Tag Archives: website

இளைப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

thinஇளைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இளைக்க வைக்க உதவும் இணையதளங்களும் உள்ளன.ஆனால் தின்னர்வியூ இணையதள‌த்தை இளைக்க விரும்பும் எவரும் விரும்பக்கூடிய தள‌ம் என்று சொல்லலாம் போலிருக்கிறது.

இளைக்க நினைப்பவர்களுக்கான் இனிமையான தளம் என்றும் இதனை சொல்லலாம்.இளைப்பதற்கான ஊக்கத்தையும் உறுதியையும் வழங்குவதே இந்த தளத்தின் சிறப்பு.

பருமனாக இருக்கும் பெண்களுக்கு இளைக்க வேண்டும் என்ற ஆசையும் வேட்கையும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதற்கு தேவையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கான உறுதி தான்
பலருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.

ப‌ல‌ர் இளைக்கும் முயற்சியை உற்சாக‌மாக‌ துவ‌ங்கி தொட‌ர்ந்து மேற்கொள்ள‌ முடியாம‌ல் த‌விப்ப‌தும் உண்டு.இத்த‌கைய‌ நிலையில் ஊக்க‌ம‌ளிப்ப‌த‌ற்காக‌ என்றே நிபுண‌ர்க‌ள் ப‌ல‌ ஆலோச‌னைக‌ளை கூறுகின்ற‌ன‌ர்.உண‌வு டைரி எழுதுங்க‌ள் என்ப‌து உட்ப‌ட‌ ப‌ல‌ யோச‌னைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌.

ஆனால் இவையும் கூட‌ ம‌ன‌ உறுதி இருந்தால் ம‌ட்டுமே கைகொடுக்கும்.இந்த‌ உறுதியை இய‌ல்பாக‌வே உள்ள‌த்தில் ஏற்ப‌டுத்தி த‌ருகிற‌து தின்ன‌ர்வியூ இணைய‌த‌ள‌‌ம்.இத‌னை மிக‌வும் சுவையான்,சுல‌ப‌மான‌ முறையில் இந்த‌ தள‌ம் செய்கிற‌து.

அதாவ‌து இளைத்த‌ பிற‌கு எப்ப‌டி காட்சி அளிப்பார்க‌ள் என்னும் புகைப்ப‌ட‌த்தை காண்பித்து இளைப்ப‌த‌ற்கான‌ தூண்டுகோளை இந்த‌ த‌ள‌ம் அளிக்கிற‌து.இத‌ற்காக‌ முத‌லில் இணைய‌வாசிக‌ள் த‌ங்க‌ள் புகைப்ப‌ட‌த்தை இந்த‌ தள‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.அத‌ன்பிற‌கு டிஜிட்ட‌ல் தொழில்நுட்ப‌த்தின் மூல‌ம் புகைப்ப‌ட‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் ஒல்லியாக‌ எப்ப‌டி காட்சி த‌ருவ‌ர்க‌ள் என‌னும் தோற்ற‌த்தை புகைப்ப‌ட‌மாக‌ த‌ருகிற‌து.

தங்க‌ளை இப்ப‌டி இளைத்த‌ கோல‌த்தில் பார்ப்ப‌தே ப‌ல‌ருக்கு இளைப்ப‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ விருப்ப‌த்தை ஏற்ப‌டுத்திவிடும் அல்லவா? பின்ன‌ர் எப்போதெல்லாம் சுண‌க்க‌ம் ஏற்ப‌டுகிற‌தோ அப்போதெல்லாம் இந்த‌ ப‌ட‌த்தை பார்த்து ஊக்க‌ம் பெற‌லாம்.

உட‌ற்ப‌யிற்சியின் ப‌ல‌னை காட்சிரீதியாக‌ பார்க்க‌ முடிவ‌தைவிட‌ ப‌ய‌ன் த‌ர‌க்கூடிய‌து வேறில்லை என்னும் அடிப்ப‌டையில் இந்த‌ த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.ஆனால் க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.

——
link;
http://www.thinnerview.com/

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

gஉங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது.

வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள்.

காரணம் இந்த தள‌ம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளில் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக‌ இருக்கும்.
எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம்.

இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் மிக‌வும் உய‌ர்வான‌து என்றோ ல‌ட்சிய‌ த‌ன்மை கொண்ட‌து என்றோ கூற‌ முடியாது.ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌து. இந்த‌ தள‌த்தை உருவாக்கிய‌ ந‌ப‌ருக்கு ஜோர்க‌ன் என்னும் பெய‌ரில் ஒரு ந‌ண்ப‌ர். இருவ‌ரும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த‌ன‌ர்.அப்போது எப்ப‌டியோ ஒட்டகச்சிவிங்கி ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து.ப‌த்து ல‌ட‌ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ள் ப‌ற்றியு பேசியிருக்கின்ற‌ன‌ர்.

ஜோர்க‌ன் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேக‌ரிப்ப‌து சாத்திய‌மில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ரோ இண்டெர்நெட் இருக்கும் போது எதுவும் முடியாத‌து இல்லை என்று ந‌ம்பினார். இண்டெர்நெட் மூல‌ம் இத‌னை சாதிப்ப‌து சாத்திய‌ம் என்றே நினைத்தார்.

உட‌னே ஒன்மில்லிய‌ன் கிராபே இணைய‌த‌ள‌த்தை அமைத்து ஒட்டகச்சிவிங்கிக‌ளை வரைந்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த‌ கோரிக்கையை ஏற்று அனுப்ப‌ப்ப‌டும் ஒட்டகச்சிவிங்கிக‌ள் த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இட‌ம்பெற்று வ‌ருகிற‌து.அவ‌ற்றோடு ஒட்டகச்சிவிங்கிக‌ள் வ‌ந்த‌ க‌தையும் த‌னியே வ‌லைப்ப‌திவு ப‌குதியில் இட‌ம்பெற்றுள்ள‌து.

நீங‌க‌ளும் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியை அனுப்பி வைக்க‌லாம். ஆனால் அத‌ற்கு முன் அத‌ற‌கான‌ நிப‌ந்த‌னைக‌ளை தெரிந்துகொள்ளுங்க‌ள்.ஒட்டகச்சிவிங்கி எப்ப‌டி வேண்டுமானால் இருக்க‌லாம்.ஆனால் க‌ம்ப்யூட்ட‌ர் உத‌வியோடு உருவாக்க‌ப்ப‌ட‌க்கூடாது.கையால் வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.
இவாறாக‌ 2011 ம் ஆண்டுக்குள் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேர்க்க‌ இல‌க்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

அப்ப‌டி தான் ஜோர்க‌னிட‌ம் ச‌வால் விட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இன்டெர்நெட்டால் எதுவும் சாத்திய‌ம் என்று காட்டுவோம் வாருங்க‌ள் என‌ ஒட்டகச்சிவிங்கி த‌ள‌த்தை அமைத்த‌வ‌ர் அழைப்பு விடுக்கிறார்.ஏற்றுக்கொல்கிறிர்க‌ளா?
—-

link;
http://olahelland.net/giraffes/