Tag Archives: reading

புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

tumblr_onp12eUadT1qaouh8o1_500புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது.

டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள்.  ஆம், பொது போக்குவரத்து மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் புத்தக புழுக்கள் கையில் வைத்திருக்கும் புத்தகங்களை கண்டறிந்து அவற்றின் முகப்பு படம் இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது.

புத்தக அட்டைப்படம் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட இடம் மட்டுமே இடம்பெறுகிறது. புத்தகம் தொடர்பான விமர்சன குறிப்புகள் எல்லாம் கிடையாது.

ஆக, ஒருவிதத்தில் வாசகர்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். இவை இயல்பான பரிந்துரையாகவும் அமையும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் விரிவாகி இருக்கிறது. இந்த வரிசையில் தில்லியும், மும்பையும், நம்ம சென்னையும் இடம்பெறும் வாய்ப்புள்ளதா என தெரியவில்லை.

இணை முகவரி: http://coverspy.tumblr.com/

 

செயலி புதிது; ஒலிகளை கேட்க உதவும் செயலி

இசை கேட்பது மன அமைதிக்கு உதவுவது போலவே, விரும்பமான ஒலிகளை பின்னணில் கேட்டுக்கொண்டிருப்பதும் மனநிலை மேம்பட உதவும். மழை பெய்து கொண்டிருக்கும் ஓசை, காற்று வீசும் ஒலி ஆகியவற்றை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தால் மன ஒரு நிலைப்படும். பணியில் கவனச்சிதறலை தவிர்ப்பதில் துவங்கி, இரவு தூக்கம் வரவைத்துக்கொள்வது வரை பலவற்றுக்கு இப்படி பின்னணி ஒலிகளை பயன்படுத்தலாம்.

இத்தகைய ஒலிகளை கேட்டு ரசிக்க வழி செய்யும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் ஏ சாப்ட் மர்மர் செயிலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மழை, இடியோசை, காபி ஷாப் சத்தம், பறவைகள் கீதம் என பலவித ஒலிகளை கேட்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். ஒலிகளை கலந்து கேட்கும் வசதியும் இருக்கிறது. ஒலிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒலிகளை சமூக ஊடகம் மூலம் நட்பு வட்டத்தில் பகிரவும் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://asoftmurmur.com/

 

——-

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!


வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய புத்தகத்தை வாங்கி பார்த்தால் மகிழ்வேன். புத்தகம் இணையம் மூலம் கிடைக்கும் இடங்களை பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.

1inaya

( ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கம் அமைக்கும் பிரம்மாண்ட் நோக்கம் கொண்ட இணைய நூலகம் இந்த இணையதளம்).

புத்தகங்களுக்கான விக்கிபீடியாவாக ஒபன் லைப்ரரி இணைய நூலகம் உருவாகி கொண்டிருக்கிறது. ஓவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் தொடர்பான தகவல்களையும் இணையத்தில் தர வேண்டும் என்பது தான் இந்த நூலகத்தின் இலக்கு. மிகப்பெரிய இலக்கு தான், ஆனால் முடியாதது இல்லை என்று இதை இந்த தளம் குறிப்பிடுகிறது. யோசித்து பாருங்கள் இது எத்தனை பெரிய இலக்கு என்று மலைப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றிய தகவல்களை திரட்டுவது என்றால் எப்படி ? எத்தனை ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். உலகில் உள்ள புத்தகங்கள் என்றால் , ஒரு மொழியில் மட்டும் அல்ல; எல்லா மொழிகளிலும் தான்.: அதே போல புத்தகங்கள் மட்டும் அல்ல: கையேடுகள் ,ஆய்வுகள் என்று அச்சில் வந்த எல்லாமும் தான்.

உண்மையிலேயே மகத்தான் இலக்கு தான். இணையவாசிகள் பங்களிபோடு இந்த இலக்கை நோக்கி ஓபன் லைப்ரரி முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆம் , எப்படி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இணையவாசிகள் தகவல்களை இடம்பெறச்செய்து திருத்தங்களை மேற்கொள்கின்றனரோ அதே போல இந்த நூலகத்தில் இணையவாசிகள் புத்தகங்கள் பற்றிய தகவல்களை சேர்க்கலாம். திருத்தலாம். இது வரை 2 கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஆர்வம் உள்ள இணையவாசிகள் இந்த தளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து புதிய புத்தகத்தை சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள புத்தக தகவல்களை மேம்படுத்தலாம்.
இதில் உள்ள புத்தகங்களை எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வகைகளுக்கு ஏற்ப பார்க்கலாம்.

