வெறும் பட்டன் என்றா நினைத்தாய் – 5

குடென்பர்க் சொல்லாத ரகசியம்!

reading_gravity_01

குடென்பர்க்கை நீங்கள் அறிந்திருக்கலாம். வெகுஜன ஊடகத்தின் துவக்கப்புள்ளியாக விளங்கும் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர். சரி, குடென்பர்க் வரைபடம் பற்றி தெரியுமா? வடிவமைப்பாளர்கள் பொன்விதியாக கருதும் வடிவமைப்பு கோட்பாடுகளில் இதுவும் ஒன்று.

அச்சு வடிவமைப்பாக இருந்தாலும் சரி, நவீன கால இணைய வடிவமைப்பாக இருந்தாலும் சரி, குடென்பர்க் வரைபடத்தை தான் முக்கிய வழிகாட்டுதலாக பின்பற்றுகின்றனர். வடிவமைப்பாளர்களுக்கான சங்கதி தானே என அலட்சியப்படுத்தாமல் நாமும் கூட இந்த வரைபடம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில், இணையத்தில் தகவல்களை பயன்படுத்தும் போது நம்மை அறியாமலேயே இந்த வரைப்படத்தின்படி தான் நடக்கிறோம்.

அதாவது இணைய பக்கங்களில் நம் விழிகள் ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வழக்கமாக பின்பற்றும் பாதையை அடிப்படையாக கொண்டே இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

முதலில், உங்கள் வசம் உள்ள செய்தியாளை எடுத்துக்கொள்ளவும். நாளிதழ் வாங்கும் பழக்கத்தைவிட்ட முற்றிலுமாக டிஜிட்டலுக்கு மாறியவர்கள் எனில் ஒரு நாளிதழை கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது நாளிதழை இரண்டாக மடித்து, அதை மேலும் இரண்டாக மடியுங்கள்.

இன்னும் இரண்டாக மடித்தால், நாளிதழை கக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். நமக்கு அது முக்கியம் இல்லை. இதற்கு முந்தைய வடிவில் நாளிதழை, அதாவது நான்காக மடிக்கப்பட்ட நிலையில் பாருங்கள்.

அநேகமாக, மடிக்கப்பட்ட நாளிதழின் நான்காம் பக்கம் உங்கள் கண்களில் படலாம். இல்லை என்றால் கூட, அந்த பக்கத்தை நீங்கள் திருப்பி பார்க்கலாம். பெரும்பாலும் அந்த பக்கத்தில் ஒரு விளம்பரம் இருக்கும். விஷயம் இது தான். நாளிதழ்களில் விளம்பரத்தை இடம்பெற வைக்க மிகவும் ஏற்ற இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இப்போது மீண்டும் நாளிதழை முழுவதுமாக பிரித்து பாருங்கள். அது நான்கு கட்டங்களாக தெரியலாம். முதல் கட்டத்தில் தலைப்புச்செய்தி இருக்கும். நான்காம் கட்டத்தில் விளம்பரம் இருக்கும். நாளிதழ் வடிவமைப்பு துறையில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் இது எழுதப்படாத பொன்விதி என்று தெரியும். அதாவது முக்கிய செய்தியை நாளிதழின் இடப்பக்க மேல் பகுதியில் இடம்பெற வைக்க வேண்டும். வலப்பக்க கீழ் பகுதியில் விளம்பரம் இடம்பெற வேண்டும்.

ஏன் இப்படி என்று கேட்டால், குடென்பர்க் வரைபடம் இதை தான் வலியுறுத்துகிறது.

இப்போது உங்களுக்கும் குடென்பர்க் வரைபடம் என்றால் என்ன என கொஞ்சம் பிடிபட்டிருக்கலாம். அச்சு வடிவிலான பரப்பை நான்காக பிரித்துக்கொள்வதன் மூலம் குடென்பர்க் வரைபடத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த வரைபடத்தில் முதல் பகுதி பிரதான பகுதி என அழைக்கப்படுகிறது. அதில் இருந்து அம்பு குறியால் தொடரப்படும் இரண்டவது பகுதி, வலுவான பின் தொடரும் பகுதியாக கருதப்படுகிறது. அதை தொடரும் மூன்றாவது பகுதி, பலவீனமான பின் தொடரும் பகுதி எனில், கடைசியாக உள்ளது இறுதிப்பகுதி.

