போனின் விலை, ரூ. 1,649. வண்ன டிஸ்பிலே கொண்ட இந்த போன் தன் 32 ஜிபி மெமரி கார்டில் 6,000 பாடல்களை சேமித்து வைக்கும் வசதி கொண்டதாம். 13 மணிநேர டாக்டைம் அல்லது 46 மணிநேர பாடல் வசதி கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் போனை வாங்க விரும்புகிறவர்கள் அல்லது மாற்று போன் தேவை என நினைப்பவர்கள் இதன் இலக்காக கொள்ளப்படுகிறது.
இதனிடையே நோக்கியா அதன் வரைட சேவை வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரிவு படுத்தியுள்ளது. நோக்கியா நிறுவனம் செல்போன் பிரிவில் இருந்து வெளியேற்றிவிட்டாலும் நோக்கியா ஹியர் எனும் வரைபட சேவையை உருவாக்கி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரைபட வசதி சாம்சங்கின் கேலகஸி சாதங்கள் மற்றும் சான்சங் கியர் ஸ்மார்ட்வாட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் சாதங்களிலும் ( ஜெல்லிபீன் மற்றும் அதற்கும் மேலான வர்ஷென்கள்) இவற்றை பயன்படுத்தலாம் என நோக்கிய அறிவித்துள்ளது. ஆனால் கூகிள்பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்ய முடியாது, நோக்கிய இணையதளத்தில் இருந்து பெறலாம். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால் இன்னும் பீட்டா வடிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————

ப்ளுடூத் ஸ்விட்ச்

ஸ்மார்ட்போன் மட்டுமா? ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஹோம் என்றேல்லாம் பேசப்படுகிறது. எல்லாமே ஸ்மார்ட்டாகி வரும் நிலையில் வீட்டில் பயன்படுத்தும் மின்விளக்குகளை இயக்கும் ஸ்விட்ச்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா? அது தான் ஆவி-ஆன் (Avi-on ) எனும் நிறுவனம் புளுடூத்தால் வயல்லெஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்விட்சை உருவாக்கி உள்ளது.
இந்த ஸ்மார்ட் ஸ்விட்சில் என்ன விஷேசம் தெரியுமா? பிளக் பாயிண்ட் பற்றி கவலைபடாமல் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதை பொருத்திக்கொள்ளலாம். முக்கியமாக அணி அடிக்கும் அவசியம் இல்லை. அப்படியே ஒட்டி விடலாம். அதன் பிறகு இதை வயர்லெஸ் மூலம் அடாப்டர் வழியே விளக்குடன் இணைக்கலாம். அல்லது ப்ளுடூத் பல்ப வாங்கினால் அதனுடன் இணைத்துவிடலாம். இதன் இயக்கத்தை ஸ்மார்ட்போன் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஒட்டுமொத்த வீட்டையும் குறைந்த செலவில் ஸ்மார்ட் லைட்டிங் வசதி கொள்ளச்செய்யலாம் என்று ஏவி ஆன் தெரிவிக்கிறது.
ஆனால் இன்னமும் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. கிரவுட்சோர்சிங் முறையில் வாங்க ஒப்புக்கொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக இருந்தால் சென்று பார்க்கவும்: http://www.avi-on.com/avi-on

—————

ரெயில் சேவைக்கான செயலி

இந்திய ரெயில்வே செயலி மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ரெயில்களின் பயண நேரம் ,வருகை ,புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான செயலியை ( ஆப்) அறிமுகம் செய்துள்ளது. என்.டி.இ.எஸ் – நேஷனல் டிரைன் என்குவைரி சிஸ்டம் (NTES ) எனும் இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படக்கூடியது. ரெயில்வேயின் ஐடி பிரிவான சி.ஆர்.ஐ.எஸ் (CRIS) மூலம் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் ரெயில்கள் பற்றிய தகவல்களை அறிவதுடன் , ஸ்பாட் யுவர் டிரைன் எனும் அம்சம் மூலம் குறிப்பிட்ட ரெயிலின் தற்போதைய நிலையை எளிதாக அறியலாம். ரெயில்களின் அட்டவணை, நிலையங்களுக்கு இடையிலான ரெயில்கள், ரத்தான மற்றும் மாற்றிவிடப்பட்ட ரெயில்கள் பற்றிய விவரங்களை அறியலாம். ஏற்கனவே வின்டோசுகு அறிமுகமான நிலையில் இப்போது ஆண்ட்ராய்டில் வந்துள்ளது. ரெயில்கள் இயக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியக்கூடிய வசதியாக இது இருக்கிறது. www.trainenquiry.com), இணையதளம் மூலமும் அறியலாம். ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes&hl=en.

————–

நோபோன் வேணுமா?

