நான் ஏன் ’பிளாக்பெரி’ புகழ்பாடுகிறேன் என்றால்….

பிளாக்பெரி போனை பார்த்திருக்கிறேன், பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது இந்த பழைய போன் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதிகரித்திருக்கிறது. பிளாக்பெரி போன் செல்வாக்கு பெற்றிருந்த காலம் தொடர்பான குறிப்புகள் சிலவற்றை பதிவு செய்யவும் விரும்புகிறேன்.

பிளாக்பெரி மீதான இந்த ஈர்ப்பிற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும், இதழியலில் துறையில் இதன் பங்களிப்பு இதற்கான முக்கிய காரணமாகிறது.

பிளாக்பெரி அதன் பாதுகாப்பான தன்மைக்காக உலக தலைவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட போன் என்பதையும், போனில் இருந்தே இமெயில் அனுப்பலாம் என்பதற்காக வர்த்தக நிறுவன தலைவர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்ட போன் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இதே காரணங்களுக்காக இதழாளர்களாலும் பிளாக்பெரி அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, செல்போன் இதழியல் எனும் பிரிவின் தோற்றத்தில் பிளாக்பெரி போனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் செல்போன் இதழியல் உருவாகி வரும் துறையாக அரும்பத்துவங்கிய காலத்தில் பிளாக்பெரி போனே இத்துறைக்கான முக்கிய விதைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.

செல்போன் இதழியல் எனும் போது பெரும்பாலும் ஐபோனே பிரதானமாக குறிப்பிடப்படுகிறது என்றாலும், மொபைல் இதழியல் வரலாற்றில் நோக்கியாவின் ஆரம்ப கால ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு மறக்கப்பட்டு விடுகிறது. இதைவிட இன்னும் மோசமானது, செல்போன் இதழியல் உருவாக்கத்தில் பிளாக்பெரியின் பங்கு குறித்து அநேகமாக சிறு குறிப்பு கூட இல்லாமல் போவது தான்.

ஒருவிதத்தில் பார்க்கப்போனால், செய்தி சேகரிப்புக்கும், வெளியீட்டிற்கும் இதழாளர்களால் துவக்க காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட போன்களில் ஒன்றாக பிளாக்பெரியை குறிப்பிடலாம். செல்போன்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்த புத்தாயிரமாண்டு காலத்தில், களத்தில் இருந்து தகவல் தெரிவிப்பதற்கு ஏற்ற சாதனமாக செல்போன் கருதப்பட்டதை மீறி, செய்தி சேகரிக்கும் இடத்தில் இருந்தே செய்தியை எழுதி அனுப்பி வைப்பதற்கான வழியாக பிளாக்பெரி அமைந்தது.

களத்தில் இருந்து செய்திகளை தட்டச்சு செய்து அனுப்ப அல்லது பதிவேற்ற லேட்பாப் கம்ப்யூட்டர்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில், கையடக்க செல்பேசியில் இருந்து செய்தி அனுப்புவதை பிளாக்பெரி சாத்தியமாக்கியது. பிளாக்பெரியின் கீபோர்டும், இமெயில் அனுப்பி வைக்கும் ஆற்றலுமே இதற்கான காரணங்கள்.

இன்று, ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன் கையில் இருந்தால் புகைப்படம் கொண்ட செய்தி மட்டும் அல்ல, முழு அளவிலான வீடியோ வடிவ செய்தியையே உருவாக்கி விடலாம் தான். இந்த ஆற்றலே செல்பேசி இதழியலின் ஆதார அம்சங்களில் ஒன்றாக அமைகிறது.

ஆனால், செல்போன்கள் அதன் வளர்ச்சி பருவத்தில் இருந்த காலத்தில், கைப்பேசியில் இருந்து செய்தியை தட்டச்சு செய்து மெயிலில் அனுப்புவது எல்லாம் நினைத்து பார்க்க முடியாதது. இந்த பின்னணியில் இமெயில் ஆற்றல் கொண்ட பிளாக்பெரி போன், முக்கிய செய்திகளை உடனடியாக பதிவேற்ற விரும்பும் இதழாளர்களுக்கு பெரும் துணையாக இருந்திருக்கிறது.

அதற்கேற்ப பல முன்னணி இதழாளர்கள் அந்த புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் செய்தி வெளியீட்டில் பிளாக்பெரியை முக்கிய சாதனமாக பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் செல்போன் இதழியலில் பிளாக்பெரிய முன்னோடி சாதனங்களில் ஒன்றாக கருதலாம்.