பொதுவாக, நாளிதழை வாசிக்கும் எவரும் எடுத்த எடுப்பில் அதன் வலப்பக்க பகுதியை தான் பார்க்கின்றனர். எனவே தான் இது முதன்மை பகுதியாக கருதப்படுகிறது. எனவே தான் இங்கு தலைப்புச்செய்திகள் அல்லது முக்கிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கிருந்து அடுத்தப்படியாக நகரும், மேல் இடப்பக்கம் மற்றும் கீழ் வலப்பக்கம் வாசக விழிகள் பின் தொடரும் பகுதிகளாக அமைகின்றன. நிறைவாக கண்கள் நிலைக்கும் பகுதியாக கீழ் இடப்பக்கம் அமைகிறது.

இந்த நான்கு பக்கங்களுக்கு நடுவே இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. மேல் வலப்பக்கத்தை பார்க்கும் விழிகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கங்களை நோக்கினாலும், கவனத்தை ஈர்ப்பது என்னவோ, இறுதியாக உள்ள நான்காவது பக்கம் தான். இதை தான் வடிவமைப்பு உலகில் வாசிப்பு ஈர்ப்பு என்கின்றனர். அதாவது மேல் இடப்பக்கத்தில் இருந்து குறுக்கு வாக்கில் ஒரு அம்புக்குறி வரைந்தால், அது கீழ் வலப்பக்கத்தில் வந்து நிற்கும். இந்த அம்புகுறியின் திசையில் தான் வாசிப்பு ஈர்ப்பும் அமைகிறது.

இந்த வாசிப்பு ஈர்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்காக தான், கவனத்தை ஈர்க்க வேண்டிய விஷயங்களை அந்த இடத்தில் வைக்கின்றனர். வருவாய் ஆதாரமான விளம்பரத்தை கீழ் வலப்பக்கம் ஒதுக்குவது இதனால் தான். இடையே உள்ள இரண்டு பக்கங்களிலும் வாசக விழிகள் படிந்தாலும், அங்குள்ள விஷயங்கள் அத்தனை கவனத்தை ஈர்ப்பதில்லை. எனவே தான், காட்சிரீதியாக கவரக்கூடிய விஷயங்களை இந்த இடங்களில் வைத்து வாசகர்கள் உளவியலை சமன் செய்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் குறிப்பாக நாளிதழ்களில் இந்த குடென்பர்க் வரைபடம் வடிவமைப்புக்கான அடிப்படையாக அமைகிறது. இது குடென்பர்க் விதி அல்லது குடென்பர்க் கோட்பாடு என்றும் சொல்லப்படுகிறது. குடென்பர்க் பெயரால் அழைக்கப்பட்டாலும், இதற்கும் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த குடென்பர்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளிதழ் வடிவமைப்பின் முன்னோடி என கருதப்படும் அமெரிக்க வடிவமைப்பாளர் எட்மண்ட் ஆர்னால்டு (Edmond Arnold) என்பவர் இந்த கோட்பாட்டை உருவாக்கியவராக அறியப்படுகிறார்.

அச்சு ஊடக விதி என்றாலும், இணைய யுகத்திலும் இது செல்வாக்கு மிக்கதாகவே விளங்குகிறது. இணைய பக்கங்களை வடிவமைக்கும் போது, குடென்பர்க் வரைபடத்தை மனதில் கொள்கின்றனர். இணைய பக்கத்திலும் முக்கிய விஷயங்கள் மேல் இடப்பக்கத்தில் இடம்பெறுவது அவசியம். அதைவிட முக்கியம், கால் டூ ஆக்‌ஷன் என குறிப்பிடப்படும், ஒரு செயலை செய்யத்தூண்டும் வகையிலான வாங்கு பட்டன்களை கீழ் வலப்பக்கத்தில் இடம்பெற வைப்பது அதிக பலன் தரும் என்கின்றனர். இணைப்புகள், வீடியோக்களையும் வைக்கவும் இதுவே சரியான இடம்.

இணைய பக்கத்தை வடிவமைக்கும் போது, இணைவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மனதில் கொள்வது முக்கியம். இதற்கு வழிகாட்டும் முக்கிய குறிப்புகளில் ஒன்றாக குடென்பர்க் வரைபடம் விளங்குகிறது.

குடென்பர்க் வரைபடம் : https://medium.com/user-experience-3/the-gutenberg-diagram-in-web-design-e5347c172627

குடென்பர்க வரைபடத்தை உருவாக்கியவர்: http://betterposters.blogspot.com/2016/09/reading-gravity.html

தொடரின் முந்தைய பகுதி: http://cybersimman.com/2020/01/08/design-4/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.