Tag Archives: train

மாற்று வழியில் ரெயில் டிக்கெட் அளிக்கும் செயலி

இந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியாமல் அல்லாட நேரலாம்.அல்லது காத்திருப்பு பட்டியலில் தவிக்க வேண்டியிருக்கும்.

இந்த சிக்கலுக்கான தீர்வாக ஒரு புதிய செயலியை இரண்டு பொறியில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த செயலி கொஞ்சம் புதுமையாக செயல்பட்டு டிக்கெட் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வழி செய்கிறது. அது எப்படி சாத்தியம் எனில் இந்த செயலி மாற்று வழியில் டிக்கெட்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து அவற்றை முன்பதிவு செய்ய வழிவகுக்கிறது.

இந்திய ரெயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியில் உள்ள பலரும் அறிந்திராத ஒரு சின்ன ரகசியத்தை அடிப்படையாக கொண்டு இதை சாத்தியமாக்கித்தருகிறது டிரைன் ஜுக்கட் ( ‘Ticket Jugaad’) எனும் இந்த செயலி.
பொதுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இருந்து நாம் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்திற்கான தகவலை சமர்பிக்க வேண்டும்.அதன் பின் அந்த இடத்திற்கான டிக்கெட் இருக்கிறதா எனும் தகவல் தெரிவிக்கப்படும். அதிக தேவை இருந்தால் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.

ஆனால், அதே நாளில் அதே ரெயிலில் முன்பதிவாகாத டிக்கெட்களும் இருக்கலாம் தெரியுமா? எப்படி என்றால், டிக்கெட் முன்பதிவில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்குமான ஒதுக்கீடு இருக்கிறது.எனவே நீங்கள் குறிப்பிட்ட நிலையத்தில் இருந்து பதிவு செய்யும் போது காத்திருப்பு பட்டியல் தோன்றினாலும் அதே நேரத்தில், அதே பாதையில் அந்த நிலையத்திற்கு முன்னதாக அல்லது அடுத்ததாக உள்ள ரெயில் நிலையத்தின் ஒதுக்கீட்டில் டிக்கெட்கள் காலியாக இருக்கலாம்.

இதை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த செயலி, குறிப்பிட்ட பாதையில் மாற்று ரெயில் நிலையங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா என பார்த்து அதற்கு வழி செய்கிறது.
ஒரு சில ஏஜெண்ட்கள் இந்த முறையின் மூலம் தாங்களே டிக்கெட்கள் வேறு ஏதேனும் நிலையத்தில் உள்ளனவா என கண்டறிந்து முன்பதிவு செய்து தருவதும் உண்டு. ஆனால் இதற்காக அதிக கட்டணமும் வசூலித்துக்கொள்வார்கள்.

இந்த செயலி, இத்தகைய மாற்று நிலையங்களில் டிக்கெட்களை நிலையை தேடி ஒப்பிட்டு முன்பதிவு நிலையை அளிக்க முற்படுவதால் பல நேரங்களில் காத்திருப்பு பட்டியலை தாவி குதித்துவிடலாம்.
ஐஐடி காராக்பூர் மாணவரான ரூணால் ஜாஜு தனது சகோதரர் பல்ட்வாவுடன் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

ஜாஜு ஒருமுறை மேற்குவங்கத்தின் கராக்பூரில் இருந்து சொந்த ஊரான அவுரங்காபாத்திற்கு சென்ற போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அல்லாடியிருக்கிறார். ஆனால் பயண நாளில் பார்த்தால் அதே ரெயிலில் இருக்கைகள் காலியாக இருந்திருக்கின்றன. இந்த அனுபவத்திற்கு பிறகே பலருக்கு தேவை இருக்கும் நிலையில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டிரைன் ஜுக்கட் செயலியை உருவாக்கினார். அவரது சகோதராரான என்.ஐ.டி மாணவர் இதற்கான கோடை உருவாக்கிதந்தார்.

இந்த செயலிக்காக ஸ்டார்ட் அப் போட்டியில் பரிசும் வென்றுள்ளார். ஆண்டாய்டுக்கு முதலில் அறிமுகமாகியுள்ளது. டிக்கெட் பதிவுக்கு கிளியர்டிப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இரண்டு விதமான முன் பதிவு விவரங்கள் அளிக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கான மாற்றுவழிகள் மற்றும் அங்குள்ள டிக்கெட்களை காட்டுகிறது.அதே போல ரெயில் மார்கத்தில் உள்ள மாற்று வழிகளை அதில் உள்ள நிலையங்கள் மற்றும் ரெயில் நேரங்களை காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு:https://play.google.com/store/apps/details?id=com.ticketjugaad

'Good Morning Britain' TV Programme, London, Britain. - 26 Jan 2015

நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானது தான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாட்டுக்கொண்டு அவனோடு விளையாடிக்கொண்டி வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரெயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும்,இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

f1அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என  நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் வித்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

f3இந்த சம்பவத்திற்கு பின் தான் அவருக்கு அடடா அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அவரைப்பற்றிய விவரம் யாருக்கேமும் தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இந்த பேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்ற்வர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். பேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

——–

 

விகடன்.காமில் எழுதியது; நன்றி விகடன்.காம்

ரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்

yatரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா? இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன்.

ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன.

ரெயில் பயணங்களில் எதிர்கொள்ளக்கூடிய சங்கடங்களில் , சரியான உணவு கிடைக்காமல் போவதை குறிப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இருக்கலாம். ரெயிலில் கிடைக்ககூடிய உணவில் சுவை ,சுகாதாரம் இரண்டுமே பிரச்ச்னையாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.ரெயில் நிலையங்களில் கிடைக்கும் உணவு ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இல்லாமல் போகலாம். ரெயில்வே நிர்வாகம் வழங்கும் உணவும் கூட பலருக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். சுகாதாரம் பற்றிய பிரச்சனை இல்லாவிட்டாலும் சுவையில் பிரச்சனை இருக்கலாம். சுவை திருப்தியாக இருந்தால் கூட உணவில் தேர்வுகளை எதிர்பார்க்க முடியாது.

இப்படி ரெயில் பயணங்களின் போது கிடைக்ககூடிய உணவின் சுவை மற்றும் தரம் பற்றி புகார்களும் , ஏக்கமும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் , அதற்கான தீர்வை தான் இந்த இரண்டு இணையதளங்களும் அளிக்கின்றன. டிராவ்ல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு தளங்களுமே ரெயில் பயணங்களின் போது சுவைக்ககூடிய உணவை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய உதவுகின்றன. ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செயவ்து போலவே இந்த தளங்களில், நீங்கள் பயணம் செய்யும் ரெயிலை குறிப்பிட்டு உணவை புக் செய்து கொள்ளலாம். பயண நாள், ரெயிலின் பெயர் போன்றவற்றை குறிப்பிட்டு எந்த ரெயில் நிலையத்தில் உணவு தேவை என குறிப்பிட வேண்டும். அதன் பிறகு அந்த ரெயில் நிலையம் அருகே உள்ள ரெஸ்டாரண்ட்களின் பெயர்கள் மற்றும் அவற்றில் கிடைக்ககூடிய உணவு வகைகள் காண்பிக்கப்படும். அதிலிருந்து விருப்ப்மானதை தேர்வு செய்தால் , பயனத்தின் போது குறிப்பிட்ட அந்த ரெயில் நிலையத்தில் உங்களுக்கு விருப்பமான உணவு டெலிவரி செய்யப்படும்.

பயன்படுத்திப்பாருங்கள்; http://www.travelkhana.com/travelkhana/jsp/order.jsp

https://www.yatrachef.com/