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் அறிமுகமான நோபோன் பரவலாக கவனத்தை ஈர்ததது. பேசமுடியாது, செய்தி அனுப்ப முடியாது ,டிஸ்பிலேவும் கிடையாது, பேட்டரியும் இல்லை என வர்ணிக்கப்பட்ட இந்த நோபோன் உண்மையில் போன் இல்லை. நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன் மீதான சார்பு மற்றும் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கம். எப்போதும் போனின் திரைய பார்த்துக்கொண்டிருக்காமல் நண்பர்களை கொஞ்சம் கவனியுங்கள் என்னும் கருத்தை அழகாக முன்வைத்த இந்த நோபோனுக்கான இணையதளத்தை நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நண்பர்கள் உருவாக்கினர். நையாண்டியாக உதயமான ஐடியா என்றாலும் பலரும் சீரியசாகவே நோபோன் எப்போது வரும் என கேட்கத்துவங்கியதால் , இப்போது இதை உண்மையான தயாரிப்பாக அறிமுகம் செய்யும் உத்தேசத்துடன் கிக்ஸ்டார்ட்டர் இணையதளத்தில் அதற்கான இணைய பக்கத்தை அமைத்துள்ளனர்.
இத்தகைய பேச முடியாத போன் மிகவும் அவசியம் தான் என்று சமீக ஊடகங்களில் சிலர் உற்சாகமாகவும் கூறியுள்ளனர்.
இந்த நோபோனில் இப்போதைய கிரேசான செல்பி அதாவது சுயபடம் எடுக்கும் வசதியும் இருக்ககிறது. இதற்காக கருப்பு வண்ண போனை திருப்பினால் பின்பக்கதில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கிறது. அது தான் காமிரா?
எப்படி இருக்கிறது!

கிக்ஸ்டார்ட்டரில் பார்க்க: https://www.kickstarter.com/projects/nophone-usa/the-new-and-unimproved-nophone
———
ஸ்மார்ட்போன் இல்லாமல் நானில்லை

இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும் போது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் இந்தியர்களில் 95 சதவீதம் பேர் அதை மிகவும் முக்கியமாக கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பயண இணையதளமான எக்ஸ்பீடியா சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியர்கள் ஸ்மார்ட்போனை தங்கள் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுவதாக தெரிவிக்கிறது. 25 நாடுகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 8,856 ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலக அளவில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளிகள் அதிகம் இருப்பதகாவும் உலகிலேயே இந்தியர்கள் தான் விடுமுறை காலத்திலும் ஸ்மார்ட்போனை எடுத்துசெல்பவர்களில் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
ஆச்சயப்படும் வகையில் கூகிள் கிளாஸ் பயனாளிகளும் இந்தியாவில் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண் நிறுவனம் நடத்திய ஆய்வு என்பதால் , இந்தியர்கள் ஸ்மார்ட்போன் மூலம் பயணங்களை திட்டமிடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

————–

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

————–

ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

01-baiduசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் பெய்டு சினாவில் தனது வருடாந்திர கண்காட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்களை ( சீனர்களின் ஸ்பூன்) அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாப்ஸ்டிக் உணவின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவை கண்டறிந்து சொலலக்கூடியது என பெய்டு தெரிவித்துள்ளது. எண்ணெயின் மணத்தை வைத்து , உணவு கெட்டுப்போயிருக்கிறதா என்பதையும் இந்த சாப்ஸ்டிக் உணர்த்திவிடும். இந்த தகவலை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக தெரிவிக்கும். சோடியம் அனலைசர் கொண்ட இந்த சாதனத்தை வை-பீ அல்லது ப்ளுடூத் மூலம் கம்ப்யூட்டருடனும் இணைக்கலாம்.
சீனர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சாப்ஸ்டிக்சை நவீன தொழில்நுட்பத்தின் இணைத்திருப்பதாக பெய்டு தெரிவித்துள்ளது. இந்த சாப்ஸ்டிக் சாப்பிட உதவுவதோடு சாப்பாடு கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்றும் சொல்லிவிடும் திறன் படைத்த்து என்கிறது பெய்டு.
இது தொடர்பான வீடியோவை பார்க்க :http://www.iqiyi.com/w_19rso054bp.html#vfrm=2-3-0-1
அதே போல கூகிள் கிளாசுக்கு போட்டியாக , ’பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.
எனினும் இந்த இரண்டும் எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு இவை மாதிரி தயாரிப்பு அளவிலேயே இருக்கின்றன.

———–

செல்பீ போனும்,செல்பீ பிரெஷும்

01brushஎதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன்களை பெர்லின் தொழிநுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் செல்போன் பிரிவை கைகப்படுத்திக்கொண்டுள்ள மைக்ரோசாபட்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரகங்களில் லூமியா 735 சுயபடம் என்று சொல்லப்படும் செல்பீகளுக்கு ஏற்றது என வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கில் தன்மை கொண்டுள்ளது. இந்த போனில் நவீன் பிளாஷ் உத்தியும் இருப்பதை பிபிசி இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது,பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்த்தாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் இரண்டும் தானாக இணைக்கப்பட்டு சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாக்கப்படும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதை சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இதே அப்டேட் செய்யப்படலாம்.
லூமியா 830 போன் 3 ஜி மற்றும் 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் இது அறிமுகமாகலாம் என்றும் விலை 26,000 வாக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
செல்பீ மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்பீ பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. அதென்ன செல்பீ பிரெஷ்? சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா? அது தான் , செல்பீ பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படிசே செல்பீயும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது.எப்படி?
செல்பி பிரஷ் இணையதளம்: http://www.selfiebrush.com/


சாம்சங் முந்தியது!

பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் மற்றும் மோட்டரோலா,சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்த்து. வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாக விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக் எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus ) தனது ஜென் வாட்ச் சாதனத்தை இங்கு அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.
சாம்சங், கலெக்ஸி நோட்4 ,காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதன்ங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்க் கூடிய புதுமையான டிஸ்பிலே கொண்டிருக்கிறது. கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ரகத்தை சேர்ந்தது. சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவ்சல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவங்கள் இந்த பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளது.


ஸ்மார்ட் பேக் -ஸ்மார்ட் சார்ஜர்

ஸ்மார்ட்போன்களிலும் டேப்லெட்களிலும் புதுப்புது மாதிரிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பலரும் லேப்டாப் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப சாதன்ங்களை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்க தொழில்நுட்ப சாதனங்களுக்கான சார்ஜர்கள் ஈடு கொடுக்கவிட்டால் எப்படி? அது தான் , அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக் , தொழில்நுட்ப சாதன்ங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபில் மற்றும் கனெக்டர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்க கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதன்ங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த செயலியே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கை தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/
இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதன்ங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்ட் புதிது
01logitech-bluetooth-multi-device-keyboard-k480
லாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்த்து. ஸ்மார்ட்போன்களுக்கும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதன்ங்களில் இயங்க கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480 ) தன்மை கொண்டது. ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டை கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என மூன்று சாதங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது. கீபோர்ட் கொண்டு ஸ்மார்ட் போனில் டைப் செய்வது தேவையானது தான் இல்லையா? கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch?v=MceLc7-w1lQ

அந்த நான்கு செயலிகள்

சில மாதங்களுக்கு முன்னர் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆயவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக மாதாந்தோறும் 22 முதல் 28 செயலிகளை (ஆப்ஸ்) பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இப்போது காம்ஸ்கோர் நிறுவன தகவலின் படி வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista ) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 75 சதவீத நேரம் தங்களுடைய நான்கு அபிமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துதாக தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதான். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு செயலிகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!.

———

தமிழ் இந்துவுக்காக எழுதியது; நன்றி தமிழ் இந்து.

தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே போய்க்கொண்டிருக்கிறது என வியக்க வைத்த , கூடவே திகைக்கவும் வைத்த இந்த போக்குகளை திரும்பி பார்க்கலாம்.
முதலில் மெய்நிகர் நாணயம். ரூபாய் தெரியும், டாலர் தெரியும் . யூரோ தெரியும் , இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணைய பணமான பிட்காயின் தான் இப்படி பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது என பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நானயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்த புதுயுக பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லா பரிமாற்றத்திற்காக தொழில்நுட்ப பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களை தொட்ட போது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தை தொட்ட பிறகு சரிவை சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது. 
பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம் அணி கணிணி: உபயம் கூகிள் கண்ணாடி. வியரபில் கம்ப்யூட்டிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அணி கணிணி தொடர்பாக ஓசைப்படாமல் பல ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணிணியின் ஆற்றலை உள்ளீடு செய்வதை தான் இப்படி சொல்கின்றனர். வெகுஜன கவனத்தை ஈர்க்க முடியாமல் ஆய்வு உலகிலேயே முடங்கி கிடந்த இந்த தொழில்நுட்பத்துக்கு கூகிள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம், காமிராவாக காட்சிகளை கிளிக் செய்யலாம், ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்த கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர். கடந்த ஆண்டு கருத்தாக்கமாக அறிமுகம் செய்த இந்த கண்ணாடியை இந்த ஆண்டு கூகிள் முன்னோட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கி அதன் பயன்பாடு பற்றிய பரபரப்பை உண்டாக்கியது.
கூகிள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்க பெண்மணிக்கு போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்த தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணிணி பரவலானால் அதில் கூகிள் கண்ணாடிக்கு பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.
கூகிள் கண்ணாடி மாயம் என்றால் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசி உலகில் கூகிளின் ஆதிக்கம் தான். அதாவது திறன்பேசிகளுக்கான அதன் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கிட்டத்தட்ட 80 சதவீத சந்தையை கைப்பற்றியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை ஆப்பிலின் ஐபோன் பிரபலாமாக்கியிருந்தால் என்ன இன்று இந்த சந்தையில் கோலோச்சுவது ஆண்ட்ராய்டு தான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலை பார்க்கமால் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் எ