புத்தக தகவல்களை பார்ப்பதோடு அவற்றை இபுக் வடிவில் படிக்கவும் செய்யலாம். நூலகமாக இருந்து கொண்டு புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றால் எப்படி? நூலகம் போலவே இபுக்களை இங்கு வாடகைக்கு எடுத்து படித்ததும் திரும்பி கொடுத்து விட வேண்டும்.

தமிழ் மொழியிலும் எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் துவங்கி, அண்ணா ,ஜெயகாந்தன் என்று முத்திரை பதித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை பார்க்கலாம் ,படிக்கலாம். இது தவிர பல்வேறு வகையான கையேடுகளும் கூட இடம்பெற்றுள்ளன.

இணையதளங்களின் வடிவத்தை பாதுகாத்து வரும் இண்டெர்நெட் ஆர்கேவ் அமைப்பின் சார்பில் இந்த நூலகம் ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அட்டைபடங்களுடன் பட்டியலிடப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலை பார்த்தாலே வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் உற்சாகம் கொள்வார்கள்.

இணையதள முகவரி: https://openlibrary.org/

————-
இணையத்தால் இணைவோம் புத்தகம் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html

2. http://www.dialforbooks.in/reviews/innaiyaththal-innaivom.html

3. http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.


நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் தி ஆர்டிகல் செக்கர் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த நீளமான கட்டுரையையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த கட்டுரை எந்த அளவுக்கு வாசிப்புக்கு உகந்தது என்று இந்த தளம் சீர் தூக்கி பார்த்து சொல்கிறது.அந்த கட்டுரையின் வாசிப்பு தன்மையை சதவீத கணக்கில் மதிப்பீட்டு சொல்கிறது.

கட்டுரையை முழுவதும் அலசி ஆராய்ந்து அது சுவாரஸ்யமானதா,வாசிக்க தக்கதா,இலக்கண ரீதியிலானதா என்பது உடப்ட ஐந்து அம்சங்களின் அடிப்படையில் அந்த கட்டுரையை மதிப்பிட்டு அதன் தரத்தை முன் வைக்கிறது.

ஒவ்வொரு அம்சத்தின் உட்கூறுகள் பற்றியும் விரிவான குறிப்புகளும் தரப்படுகிறது.

இணையம் மோசமான கட்டுரைகளால் நிறைந்திருப்பதால் நல்ல கட்டுரையை கண்டறிய இது போன்ற சீர் தூக்கி பார்க்கும் வழி அவசியம் என்று இந்த தளம் சொல்கிறது.

முகப்பு பக்கத்தில் பரிசோத‌னைக்கு உடப்ப‌டுத்த‌ப்பட்ட கட்டுரைகள் அவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.இணையத்தில் செய்திகளையும் கட்டுரைகளையும் விதவிதமாக பட்டியலிடும் தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.ஆனால் கட்டுரைகளின் வாசிப்பு தன்மையின் அடிப்படையில் இந்த பட்டியல் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.

இண்டெர்நெட்டில் மோசமாக எழுதப்பட்ட கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன என்பது உண்மை தான்.கூகுல் விளம்பரத்தின் மூலம் காசு பார்ப்பதற்காக என்றே அவசர கதியில் எழுதப்பட்ட‌ கட்டுரைகள் வேறு இருக்கின்றன.என‌வே நல்ல கட்டுரையாக தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவசியம் தான்.

அந்த வகையில் ஒரு கட்டுரை நல்ல கட்டுரை தானா என்று சரி பார்த்து சொல்லக்கூடிய இணைய சேவை சுவாரஸ்யமானது தான்.

ஆனால் சாப்ட்வேர் அலசல் மூலம் ஒரு கட்டுரையின் வாசிப்பு அனுபவத்தை மதிப்பிட்டுவிட முடியுமா?மனித மனதின் ரசனை நுட்பங்களை சாப்ட்வேர் அறியுமா என்ன? என்று கேட்கலாம்

அது மட்டும் அல்லாமல் சாப்ட்வேர் ஒரு கட்டுரையை அலசி ஆராய்ந்து அது 74 சதவீதம் வாசிப்பு தகுதி கொண்டது என்று சொல்லும் போது அதனை எப்படி புரிந்து கொள்வது?

இப்படி பல கேள்விகள் இருந்தாலும் கூட கட்டுரைகளின் வாசிப்பு தன்மையை சாப்ட்வேர் கொண்டு அலசி பார்ப்பது புதுமையான முயற்சி தான்.

சாப்ட்வேர் மூலம் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த உதவும் சேவைகள் வர்சியைல் ஒன்றாக இதனை கருதலாம்.ஏற்கனவே சாப்ட்வேர் மூலம் நீளமான கட்டுரைகளை முழுவதும் படிக்காமல் அத சாரம்சத்தை ஒரு சில வரிகளில் தெரிந்து கொள்ள உதவும் சம்மரைசர் தளமும் இருக்கிறது.அந்த வரிசையில் தான் இந்த தளம் சேர்ந்திருக்கிறது.

