முட்டாள் போன் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

Nokia_225_4G_mobileகொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன் முதலில் முட்டாள் போன் என்றால் எது என தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் டம்ப் போன் (Dumbphone ) என சொல்லப்படும் பழைய கால போன் தான் முட்டாள் போன் என இங்கு குறிப்பிடப்படுகிறது.

டம்ப் போனை தமிழாக்கம் செய்யும் போது, பேசா போன் என சொல்லலாம். கூகுள் மொழியாக்கம் செய்யும் வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எனினும் பேசுவதற்கான சாதனத்தை பேசா போன் என எப்படி சொல்வது? எனவே தான், தற்போதைய திறன் பேசிகளுக்கு எதிரான தன்மை கொண்டிருப்பதால் பழைய கால போன்களை டம்ப் போன் என்கின்றனர். அதாவது, திறன் பேசியில் சாத்தியமாக கூடிய எண்ணற்ற வசதிகளும், அம்சங்களும் இல்லாமல் பேசுவது பற்று பேசுவது சார்ந்த சில கூடுதல் வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் பழைய கால போன்கள் அந்த தன்மைக்காக டம்ப் போன் என குறிப்பிடப்படுகிறது.

ஸ்மார்ட் போன் எல்லாம் வல்லவை என்றாலும், கவனச்சிதறலுக்கு வழி வகுப்பவை என்பதும், நம்மை நவீன சின்னத்திரைக்கு அடிமையாக்க கூடியவை என்பதாலும், அதன் பயன்பாட்டை குறைத்துக்கொள்வதே நல்லது என கருதப்படுகிறது. ஸ்மார்ட் போன் திரையில் ஓயாமல் அறிவிக்கைகளை பார்த்துக்கொண்டிருப்பதும், பக்கத்தில் இருப்பவருடன் கூட பேசத்தோன்றாமல் அதன் திரையில் லயித்திருப்பதும் நம் காலத்து கலாச்சார சீரழிவாக (!) கருதப்படுகிறது.

ஸ்மார்ட் போன் தொடர்பான பிரச்சனையை உணர்ந்தவர்கள், பலவிதங்களில் பழைய கால போனே சிறந்தது என நினைக்கின்றனர். புத்தாயிரம் தலைமுறை பழைய கால போன்களை காலாவதியான போன் என நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாக, அடிப்படை அம்சங்கள் கொண்ட பழைய போன் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

பழைய போனில் இருந்து முன்னேறி திறன்பேசிகள் வாங்க வேண்டும் என்பதே வெகுஜன எண்ணமாக இருந்தாலும், திறன்பேசிகளின் தீங்கை உணர்ந்து, அடிப்படை போனே போதுமானது என நினைப்பவர்கள் கருதுவதால் இவற்றை புத்திசாலிகளுக்கான போன் என்பது பொருத்தமாக இருக்கும்.

திறன்பேசிகளின் தொடர்புடைய எல்லையில்லா அம்சங்களுக்கு மாறாக, தேவையான அம்சங்கள் மட்டுமே கொண்டுள்ளதால், பழைய போனின் திறன்பேசி எதிர் தன்மையை குறிக்க இவற்றை முட்டாள் போன் எனலாம். போனோ அதை பயன்படுத்துபவரோ முட்டாள் அல்ல, மாறாக திறன்பேசியே உலகம் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தான் முட்டாள்கள் எனலாம்.

நிற்க, இந்த முட்டாள் போன்கள் தொடர்பான கருத்தாக்கம் இணையத்தில் வலுவான இயக்கமாக உருவாகி கொண்டிருக்கிறது. அது பற்றி அவ்வப்போது பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.