Tag Archives: save

இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு; கொண்டாடும் இணையம்

Car-cv0W0AADWF7
இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்ட கட்டணங்கள் தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள உத்தரவு, இந்தியாவில் பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்தை செல்லாததாக ஆக்கியிருப்பதோடு, எந்த விதத்திலும் இணைய சேவைகளுக்கு உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறு வேறு கட்டண விகிதங்களை வசூலிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதன் பொருள் இணைய சேவைக்கான கட்டணம் ஒரே விதமாக தான் இருக்க வேண்டும்.

இந்த உத்தரவை தான் இணைய சமநிலை ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டிவிட்டரில் இந்த கொண்டாட்டம் குறும்பதிவுகள் பொங்கி கொண்டிருக்கின்றன.இணைய சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது போற்றப்படுகிறது. இணைய சமநிலைக்கு ஆதரவான கருத்துக்களை பிரதிபலிப்பதுடன், இந்த விவகாரத்தில் பேஸ்புக் மண்ணை கவ்விய விதத்தையும் அவை கேலி செய்து கொண்டிருக்கின்றன.

இணைய சமநிலை ஆதரவாளர்களின் மனநிலையை உணர்த்தும் குறும்பதிவுகள் #NetNeutrality எனும் ஹாஷ்டேகின் கீழ் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்திய இணையவாசிகள் மட்டும் அல்லாமல் சர்வதேச இணையவாசிகளும் இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்வத்துடன் குறும்பதிவிட்டு, இணைய சமநிலைக்கு ஆதரவான உத்தரவை வரவேற்றுள்ளனர்.

இந்த குறும்பதிவு அலைகளை பார்ப்பதற்கு முன்பாக, டிராய் உத்தரவின் சாரம்சம்,அதன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

* எந்த ஒரு இணைய சேவை நிறுவனமும் உள்ளடக்கத்தின் அடிப்ப்டையில் டேட்டாவுக்கான கட்டணத்தை பாரபட்சமான முறையில் வழங்க கூடாது.

* எந்த இணைய சேவை நிறுவனமும், பாரபட்சமான முறையில் இணைய சேவையை வழங்க யாருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது.
CasAIeZUsAA3j5d
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிராய் அமைப்பு டிபரன்ஷியல் பிரைசிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட கட்டண விகிதங்கள் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டது.மாறுபட்ட கட்டணங்கள் என்பது இணைய சேவைக்கு அவை பயன்படுத்தும் விதங்களுக்கு ஏற்ப வேறு வேறு கட்டணங்களை வழங்குவதாகும். ஒரு சில இணையதளங்களை மட்டும் டேட்டா கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கும் ஜிரோ ரேட்டிங் திட்டமும் இதன் கீழ் தான் வருகிறது.

உள்ளடக்கத்திற்கு ஏற்ப மாறுபட்ட கட்டணங்கள் முறை இணையசமநிலைக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பேஸ்புக் நிறுவனம் தனது பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மெயில் அனுப்புமாறு பேஸ்புக் தனது பயனாளிகளுக்கு கோரிக்கை வைத்தது கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் இலக்கானது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டுமே இலவசமாக வழங்கும் பிரிபேசிக்ஸ் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

இந்த விஷயத்தில் தான் டிராய் அமைப்பு இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. டேட்டா சேவைகளுக்கான பாரபட்சமான கட்டண முறைகள் தடை கட்டுப்பாடுகள்,2016 எனும் பெயரிலான அறிவிக்கையில் இது தொடர்பாக கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்ப வார்த்தைகளை விலக்கி விட்டுப்பார்த்தால், இணைய சேவைகளுக்கு எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. மாறுபட்ட கட்டணங்களுக்கு அனுமதிக்க முடியாது என கூறப்பட்டிருப்பது பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு த்டை விதிப்பதாக அமைந்துள்ளதோடு, இணைய சமநிலைக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இணையம் திறந்த வெளி தன்மை கொண்டதாகவும் ,பாரபட்சமற்ற முறையிலும் இருக்க வேண்டும் என்றும் டிராய் கூறியுள்ளது.

