ஏஐ மறுபக்கம் மற்றும் ஏஐ கால இணையதளம் ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியாகியுள்ளன.
ஏஐ மறுபக்கம், இந்து தமிழ் திசையில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகள், விமர்சனங்கள், பாதகமான அம்சங்களை அலசி ஆராயும் வகையிலான கட்டுரைகள்.
இந்த தொடரும் எழுதும் போதே, வாசகர்களிடம் இருந்து மின்னஞ்சல் மூலம் எதிர்வினைகள் வந்து கொண்டே இருந்தது. இப்போது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் நூல் வடிவம் பெற்றுள்ளது.
அட்டை வடிவமைப்பு உள்ளிட்டவை நேர்த்தியாக இருப்பதை உணரலாம்.
ஏஐ கால இணையதளம்
இரண்டாவது நூலான ஏஐ கால இணையதளம், தனியே எழுதப்பட்ட கட்டுரைகளை கொண்டது. புத்தக வடிவில் முதல் வெளியாகிறது.ஏஐ இணையதளம் ஒன்றை மையமாக கொண்டு, ஏஐ நுட்பம் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
ஜீரோ டிகிரி மூலம் வெளியாகும் என்னுடைய ஏழாவது நூல். ஏஐ வரிசையில் நான்காவது நூல். ஏற்கனவே வெளியான சாட்ஜிபிடி சரிதம் மற்றும் ஏஐ ஒரு எளிய அறிமுகம் ஆகிய இரண்டுமே, இரண்டு தனி புத்தகங்களின் தொகுப்பு என்பதால், இது ஏஐ வரிசையில் 6 வது நூல் என கொள்ளலாம்.
முந்தைய ஏஐ நூல்களை விட, இந்த இரு நூல்களிலும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை விமர்சன கண்ணோட்டத்திலேயே அணுகியிருக்கிறேன்.
ஜீரோ டிகிரி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி.
–