Tagged by: user

பிளாஸ்டிக் பாட்டில் தடை: டிவிட்டர் மூலம் வந்த ஆலோசனையை ஏற்ற ஆனந்த் மகிந்திரா

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழகாக உணர்த்தியிருக்கிறார். டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று அவர் தனது நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என அறிவித்து வழிகாட்டியுள்ளார். மகிந்திரா குழும தலைவரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக டிவிட்டரில் […]

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கு...

Read More »

டெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்

கம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் வைரஸ்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். வைரஸ்களில் பல ரகங்கள் இருப்பது மட்டும் அல்ல, வைரஸ்கள் போலவே வில்லங்கமான மேலும் பல மென்பொருள் சங்கதிகள் இருக்கின்றன. இவை எல்லாம் மால்வேர் என குறிப்பிடப்படுகின்றன. தீய நோக்கிலான மென்பொருள்களாக இவை அமைகின்றன. கம்ப்யூட்டர் பயனாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை இலக்காக கொண்ட தீய நோக்கிலான மென்பொருள்களே மால்வேர் என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் மேலிஷியஸ் சாப்ட்வேரின் சுருக்கமாக இது அமைகிறது. தரவுகள், சாதங்கள் மற்றும் பயனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் […]

கம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் வைரஸ்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். வைரஸ்களில் பல ரகங்கள் இருப்பது மட்டும் அல்ல,...

Read More »

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை; உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி?

பேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்திருக்கிறது. மற்றபடி பேஸ்ப்புக்கில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பெரும்பாலானோர் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், அண்மையில் வெடித்துள்ள பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை காரணமாக பலருக்கும் இப்போது தங்கள் தகவல்களும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மை புரிந்திருக்கிறது. பேஸ்புக் போன்ற தளங்களில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தரவுகளாக திரட்டப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக தனியுரிமை […]

பேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்த...

Read More »

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...

Read More »

சேர்ந்து யோசிக்கலாம் வாங்க,அழைக்கும் இணையதளம்!.

எப்போதும் யோசித்து கொண்டிருப்பவர்கள்,புதிய சேவைகள் அல்லது புதிய பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள்,அதற்கான அகினிகுஞ்சு எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள் ‘யூனிக்.லே’ தளத்தை பார்த்தால் நிச்சயம் கவரப்படுவார்கள்.உற்சாகம் அடைவார்கள்.ஊக்கம் பெறுவார்கள். காரணம் இந்த தளம் புதுமையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை எண்ணக்களை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.எண்ணங்கள் என்றால் புதுமையான எண்ணங்கள்! வளர்த்தெடுக்கப்பட்டால் புதியதொரு பொருளாகவோ அல்லது புதிய தீர்வாகவோ மாறக்கூடிய எண்ணங்கள் பலரது மனதில் இருக்கலாம் அல்லவா?அவை,புதிய நிறுவனத்தை துவக்குவதற்கான […]

எப்போதும் யோசித்து கொண்டிருப்பவர்கள்,புதிய சேவைகள் அல்லது புதிய பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள்,அதற்கான அகினிகுஞ்சு எண்...

Read More »