இல்லாத(இன்டெர்நெட்) இசைக்குழு

இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் ஆச்சர்யமான அனுபவங்க ளில் வித்தியாசமான பெயர் கொண்ட இசைக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
.
குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து விட்டு தேடல் முடிவுகளின் பட்டியலை பார்த்தால், அந்த பெயரில் (அ) வேறு ஒரு வார்த்தையுடன் சேர்ந்து இசைக்குழு ஒன்று இருப்பது தெரியவரும். சில நேரங்களில் கண் ணில்படும் இசைக்குழுவின் பெயர் அத்தனை கவித்துவமாக வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இன்னும் சில நேரங்களிலோ இசைக் குழுவின் பெயர்கள் திகைக்க வைக் கும். எப்படியோ, உலகில் இப்படி எல்லாம் இசைக்குழுக்கள் இருக்கின்ற ன

வா என்ற எண்ணம், தகவல்களை தேடும் நேரத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதே போல தான் ‘பேக்பைன்’ என்ற பெயரில் இசைக்குழு இருப்பதும் பிபிசி தளத்தின் மூலம் தெரிய வந்தது.

பேக்பைன் என்றால் ஆன்மாவின் வலி என்று வரும். ஹார்ட்பைன் என்றால் இதயவலி என்று பொருள் வரும். சோல்பைன் என்றோ ஹார்ட் பைன் என்றோ இசைக்குழு இருந் தால் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் முதுகுவலியை குறிக்கக் கூடிய ‘பேக்பைன்’ பெயரில் இசைக் குழு இருப்பது நிச்சயம் விநோதம்தான்.

பிபிசி தந்த இணைப்பு மூலமே, ‘பேக்பைன்’ இணையதளத்திற்கு தாவினால், ஒரு இசைக்குழுவுக்கே உரிய வடிவமைப்பு நேர்த்தியோடு அது நம்மை வரவேற்கிறது. இசைக் குழு உறுப்பினர்களின் மேடைக் கச்சேரி தோற்ற பின்னணியோடு, அதன் சுய அறிமுகம், சுற்றுப்பயண விவரம் போன்ற தகவல்கள் முகப்பு பக்கத்தில் மின்னிக் கொண்டிருந்தன.

அடி, இப்படி ஒரு இசைக்குழுவா, இதற்கு முன்னர் கேள்விப்பட்டதேயில் லையே என்ற எண்ணத்தோடு தகவல் களை கொஞ்சம் ஈடுபாட்டோடு படிக்கத் தொடங்கினால் திடுக்கிட்டுப் போக வேண்டியிருக்கிறது. ஆச்சர்யம் கலந்த திடுக்கிடல்.
‘பேக்பைன்’ என்பது உண்மையான இசைக்குழுவே அல்ல!

கற்பனையில் உருவாக்கப்பட்ட இல்லாத இசைக்குழு இது!
இதைவிட ஆச்சர்யம் இந்த இல்லாத இசைக்குழுவை உருவாக்கியது, பிரிட்டன் அரசு என்பதுதான்!
ஆம், பேக்பைன் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சி.
ஜலதோஷம், தலைவலியைப் போல சராசரி பிரிட்டிஷ் காரர்களை ஆட்டிப் படைக்கும் தினசரி நோய்களின் பட்டியலில் பேக்பைனான முதுகு வலிக்கும் இடமுண்டு. இதன் பாதிப்பு தீவிரத்தை குறைப்பதற்காக, இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய பிரிட்டன் அரசு வழக்கமான அலுப்பூட்டக்கூடிய பாதையில் இருந்து விலகி சுவாரஸ்ய மான வழியாக, பேக்பைன் பிரச்சாரத் திற்காக என்றே இதே பெயரில் இசைக்குழுவை உருவாக்கிவிட்டது.
“கெய்லி கிரவுச், டேவிட் பெணட், ஸ்டூப் வில்லியம்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக்குழு, 1986-க ளில் புகழின் உச்சியில் இருந்தது, இசை உலகில் பல்வேறு புரட்சியை நிகழ்த்திய இக்குழு அதன் பிறகு, எதிர்பாராத பிரச்சனையில் சிக்கித் தவிக்கத் துவங்கி, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.”

இப்படி துவங்கும் அறிமுகத்தை ஆர்வத்தோடு படிக்கும் போது, அடுத்த வரியாக, “இக்குழுவினர் முதுகு வலியால் பாதிக்கப்படலாயினர்” என்ற தகவல் வருகிறது.
தொடர்ந்து முதுகுவலி என்பது, இந்த குழுவினரை மட்டும் தாக்கிய பிரச்சனை அல்ல.

பெரும்பாலா னோரை பாதிக்கும் பிரச்சனை. 80 சதவீதம் பேர் ஏதாவது ஒரு கட்டத்தில் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்ற னர், போன்ற விவரங்கள் இடம் பெறுகின்றன.

முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்க ளில் அநேகம் பேர் உடனடியாக அதிலிருந்து விடுதலை பெற்று விடுகின்றனர் என்றாலும் பலரை அது வருடக்கணக்கில் வாட்டி எடுத்து விடுகிறது.

முதுகுவலியால் பாதிக்கப் படுபவர்க ளில் அநேகம் பேர் உடனடியாக அதிலிருந்து விடுதலை பெற்று விடுகின்றனர் என்றாலும் பலரை அது வருடக்கணக்கில் வாட்டி எடுத்து விடுகிறது.

பேக்பைன் இசைக்குழுவின் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக்கிவிட்ட னர். இப்படி படிக்கும்போது, உள்ள படியே ‘பேக்பைன்’ மீது ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆர்வம் சற்றும் குறைந்திடாத வகையில், ‘முதுகுவலி’ பற்றிய மேலும் தகவல் கள் இசைக் குழுவின ரின் அனுபவத் தின் வாயிலாகவே சொல்லப்படுகிறது.

குழுவின் பிரச்சினையை சீராக்க டேவிட் பிரவுன் என்னும் மேலாளர் அமர்த்தப்படுகிறார்.
பிரவுன் முதலில் ரொம்ப சாதாரண மாக நினைத்துக் கொண்டே இந்த பொறுப்பை ஏற்கிறார். ஆனால் மிக விரைவிலேயே அவருக்கு முதுகுவலி யின் தீவிரம் புரிந்துவிடுகிறது.

ஆக, பிரவுன் முதுகுவலி ஆய்வில் இறங்குகிறார். பிரிட்டனில் மட்டும் 20 லட்சம் பேருக்கு முதுகுவலி பாதிப்பு இருக்கிறது.முதுகுவலியால் 45 லட்சம் மணி வேலை நேரங்கள் விரயமாகின்றன. ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் முதுகுவலி தொடர்பாக நிவாரணம் பெற மருத்துவர்களை நாடி வருகின்றனர். அதோடு வேலையில் லாமல் இருப்பவர்களில் 8-ல் ஒருவர் விஷயத்தில் முதுகுவலி அவர்களை முடக்கிவிடுவதாக தெரிகிறது.

பிரவுன் தெரிந்து கொள்ளும் இந்த விஷயங்கள் நம்மையும், விழிப்புறச் செய்கிறது. முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எப்போது உடனே மருத்துவரை பார்க்கச் செல்ல வேண்டும் என்பதை யும் பிரவுனே சொல்லிவிடுகிறார்.

இசைக்குழுவுக்கு முதலில் முதுகு வலி ஏற்பட்டவிதமும், அதனால் ஏற்பட்ட தொல்லைகளையும்கூட அவர் அழகாகவே விளக்குகிறார், மற்ற உறுப்பினர்களும் தங்கள் முதுகுவலி போராட்டத்தை ஈடுபாட்டோடு சொல்கின்றனர். முதுகுவலியை முழு வதுமாக அறிந்து கொள்ள அதைவிட சுவாரஸ்யமான வழி வேறு இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

—————

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.