புதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்!

youtube-discover-channels-channelcrawlerடிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை பெறும் முன்னணி சேனல்களும் இருக்கின்றன. இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாக கொடி கட்டிப்பறக்கின்றனர். இப்படி யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களை கண்டறிவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினால் கொஞ்சம் திண்டாட வேண்டியிருக்கும்.

யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறது தான். ஆனால் யூடியூப் வசதி வீடியோக்களை தேடுவதற்கானது என்பதால் தனிப்பட்ட சேனல்களை கண்டறிய அதிகம் உதாவது. அதிலும் பயனாளிகள் தங்கள் ரசனைக்கேற்ற சேனல்களை தேடி கண்டுபிடிக்க விரும்பினால், யூடியூப் தேடல் போதுமானதாக இல்லை என நினைக்கலாம்.

வெகுமக்களின் கவனத்தை பெறாமல் போகும் நல்ல படங்கள் போலவே, யூடியூப்பிலும் பரவலாக அறியப்படாத அருமையான சேனல்கள் அநேகம் இருக்கின்றன. இணைய உலகம் பெரும்பாலும் வைரலாக பரவும் வீடியோக்களையும், லட்சக்கணக்கில் பார்வைகளை குவிக்கும் வீடியோக்களையுமே கவனிப்பதால், நல்ல சேனல்கள் அதிக ஆதரவு இல்லாமல் வீடியோ கடலில் மூழ்கி விடுகின்றன. இப்படி யூடியூப்பில் மறைந்திருக்கும் மாணிக்கங்களை தேடி கண்டுபிடிக்க உதவுவதற்கு என்றே இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:

சேனல் கிராலர்; (https://www.channelcrawler.com/)

அறியப்படாத மற்றும் கண்டுபிடிக்கப்படாத யூடியூப் சேனல்களை எளிதாக கண்டுபிடிக்க உதவுவதாக கூறும் இந்த தளம் அதை கச்சிதமாக செய்கிறது. இந்த தளத்தில் பயனாளிகள் பல விதங்களில் யூடியூப் சேனல்களை தேடலாம். பெயர், சேனல் வகை, மொழி, நாடு போன்றவற்றை குறிப்பிட்டு அதற்கேற்ப தேடலாம். இவைத்தவிர சந்தாதாரர்கள் எண்ணிக்கை, பார்வையாளர்கள் எண்ணிக்கை, மொத்த வீடியோக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் தேடலாம். குறிப்பிட்ட தலைப்பிலான வீடியோக்களை விலக்கி விட்டு தேடும் வசதியும் இருக்கிறது. அரிதான சேனல்கலை தேடுவதோடும், புதிய சேனல்களையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.

சேனல்ஸ்ஹண்ட் (https://www.channelshunt.com/ )

சேனல் கிராலர், யூடியூப் சேனல்களுக்கான தேடியந்திரம் போல அமைந்திருக்கிறது என்றால், சேனல்ஸ்ஹண்ட், சேனல்களுக்கான வழிகாட்டியாக விளங்குகிறது. எளிமையான முகப்பு பக்கம் கொண்ட இந்த தளத்தில் யூடியூப் சேனல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு, செய்தி, இசை, கேமிங், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என நீளும் இந்த பட்டியலில் இருந்து விரும்பிய தலைப்பை தேர்வு செய்து அதில் உள்ள சேனல்களை பார்க்கலாம்.

மொத்தம் 1204 சேனல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சேனலை கிளிக் செய்தால், அவற்றுக்கான சுருக்கமான அறிமுகம் மற்றும் சந்தாதாரரகள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வகைகளில் உட்பிரிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அறிவியல் அல்லது கணிதம் தொடர்பான சேனல்கள் தேவை எனில் அதற்கான வகையில் கிளிக் செய்தால் போதுமானது. ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மத்தியில் தேடும் நிலை இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய சேனல்கள் பரிந்துரைக்கப்படுவது ஆசுவாசம் அளிக்கலாம்.

youtube-discover-channels-channelshuntபயனாளிகள் தங்கள் சேனல்களை இதில் சமர்பிக்கலாம். இதில் இமெயில் முகவரியை அளித்து சந்ததாரராகவும் இணையலாம்.

டியூப் ஸ்பார்க் (https://tubespark.com/ )

சுவாரஸ்யமான முறையில் யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள டியூப் ஸ்பார்க் உதவுகிறது. குறிப்பிட்ட பிரிவில் உள்ள ரசிகர்களை மட்டும் கவர்ந்த வீடியோக்களை இது பரிந்துரைக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது. பிடித்திருந்தால் அதை கிளிக் செய்யலாம். இல்லை எனில் அடுத்த வீடியோவுக்கு போய்விடலாம். வீடியோ பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என கை உயர்த்தி ஆதர்வு தெரிவிக்கலாம். பிடிக்கவில்லை என்றும் உணர்த்தலாம். இவை வாக்குகளாக கருதப்பட்டு இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் வீடியோக்கள் முன்னிறுத்தப்படும். ஆனால் வீடியோக்களுக்கு வாக்களிக்க உறுப்பினராக இணைய வேண்டும். உறுப்பினர் ஆகாமலேயே வீடியோக்களை பார்க்கலாம்.