பிளாக்பெரியில் விரிவாக ஒரு செய்தியை உடனடியாக அனுப்பி வைக்கலாம் என்பது மட்டும் அல்ல, களத்தில் ஒலிப்பதிவு செய்யவும் பயன்படுத்தலாம். இப்படி பிளாக்பெரி களத்தில் நிருபர் ஒருவரால் பயன்படுத்தப்பட்ட தருணத்தை கெய்டியர் நியூஸ் (kaieteurnewsonline.com) எனும் கரிபிய இணையதளம் பதிவு செய்திருக்கிறது.

2011 ம் ஆண்டு ஜூன் மாதம் 15 ம் தேதி வெளியான பிளாக்பெரி நிருபர் (THE BLACKBERRY REPORTER) எனும் தலைப்பிலான செய்தியில் இந்த தருணத்தையும் அதன் தாக்கத்தையும் அழகாக பதிவு செய்துள்ளது.

”இது ஆண்டின் சிறந்த புகைப்படமாக இருக்க வேண்டும்” என துவங்கும் அந்த செய்தி, கெய்டியர் நிருபர் நேர்காணலுக்காக, வழக்கமான டேப்ரெக்கார்டரை பயன்படுத்தாமல் பிளாக்பெரியை பயன்படுத்தியதை குறிப்பிட்டு, இந்த காரணத்தினாலயே இது ஆண்டின் குறிப்பிடத்தக்க படம் என உணர்த்துகிறது.

அந்த நிருபர் ஏதோ தவறாக பிளாக்பெரியை கையாளவில்லை, தன்னிடம் உள்ள விலை உயர்ந்த, பல்நோக்கு பயன்பாடு கொண்ட சாதனத்தை செய்தி சேகரிப்பிற்காக பயன்படுத்துகிறார் என அந்த செய்தி குறிப்பிடுகிறது.

செல்போன் வரலாற்றில் இது எத்தனை முக்கிய தருணம்.

இப்படி ஒரு நிகழ்வை தனது வாழ்க்கையில் முதலில் பார்ப்பதாக குறிப்பிடும் செய்தியை எழுதியவர் தொழில்நுட்பத்தின் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதன் அடையாளம் இது என்கிறார். தொடர்ந்து, பிளாக்பெரி இதழாளர்களுக்கு பயன்படக்கூடிய விதங்களை செய்தி விவரிக்கிறது.

பிளாக்பெரியால் புகைப்படம் எடுக்க முடியும், வீடியோ எடுக்க முடியும் என்பதையும் இந்த செய்தி குறிப்பிட்டு அதன் தாக்கம் பற்றி பேசுகிறது. இனி வருங்காலத்தில் பிளாக்பெரி துணை கொண்டே செய்தி புகைப்படம் எடுக்கலாம், வீடியோ செய்து அனுப்பலாம் என்றெல்லாம் அந்த செய்தி பேசுகிறது.

செல்போன் இதழியல் வரலாற்றில் துவக்கத்தை அடையாளம் கண்ட பதிவுகளில் ஒன்றாக இதை கருதாலம். செல்போன் இதழியல் வரலாற்றின் ஆரம்ப காலம் தொடர்பான விடுபட்ட துண்டு என்றும் கூட சொல்லலாம்.

கெய்டியர் ஆன்லைன் கரிபியத்தீவு நாடுகளில் ஒன்றாக கயானாவின் ஆன்லைன் ஊடகம் என அறிய முடிகிறது. இதன் பழைய பதிப்புகள் முறையாக பரிமாரிக்கப்பட்டு தேடும் வசதியும் இருப்பதால், செல்போன் இதழியலின் வரலாற்று பதிவான அந்த புகைப்படத்தையும் தேடி எடுக்க முடிந்தது.

பி.கு: செல்போன் இதழியல் அடிப்படைகளை விவரிக்கும் மொபைல் ஜர்னலிசம் நூலில், செல்போன் இதழியல் வரலாற்றை விரிவாகவே எழுதியிருக்கிறேன். நோக்கியாவின் முன்னோடி பங்களிப்பு இதில் இடம்பெற்றாலும் பிளாக்பெரியை தவறவிட்டிருக்கிறேன். அதை இப்போது சரி செய்திருப்பதாக கருதுகிறேன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.