ஆய்வு மாணவர்கள்,எப்போதாவது படிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த சேவை உதவக்கூடும்.மற்றபடி வாசிப்பு தேர்ச்சி கொண்டவர்கள் ஒரு கட்டுரையை படிக்க துவங்கும் போதே அதனை தொடர்ந்து படிக்கலாமா அல்லது தூக்கி போட்டு விடலாமா என்று சுலபமாக முடிவுக்கு வந்து விடுவார்கள்.

இணையள முகவரி;http://the-article-checker.com/

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ .

இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம்.

வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்!.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்!

ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் இருந்து தின‌ந்தோறும் தகவல்களும் செய்திகளும்,யூடியூப் வீடியோக்களும் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு வலைப்பின்னல் வேவை யாருக்கு தேவை என்று தோன்றலாம்,ஆனால் எல்லாவற்றுக்கும் வலைப்பின்னல் சேவை இருந்தாலும் வாசிப்புக்கு என்று இல்லையே அந்த குறையை போக்குவது தான் எங்கள் பணி என்று விளக்கமும் தருகிறது இந்த தளம்.

அதாவது நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் வாசிப்பு சார்ந்த வலைப்பின்னலை இந்த தளம் உருவாக்கி தருகிற‌து.இந்த பகிர்வை மேற்கோள் சார்ந்ததாக உருவாக்கி தந்துள்ளது.

இணையத்திலோ நாளிதழ்களிலோ நீண்ட கட்டுரையை படிக்கும் ஆர்வமும் பொருமையும் எத்தனை பேரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் ஒரு நல்ல கட்டுரையை வாசிப்பு ஆர்வம் உள்ள எவருமே படிக்க தயாராகவே இருப்பார்கள்.

அத்தகைய நல்ல கட்டுரைகளை நண்பர்கள் அடையாளம் காட்டினால் படித்து மகிழ்வோம் அல்லவா?அந்த வாய்ப்பை தான் பரந்து விரிந்த அளவில் இந்த தள‌ம் ஏற்படுத்தி தருகிறது.

ஒரு சிறந்த கட்டுரையை படித்து ரசித்த பின் மற்றவர்களும் அதனை படித்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அந்த கட்டுரையை இந்த தளத்தில் சமர்பித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அதுவும் எப்படி? அந்த கட்டுரையின் ஹைலைட் என்று நீங்கள் கருதும் பகுதியை தனியே அடையாளம் காட்டி பகிர்ந்து கொள்ளலாம்.அதாவது அந்த பகுதியை மேற்கோள் காட்டி பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில்நுட்பம்,அரசியல்,பொது என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளலாம்.சக உறுப்பினர்கள் இப்படி பரிந்துரைக்கப்படும் மேற்கோளால் கவர்ப்பட்டால் அந்த கட்டுரையின் மூல வடிவத்தை படித்து பார்த்து விட்டு அதனை தங்கள் நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

கட்டுரையை மேற்கொள் காட்டுவது மிகவும் எளிது.இதற்காக என்றே புக்மார்க்லெட் வசதி உள்ளது.பரிந்துரைக்கும் கட்டுரையோடு உங்கள் கருத்தையும் தெரிவிக்கலாம்.படிப்பவர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.இது ஒரு உரையாடல் போலவே தொடரலாம்.

ஒருவர் மிகச்சிறந்த வாசகர் என்ரால் தான் படிக்கும் சிறந்த கட்டுரையை அதன் சாரம்சத்தை விளக்கும் மேற்கொளோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல நல்ல கட்டுரைகளை படிக்க விரும்புகிறவ‌ர்கள் இதில் உறுப்பினரானால் சக உறுப்பினர்கள் மூலம் படிக்ககூடிய நல்ல கட்டுரைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

மற்ற வலைப்பின்னல் தளங்கள் போலவே குறிப்பிட்ட உறுப்பினரை பின் தொடரவும் செய்யலாம் .இதன் மூலம் அவர் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைகளை யும் பின் தொடர‌லாம்.

அடிப்படையில் பார்த்தால் ஆங்கிலத்தில் டி,ரீடிட் தமிழில் இன்ட்லி உள்ளிட்ட திரட்டகளை போன்ற சேவை தான்.ஆனால் திரட்டிகள் மிகவும் பொதுவானவை.இந்த தளம் வாசிப்பு சார்ந்தது என்ப‌தோடு கட்டுரையின் குறிப்பிட்ட ப‌குதியை மேர்கோள் காட்டுவதன் மூலம் அதன் உள்ளடக்கத்தை எளிதாக‌ புரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் கட்டுரைகளை அடிக்கடி பகிர்ந்து கொள்பவர்களுக்கு இந்த தளம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

பல நேரங்களில் நல்ல கட்டுரைகள் நம் கண்ணில் படாமேல் போய்விடும்.ஆனால் தீவிர வாசகர்கள் அவற்றை தேடி தேடி படித்து விடுவார்கள்.அத்தகைய வாசகர்கள் அந்த கட்டுரைகளை பகிர்ந்து கொண்டு மேலும் ப‌லர் அவற்றை படித்து பயனடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிரது கோட்.எப்எம்.

டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது.

டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான்.

காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை.

மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி அறிவை பதம் பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

டிவிட்டர் குறும்பதிவுகள் இலக்கணத்திற்கு எதிரானவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

எனவே தான் டிவிட்டருக்கு அதன் சிறப்புகளுக்கு சான்று தேவைப்படுகிறது.

எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் இத்தகைய சான்றிதழை அளித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நெக்ஸ்ட் மீடியா என்னும் தொழில்நுடப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அட்வுட் ,டிவிட்டரின் பகழ் பாடியதோடு இதுவரை டிவிட்டர் பற்றி பரவலாக கவனிக்கப்படாத ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டனார்.

டிவிட்டர் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிக்கும் பழக்கத்தையும் ,எழுதும் பழக்கத்தையும் அதிகரித்திருப்பதாக அட்வுட் கூறியுள்ளார்.

தந்தியை போல,அதற்கு முன்னர் புகை மூலம் செய்கை செய்வதை போல,சுவரெழுத்துக்கள் போல்,மரத்தில் பெயர் எழுதுவது போலவே டிவிட்டரும் என்று குறிபிட்ட அட்வுட் இந்த சிறிய வெளியீட்டு வடிவை புதுமைஆயன் முறையில் பலரும் பயனப்டுத்தி வருவதாகவும் ஸ்லாகித்துள்ளார்.

டிவிடரில் சிறுகதை எழுதுபவர்களையும் கவனித்துள்ளதாக குறிப்பிடும் அவர் ஹைகூ கவிதையும் உரைநடையும் இணைந்த கலவை என்று டிவிட்டரை வர்ணித்துள்ளார்.

இண்டெர்நெட் மற்றும் சமூக மீடியாவின் வளர்ச்சியின் பயனாக வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அட்வுட் ,எஸ் எம் எஸ் மற்றும் போன்றவை தொலைபேசி உரையாடலை குறைத்திருப்பதே இதற்கு காராணம் என்றும் கூறியுள்ளார்.

இண்டெர்நெட்ட்டை பய்னப்டுத்த வேண்டும் என்றாலே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷ்யம் என்பது அட்வுட்டின் கருத்து.சிறார்கள் மத்தியில் இண்டெர்நெட் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதும் அவரது நம்பிக்கை.

அட்வுட் சுட்டிகாட்டும் மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது.படிப்பது என்பது பாட்டு கேட்பது போல அல்ல.அது ஒரு செயல்.அதற்கு ஒரு ஈடுபாடு தேவை.ஆனால் பாட்டு கேட்பது என்பது ஒரு நிகழ்வு மட்டுமே ஆகும் என்கிறார் அட்வுட்.

ஆகே தான் டிவிட்டர் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துகிறது என்கிறார்.டிவிட்டர் குறும்பதிவுகள் மாபெரும் இலக்கியங்களாக இல்லாமல் போகலாம்.ஆனால் அடிப்படையில் அவை படிக்க வைக்கினறன.குரும்பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் இனைப்புகள் மேலும் படிக்க வைகின்றன.எனவே டிவிட்ட்டருக்கு ஜே என்கிறார் அட்வுட்.

பொதுவாக் டிவிட்டர் மொழியையும் குறிப்பாக இலக்கணத்தையும் பாழடிப்பதாக பரவலாக கருதப்படும் நிலையில் வார்த்தைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொள்பவரான அட்வுட் டிவிட்டருக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கியிருப்பது டிவிட்டர் பிரியர்களை மகிழ வைக்கும்.மற்ர்வர்களுக்கு டிவிட்டரை புரிய வைக்கும்.

(முந்தைய பதிவில் டிவிட்டரில் வாசிப்பு குழுவை துவக்கியுள்ள பென்குவின் பதிப்பக முயற்சியை எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் வரவேற்பார் என்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த வாசிப்பு குழு புத்தக வாசிப்பை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உள்ளது.டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதாக அட்வுட் கருதுவதால் இந்த முயற்சி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தானே.)