சேனல் வாட்ச் (https://www.reddit.com/r/ChannelWatch/ )

இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் சமூக தளம் சார்ந்த சேவை இது. ரெட்டிட் உறுப்பினர்கள் விவாதிக்காத விஷயமே கிடையாது. ரெட்டின் உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட யூடியூப் சேனல்களை இதில் பட்டியலாக பார்க்கலாம். குறிப்பிட்ட சேனல்கள் தொடர்பான உறுப்பினர்கள் கருத்துக்களையும் படிக்கலாம். விதவிதமான சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள எளிய வழி இந்த தளம்.

சில் டிவி (https://andchill.tv/ )

சில் டிவி தளம் கொஞ்சம் புதுமையானது,. இந்த தளத்தில் பார்வை அறையை உருவாக்கி கொண்டு மற்றவர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்கலாம். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அறைகளிலும் இணைந்தும் வீடியோக்களை பார்க்கலாம். இந்த தளத்தை பயன்படுத்த பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த சேவைகள் தவிர, ஸ்மால் யூடியூபர் சோன் (http://smallyoutuberzone.com/ ) தளம் அதிகம் புகழ்பெறாத யூடியூபாளர்களை அறிமுகம் செய்கிறது.

தளம் புதிது; பயணிகளுக்கான வரைபட சேவை

இணையத்தில் வரைபடம் என்றதும் கூகுள் வரைபடம் தான் நினைவுக்கு வரும். கூகுள் வரைபடம் தவிர மேலும் பல வரைபட சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றான, சைஜிக் டிராவல் மேப்ஸ், பயணிகளுக்கான வரைபடமாக விளங்குவதாக வர்ணித்துக்கொள்கிறது. அதாவது பயணிகளுக்கு முதன்மையான விளங்க கூடிய தங்குமிடங்கள், முக்கிய இடங்கள், ரெஸ்டாரண்ட்கள், சுற்றுலா ஸ்தலங்கள் ஆகியவற்றை கச்சிதமாக அடையாளம் காட்டுகிறது. இந்த தளத்தின் மூலமே இடங்கள் பற்றிய கூடுதலான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். தேவை எனில் இதன் மூலமே பயணங்களை திட்டமிடலாம். இதில் தேடல் வசதியும் இருக்கிறது. பயனாளிகளின் இருப்பிடத்தை உணர்ந்து தளத்தில் நுழைந்ததுமே அவர்கள் வசிப்பிட பகுதி வரைபடத்தில் முன்னிறுத்தப்படுவது சிறப்பம்சமாக இருக்கிறது.

திறவுமூல அடிப்படையிலான ’ஓபன் ஸ்டிரீட் மேப்’ சேவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய முகவரி: https://travel.sygic.com/en

64884345.cms

செயலி புதிது; பாட்காஸ்ட் பத்திரிகை

ஆடியோ வடிவிலான நிகழ்ச்சிகளை இணையம் வாயிலாக கேட்டு ரசிப்பதற்கான வழியாக பாட்காஸ்டிங் அமைகிறது. அண்மையில் கூகுள் நிறுவனம் கூட பாட்காஸ்ட் செய்வதற்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்தது. பாட்காஸ்டிங் சேவைகளை வழங்கும் எண்ணற்ற சேனல்களும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தொகுத்து வழங்கும் பதிதிரிகையாக வில்சன்.பெ.எம் செயலி அறிமுகமாகியுள்ளது. ஐபோனில் செயல்படும் இந்த செயலி புதிய பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து கொள்ள வழிசெய்கிறது. இதற்கான தனித்தனி சேனல்களில் பதிவு செய்து கொள்ள வேண்டாம். தரமான நிகழ்ச்சிகளாக தேர்வு செய்து வார்ந்தோறும் பரிந்துரை செய்வதாக வில்சன் செயலி தெரிவிக்கிறது. பாட்காஸ்டிங் பிரியர்கள் முயன்று பார்க்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://wilson.fm/

தகவல் புதிது; இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் வசதி

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் அண்மையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இசையை சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேள்வி பதில் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர் மூலம், கேள்வி கேட்க அழைப்பு விடுத்து அதற்கான பதிலை அளிக்கலாம். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாடுவதற்கான சுவாரஸ்யமான வழியாக இது அமையும் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடமும் கேள்வி கேட்டு விவாதத்தையும் துவக்கலாம். புகைப்படம் அல்லது வீடியோ எடுத்த பிறகு, கேள்வி பதிலுக்கான ஸ்டிக்கர் அம்சத்தை கிளிக் செய்து இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதைப்பார்க்கும் நண்பர்கள் ஸ்டிக்கரில் கிளிக் செய்து பதில் அளிக்கலாம்.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *