வெறும் பட்டன் என்றா நினைத்தாய்-7

பட்டன் என்றால் என்ன?

powbuttபட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில் பட்டன் என்றால், எந்த ஒரு விசையையும் இயக்க கூடிய ஸ்விட்சை குறிக்கும். வழக்கமான ஸ்விட்சகளை விட, கையால் அழுத்துவதுதன் மூலம் இயக்கும் விசைகளளை பட்டன் என சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த வகை பட்டன்கள் கம்ப்யூட்டரிலும் இருக்கின்றன, கால்குலேட்டர்களிலும் இருக்கின்றன, டிவியிலும் இருக்கின்றன, டிவி ரிமோட்டிலும் இருக்கின்றன. நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் பட்டன்கள் இருக்கின்றன.

இந்த பட்டன்களுக்கான பணி ஒன்று தான். அவை எந்த வடிவிலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றுக்கு என்று குறிப்பிட்ட வடிவமைப்பு கொள்கை எதுவும் இல்லை. ஆனால் டிஜிட்டல் உலகில் இணைய பட்டன்களை இப்படி சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட முடியாது. இணைய பட்டன்களை உருவாக்குவதற்கு என்று நுட்பமான நெறிமுறைகளும், மீறப்பட முடியாத பொன்விதிகளும் இருக்கின்றன. ஒரு சிற்பி சிலையை செதுக்குவது போல, வடிவமைப்பாளர்கள் இணைய பட்டன்களை பார்த்து பார்த்து வடிவமைக்கின்றனர்.

ஏனெனில், இணைய உலகில் பட்டன்கள் மிக மிக முக்கிய அம்சமாக இருப்பது தான்.

இணையம் அல்லது டிஜிட்டல் உலகில் பட்டன் என்பது, ஒரு செயலை நிறைவேற்றுவதற்கான எளிதான வழியாக அமையும் வரைகலை கட்டுப்பாட்டு அம்சத்தை குறிக்கிறது. இணையத்தில் தேடும் போது, நாம் கிளில் செய்வதும் ஒரு பட்டன் தான். இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்க கிளிக் செய்வதும் பட்டன் தான். கோப்புகளை டவுண்ட்லோடு செய்வதற்காக நாம் கிளிக் செய்வதும் பட்டன் தான், இணைய பொருட்களை சேமிக்க கிளிக் செய்வதும் பட்டன் தான். வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புவதும் பட்டன் மூலம் தான், பேஸ்புக்கில் லைக் செய்வதும், வலைப்பதிவில் பதிப்பிப்பதும் பட்டன் மூலம் தான்.

ஆக, பட்டன் என்பது இணையத்துடன் நாம் உரையாடுவதற்கான டிஜிட்டல் கருவி. பயனாளிகளான நமக்கு பட்டன்கள் அதிகாரம் அளிக்கின்றன. அவற்றை கிளிக் செய்தால், இணையத்தில் வேலை நடக்கிறது. பொதுவாக, பட்டன் கட்டம் கட்டப்பட்ட சிறிய பெட்டி வடிவில் அமைந்திருக்கிறது. அதன் நடுவே அதற்கான செயல் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை அழுத்த வேண்டும் என தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கும். இவை எல்லாம் சேர்ந்தது தான் இணைய பட்டன்.

தொழில்நுட்ப மொழியில் விவரிக்க வேண்டும் எனில், பட்டன் என்பது, ஒரு வாய்ப்பை தேர்வு செய்ய அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்ற, உரையாடல் பெட்டியாக அமைந்துள்ள சுற்றி கோடி வரைப்பட்ட சிறிய பகுதியாகும்.

கிளிக் செய்வதன் மூலம் பயனாளி, ஒரு செயலை செய்து முடிக்க வழி செய்வது தான் பட்டனின் ஒற்றை வேலை. ஒரு இணையதளம் பல வசதிகளையும், பல அம்சங்களையும் கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் நிறைவேற்ற வழிகாட்டுவது தான் பட்டன்களின் பணி.

பட்டனை கிளிக் செய்யும் போது, முன் தீர்மானிக்கப்பட்ட செயல் நிறைவேற்றப்படுகிறது. அநேகமாக, பட்டன்கள் இல்லாமல் இணையத்தில் எதையுமே செய்ய இயலாது. அது மட்டும் அல்ல, இணையத்தின் ஆதார குணமாக கருதப்படும், தொடர்பு கொண்டு செயலை தேர்வு செய்யும் தன்மையின் அடையாளமாகவும் பட்டன் விளங்குகிறது. ஆங்கிலத்தில் இது இண்டரியாக்டிவிட்டி எனப்படுகிறது. இடைமுக விளைவு என கொள்ளலாம். இந்த இடைமுக விளைவை நிறைவேற்றுததற்கான வழியாக அமைவதால், பட்டன்கள் முக்கியமாகின்றன.

கம்ப்யூட்டர் மற்றும் இணையத்துடன் நாம் தொடர்பு கொள்ளவதற்கான இடைமுகத்தின் ஆதார அம்சமாக பட்டன்கள் விளங்குகின்றன. இடைமுகம் என்று வரும் போது, பயனாளிகளுக்கு புரியும் வகையில் இருப்பது முக்கியமாகிறது. இது பயனாளி நட்பான தன்மையாக வலியுறுத்தப்படுகிறது. இதையே வடிவமைப்பாளர்களும் தங்களுக்கான அடிப்படை கொள்கையாக கருதுகின்றனர். பட்டன் வடிவமைப்பு சார்ந்த நுட்பங்களும், விதிகளும் இதையே உணர்த்துகின்றன.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.