இணைய சமநிலை ஆர்வலர்கள் கோரி வந்ததும் இது தான். பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு எதிரான முன்வைக்கப்பட்ட வாதமும் இது தான். கட்டுப்பாட்டு அமைப்பான டிராயும் இதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருப்பது இணைய சமநிலை ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சுந்தர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, இணைய சமநிலை காக்கப்பட்டுள்ளது எனும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
CasHZvSVAAE2-Nc
இந்த மனநிலையையும், இதன் பின்னே உள்ள நிலைப்பாட்டையும் புரிய வைக்கும் டிவிட்டர் பதிவுகள் வருமாறு:

* மீடியாநாமா; டிராய் உத்தரவு இணைய சேவைகளுக்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் சாத்தியமில்லை என தெரிவிக்கிறது.

* ரெனேடா அவிலா; உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஜீரோ ரேட்டிங்கிற்கு தடை விதித்துள்ளது. துணிச்சலான இந்தியா

* கார்திக் பாலகிருஷ்ணன்; மாறுபட்ட கட்டணங்களுக்கு டிராய் தடை.இணையமாகிய நாம் சாதித்துவிட்டோம்.

* வீணா வேனுகோபால்; டிராய் இணைய சமநிலைக்கு ஆதராவாக் உத்தவு. மாறுபட்ட கட்டணங்கள் இல்லை.

* ஸ்பார்கிள்; வேலைவாய்ப்பு,கல்வி,தகவல் போலவே இணைய சமநிலையும் மக்களின் உரிமை.

* குணால் பால்; இணைய சமநிலைக்கு டிராய் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இணையத்தை சுந்திரமாக வைத்திருப்போம்.

எனும் ஹாஷ்டேகில் இவற்றை பின் தொடரலாம்.

இவை எல்லாவற்றையும் விட ஜேக்கர்ஹேக் எனும் டிவிட்டர் பயனாளியின், இந்த குறும்பதிவு மிக அழகாக இந்த போராட்டத்தின் வெற்றியை உணர்த்துகிறது; நாம் வென்று விட்டோம். #SaveTheInternet இனி #SavedTheInternet.

———–

நன்றி; யுவர்ஸ்டோரியில் எழுதியது

Menon_facebook_295

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர்.

இதனால் சிக்கல் நீடிக்கும் நிலையில் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமலே இருக்கிறது.மக்கல் நலனுக்காக பாடுபடும் ஒரு இளம் கலெகடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சோதனை தான்!.

மேனனை விடுவிக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நான் பேச்சு வார்த்த நடத்த தயார் என்று ஆர்மபத்திலேயே சுவாமி அக்னிவேஷ் அறிவித்தார்.

ஆஸ்துமா நோயாளியான மேனன் மாவேஸ்யிஸ்ட்கள் பிடியில் தவித்து கொண்டிருக்க கடத்தல் படலத்தின் காட்சிகள் முடிவில்லாமல் நீள்கிறது.

இந்நிலையில் சாமன்யர்களான நாம் மேனன் நிலை பற்றிநாளிதழ்களில் படிக்கிறோம் ,கவலைப்பொங்க பேசுகிறோம்!அவர் விடுவிக்கப்பட காத்திருக்கிறோம்.அப்படியே அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேஸ்புக் மூலம் குரலும் கொடுக்கலாமே!

இதற்காக என்றே அலெக்ஸ் பால் மேனனை விடுவியுங்கள் என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்று துவக்கப்பட்டுள்ள‌து.இதன் மூலம் நீங்களும் ஆதரவு குரல் கொடுக்கலாம்!.

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் உங்களுக்கான கணக்கு அல்லது பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம் .அதே போல குறிப்பிட்ட நோக்கத்திற்கான பக்கத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.இந்த பக்கங்களை நிறுவனங்கள் மார்க்கெட்டிங் நோக்கில் பயன்படுத்தி வருகின்றன.சமூக நோக்கிலும் இந்த பக்கங்களை பயன்படுத்தலாம்.அதாவது குறிப்பிட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவோ அல்லது குறிப்பிட்ட இலக்கிற்கு குரல் கொடுக்கவோ இது போன்ற பக்கத்தை அமைக்கலாம்.அமைத்து,பேஸ்புக்கில் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வது போலவே இந்த இலக்கிற்கான ஆதரவு திரட்டலாம்.

இதே போல தான் கலெக்டர் விடுவிக்கப்படுவதற்காக பேஸ்புக் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தபட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக் பால் மேனன் அவர்களை விடுவிக்க கோறுகிறோம் என அறிமுக பகுதியில் அறிவித்து கொள்ளும் இந்த பக்கம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஆதரவு குரல்களை கோருகிற‌து.

உங்கள் ஆதர‌வை தெரிவிப்பது எப்படி?பேஸ்புக் கலாச்சாரப்படி இந்த பக்கத்தை விரும்புவதாக (லைக் )சொல்லலாம்.இது வரை 4 ஆயிரம் பேருக்கு மேல் இப்படி ஆதரவு செய்துள்ளனர்.

இப்படி ஆதரவு தெரிவித்த பிறகு இந்த பிரச்சனை தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.அதாவது மேனன் விடுதலையை வலியுறுத்தியும் கடத்தலை கண்டித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இந்த கருத்துக்கள் ஒரு உரையாடல் போல தொடரும் போது மக்கள் மன்றத்தின் குரலாக அது ஒலிப்பதை உணரலாம்.

மேனனை விடுவிவியுங்கள் என்பதே இப்போது இளம் இந்தியாவின் குரலாக இருக்க்கிற‌து என்பது போன்ற கருத்துக்கள் இந்த பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக்கின் இலக்கணமே நண்பர்களின் நண்பர்கள் என்னும் கருத்தாக்கம் தானே எனவே இந்த விடுதலை கோரும் பக்கம் பற்றி உங்கள் பேஸ்புக் பக்கத்திலும் த‌கவல் தெரிவித்து நணப்ர்களின் ஆதரவை கோரலாம்.

இப்படி மேனன் விடுதலையை மையமாக கொண்டு கூடும் நண்பர்கள் சமூகம் இந்த பிரச்ச்னையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக கடத்தல் பேச்சு வார்த்தை தொடர்பான சமீபத்திய செய்திகளும் இந்த பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.நாளிதழ் செய்தி ,முதல்வர் பேட்டியின் யூடியூப் இணைப்பு என உயிர்போடு இந்த பக்கம் இருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பான அனைத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த பகிர்வுகள் அமைந்துள்ளன.

எல்லாம் சரி இந்த பேஸ்புக் பக்கம் மேனனை விடுவிக்க வல்லதா?இதை மாவோயிஸ்ட்கள் படித்து மனம் மாறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?அல்லது அரசு மக்கள் மனதறிந்து தனது முயற்சியை தீவிரமாக்கும் என எதிர்பார்கலாமா?

இல்லை இந்த பக்கம் மேனன் விடுதலை கோருவதற்கான தார்மீக ஆதரவு குரல் மட்டுமே.அதோடு பிரச்சனை தொடர்பான பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது.பொது மக்கள் விலகி நிற்காமல் தங்கள் குரலை ஒலிக்க செய்வதை இந்த பக்கம் உறுதி செய்கிற‌து.

அதோடு இந்த பிரச்சனை மக்கள் மன்றத்தில் பொது விவாதத்தில் இருக்கவும் வழி செய்கிற‌து.விரைவான தீர்வுக்கான குரலாகவும் இது ஒலிக்கிறது.

எப்படி பார்த்தாலும் இணைய யுகத்தில் இத்தகைய போராட்ட குரல்கள் ஒலிப்பது அவசியமானதே.

மேனன் விடுவிக்கப்பட்டார் என்ர செய்தி இந்த பக்கத்தில் விரைவில் வெளியாகட்டும்!.

மேனனுக்காக குரல் கொடுக்க:http://www.facebook.com/FreeAlexPaulMenon