திரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்!

b2திரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். ரசிகர்கள் அந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்யலாம். எல்லாம் சரி, திரைப்பட கதாபாத்திரங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதேனும் கவனித்ததுண்டா? அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா? அந்த புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா?

இந்த கேள்விகள் உங்களுக்கு சுவாரஸ்யம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் ( @books_in_movies ) டிவிட்டர் பக்கம் உங்களை கவர்ந்திழுக்கும். ஏனெனில் இந்த டிவிட்டர் பக்கம் திரையில் தோன்றி மறைந்த புத்தகங்களை குறும்பதிவு வடிவில் அடையாளம் காட்டி வருகிறது.

திரைப்படங்களில் கதை சொல்லும் உத்தியாகவும், காட்சி அமைப்பிற்கு வலு சேர்க்கவும் பல விஷயங்கள் பயன்படுத்துவது உண்டு. இதேவிதமாக தான் திரையில் தோன்றும் பாத்திரங்கள் புத்தகம் அல்லது நாவலை வாசித்துக்கொண்டிருப்பது போல காண்பிப்பதும் வழக்கம். இந்த திரை வாசிப்பு கதையை ஒட்டியும் இருக்கலாம், அல்லது கதையுடன் நேரடியாக தொடர்பு இல்லாமாலும் அமையலாம்.சில நேரங்களில் திரையில் பாத்திரங்கள் வாசிகப்படுவது போன்ற புத்தகம் பரவலான கவனத்தை ஈர்ப்பதும் உண்டு. கபாலி படத்தின் அறிமுக காட்சியில் ரஜினி காந்த் ’மை பாதர் பாலைய்யா’ எனும் புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி கவனத்தை ஈர்த்தது இதற்கான உதாரணம். பாலச்சந்தரின் ஏக் துஜே கேலியே படத்தில் நாயகி, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மற்றும் 20 நாட்களில் தமிழ் மொழியை கற்றுக்கொள்வது எப்படி? எனும் புத்தகங்களை வாசிப்பது போல வரும்.

ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் இந்த காட்சிகளை கடந்து போய்விடுவதுண்டு. அதில் வரும் புத்தகங்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். திரை வாசிப்பை மையமாக கொண்டு ஏதேனும் சர்சசை அல்லது விவாதம் ஏற்படும் போது தான், காட்சிகளில் காண்பிக்கப்படும் புத்தகங்களை கவனிக்கத்தோன்றும்.

இவ்வாறு இல்லாமல், திரைப்படங்களில் பாத்திரங்களால் வாசிக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் கண்டறிந்து அடையாளம் காட்டும் வகையில் மேலே குறிப்பிட்ட  புக்ஸ்_இன்_மூவிஸ் டிவிட்டர் பக்கம் அமைந்துள்ளது. அபிஷேக் சுமன் எனும் திரைப்பட ரசிகர் இந்த டிவிட்டர் பக்கத்தை நடத்தி வருகிறார். திரைப்படங்களில் எந்த காட்சியில் நடிகர், நடிகையர் புத்தகம் வாசிப்பது போல வருகின்றனவோ அந்த காட்சிகளை எல்லாம் ஸ்கிரின்ஷாட் எடுத்து அதன் விவரத்தை குறும்பதிவாக பகிர்ந்து வருகிறார். எந்த படத்தில், எந்த காட்சியில் என்ன புத்தகம் வாசிக்கப்படுகிறது என்பதை இந்த குறும்பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

bநம்மூர் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச திரைப்படங்களிலும் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இப்படி படம் பிடித்துக்காட்டி வருகிறார். தில்லிவாசியான அபிஷேக் தணிக்கையாளராக பணியாற்றி வருபவர். சினிமா, புத்தகம் இரண்டிலுமே அவருக்கு ஆர்வம் அதிகம் என்கிறார். திரையில் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகம் தொடர்பாக பத்திரிகை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த கட்டுரை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரைப்புத்தகங்களை அடையாளம் காட்டும் ஆர்வம் உண்டானதாக அவர் ஸ்க்ரோல் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் தனது டிவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவல்களை பகிர்ந்து வந்திருக்கிறார். பின்னர் தான் இதற்கென்றே தனி டிவிட்டர் பக்கத்தை அமைந்த்ததாக குறிப்பிடுகிறார். இதே போலவே ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.

மற்றவர்களுடன் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத தனக்கு, திரைப்படங்களும், புத்தகங்களும் தான் தஞ்சம் அளிப்பதாக கூறும் அபிஷேக், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இந்த பக்கத்தை துவக்கியதாக கூறியிருக்கிறார். திரையில் தோன்றும் புத்தகங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக என்றே அவர் தினமும் திரைப்படம் பார்க்கிறாராம். ஏற்கனவே பார்த்த படங்களில் தோன்றிய புத்தகங்கள் நன்றாக நினைவில் இருந்தது துவக்கத்தில் இவருக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது இதற்காக என்றே படங்களை பார்க்கிறார். மற்றவர்கள் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்கிறார். புத்தகங்கள் மட்டும் அல்ல பத்திரிகை, சஞ்சிகைகள் போன்றவை வாசிக்கப்பட்டாலும் அவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்.

இதுவரை நானுறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்தில் எந்த இடத்தில் புத்தகம் வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், அந்த புத்தகத்திற்கும் காட்சிக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்கிறார் அவர். பல படங்கள் புத்தகங்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் காட்சி அமைப்பிற்கு தேவையான ஒரு பொருளாகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

எனினும் ஒரு சில படங்களில் புத்தகங்கள் காட்சி மற்றும் கதை அமைப்புடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதும் உண்டு என்கிறார். அபிஷேக்கின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தால் தினம் ஒரு புத்தகத்தை சுவாரஸ்யமான முறையில் அறிமுகம் செய்து கொள்ளலாம். புத்தக பிரியர்கள் இதை புத்தகங்களுக்கான அங்கீகாரமாக கருதலாம் என்றால், திரைப்பட பிரியர்கள் அந்த ஆர்வத்தின் அடிப்படையில் புத்தகங்களை தேடிச்செல்வதற்கான வழியாக இதை கருதலாம்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணமாகவும் இந்த பக்கம் அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக, இந்த தகவல்களை எல்லாம் கொண்ட இணையதளம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக அபிஷேக் குறிப்பிட்டுள்ளார். அதோடு திரையில் பார்த்த ஆனால் என்ன புத்தகம் என கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நூல்களுக்கான பிரத்யேக பகுதியையும் துவக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

திரைப்புத்தகங்களுக்கான டிவிட்டர் பக்கம்: @books_in_movies

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.